செங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர்
நேற்று இரவு படுக்கப்போவதற்கு முன் இவர் பெயரை நண்பர்கள் குறிப்பிடுவதைப் பார்த்தேன். அப்பாவிற்கு மிகவும் பரிச்சயமானவர், பிடித்தவர்.
தீக்ஷிதர் வீட்டுக்கு அப்பா நிறைய தடவை போயிருக்கிறார். அவர் கதாகாலட்சேபம் கேட்டது அவர் வீட்டுற்குப் போனப்பவெல்லாம் எனக்கு நான்கு ஐந்து வயது தானிருக்கும். நான் ஒரு தடவை போனப்ப அவர் வீட்டிலில்லை.
அப்ப அவர் ஒரு மிகப்பெரிய ஆளுமை. கம்பீரமான பெருத்த உருவம். அப்பா எல்லா இடங்களிலும் எடுபுடி வேலை செய்வார். தீக்ஷிதர் கதாகாலட்சேபம் பண்ண வரும் போதெல்லாம் அவருக்கு கம்பெனி கார் போகும். அதில் அவரோடு ஓரிரு தடவை அப்பா பயணித்திருக்கிறார்.
அவர் மறைந்த பிறகு ஒரு தடவை அவர் வீட்டுக்கு அப்பா ஒரு மாலை நேரத்தில் போகும் போது நானும் போயிருந்தேன். அப்ப எனக்குப் பத்து பன்னிரெண்டு வயதிருக்கும். உள்ளே மாமி பிசியாக இருந்தார்கள். வெளிய திண்ணை முன் பார்த்து விட்டு அப்பா திரும்பி விட்டார்.
அப்பா அப்போது என்னிடம் வெளியிலிருந்தே, உள்ளே ஹாலைக் காண்பித்து, அந்த ஹாலில் தான்டா அவர் கம்பீரமாக உட்கார்ந்திருப்பார், அவரோட பூஜை ரூம்ல அவர் பூஜை பண்றதைப் பார்க்கறதும், அங்கு அவர் பஜனை மற்றும் பாராயணம் பண்ணும் போதெல்லாம் பார்க்க கொடுத்து வைத்திருக்கனும்டான்னார்.
நான் அப்பாவோட சண்டை போட்டுகிட்டே திரும்பி வந்தேன். உள்ளே போகலை, வெளியேயிருந்தே வந்துட்டோம்ன்னு சண்டை. எனக்கு அதைப் பார்க்கலைன்னு ஒரே வருத்தம்.
அப்பா மிகவும் மதித்துப் போற்றிய ஒரு ஆளுமை தீக்ஷிதர். அவரது மகன் தான் விட்டல்தாஸ் ஸ்வாமிகளென்று நினைக்கிறேன்.
இன்று அப்பாவின் திதி. நேற்று அப்பா தனது 86 வயதில் மறைந்த தினம். எட்டு வருடம் ஓடி விட்டது.
அவரது நினைவு தினத்தில் அவருக்குப் பிடித்த ஒரு ஆளுமையின் பெயரைக் கேட்டதில்
வாழ்வினிது.
ओलै सिरिय ।
¡Gran personalidad!
No comments:
Post a Comment