Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Tuesday, September 27, 2022

செங்காலிபுரம் அனந்தராம தீக்‌ஷிதர்

செங்காலிபுரம் அனந்தராம தீக்‌ஷிதர்

நேற்று இரவு படுக்கப்போவதற்கு முன் இவர் பெயரை நண்பர்கள் குறிப்பிடுவதைப் பார்த்தேன். அப்பாவிற்கு மிகவும் பரிச்சயமானவர், பிடித்தவர்.

தீக்‌ஷிதர் வீட்டுக்கு அப்பா நிறைய தடவை போயிருக்கிறார். அவர் கதாகாலட்சேபம் கேட்டது அவர் வீட்டுற்குப் போனப்பவெல்லாம் எனக்கு நான்கு ஐந்து வயது தானிருக்கும். நான் ஒரு தடவை போனப்ப அவர் வீட்டிலில்லை. 

அப்ப அவர் ஒரு மிகப்பெரிய ஆளுமை. கம்பீரமான பெருத்த உருவம். அப்பா எல்லா இடங்களிலும் எடுபுடி வேலை செய்வார். தீக்‌ஷிதர் கதாகாலட்சேபம் பண்ண வரும் போதெல்லாம் அவருக்கு கம்பெனி கார் போகும். அதில் அவரோடு ஓரிரு தடவை அப்பா பயணித்திருக்கிறார்.

அவர் மறைந்த பிறகு ஒரு தடவை அவர் வீட்டுக்கு அப்பா ஒரு மாலை நேரத்தில் போகும் போது நானும் போயிருந்தேன். அப்ப எனக்குப் பத்து பன்னிரெண்டு வயதிருக்கும். உள்ளே மாமி பிசியாக இருந்தார்கள். வெளிய திண்ணை முன் பார்த்து விட்டு அப்பா திரும்பி விட்டார்.

அப்பா அப்போது என்னிடம் வெளியிலிருந்தே, உள்ளே ஹாலைக் காண்பித்து, அந்த ஹாலில் தான்டா அவர் கம்பீரமாக உட்கார்ந்திருப்பார், அவரோட பூஜை ரூம்ல அவர் பூஜை பண்றதைப் பார்க்கறதும், அங்கு அவர் பஜனை மற்றும் பாராயணம் பண்ணும் போதெல்லாம் பார்க்க கொடுத்து வைத்திருக்கனும்டான்னார்.

நான் அப்பாவோட சண்டை போட்டுகிட்டே திரும்பி வந்தேன். உள்ளே போகலை, வெளியேயிருந்தே வந்துட்டோம்ன்னு சண்டை. எனக்கு அதைப் பார்க்கலைன்னு ஒரே வருத்தம்.

அப்பா மிகவும் மதித்துப் போற்றிய ஒரு ஆளுமை தீக்‌ஷிதர். அவரது மகன் தான் விட்டல்தாஸ் ஸ்வாமிகளென்று நினைக்கிறேன்.

இன்று அப்பாவின் திதி. நேற்று அப்பா தனது 86 வயதில் மறைந்த தினம். எட்டு வருடம் ஓடி விட்டது.

அவரது நினைவு தினத்தில் அவருக்குப் பிடித்த ஒரு ஆளுமையின் பெயரைக் கேட்டதில் 
வாழ்வினிது.
ओलै सिरिय ।
¡Gran personalidad!

Thursday, June 9, 2022

ஸ்பானிஷ் கற்கும் பொழுதில் - 4

இன்னிக்கு ஸ்பானிஷ் கிளாஸ்ல தனக்குப் பிடிச்ச ஒரு பொழுதுபோக்கு பற்றி ஒரு பிரசண்டேஷன் கொடுக்கனும்.

ஒரு வாரமாக மண்டையை உருட்டி கடந்த இரண்டு நாளாக ஒரு பவர்பாயிண்ட் ஏழு பக்கத்துக்குத் தயார் பண்ணி ரெடி பண்ணி வச்சுருந்தேன்.

வகுப்புக்குப் போனால் ஒவ்வொருத்தரும் தான் நாயைக் கூட்டிகிட்டு நடக்கிறதைப் பற்றியும் டான்ஸ் ஆடுவதையும் பற்றியும் தென் அமெரிக்கப் பயணம் பற்றி அவங்கவங்க அடிச்சு விட நமக்கு மட்டும் கிலி பிடிச்சுகிச்சு. ஓரளவுக்கு இரண்டு நாளா பிரிப்பேர் பண்ணியிருந்தாலும் இவங்களிடமிருந்து வேறுபட்டு முற்றிலும் இவங்களுக்குப் புரியாத ஒரு விளையாட்டைப் பற்றி எழுதி ஏழு ஸ்லைடு போட்டு அடிச்சுவிட்டிருக்கேன்.

நம்ம வாய் கோணவாய், சும்மாயில்லாம கடைசியாக இப்படி வேற முடிச்சு வச்சுருக்கேன். எவ்வளவு மார்க் வருமோத் தெரியலை. பார்ப்போம்.

Me gusta jugar el críquet con pelota de tenis en la calle que en un estadio.

இதுல கொடுமை இன்னான்னா jugarங்கிற வார்த்தையை சரியாக உச்சரிக்காததினால் அதை பத்து தடவை சொல்ல வச்சுட்டாங்க. தொண்டையைப் பிடிச்சு கிட்டு சொல்லுன்னு தொண்டையைப் பிடிக்க வேண்டியதாகப் போச்சு. 

ஊர்ல சின்ன வயசுல முட்டி போட வச்சு வெளுத்து வாங்கின ஞாபகம் தான் வந்துச்சு.

கையில வந்து விழுந்தாலும் கப்பை விட்டுப் பழகின நமக்கு இதிலும்

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Pasatiempos!

Thursday, December 23, 2021

நினைவுகளில் புரண்டாடும் வயதில் - 15


காலனியில D line வாழ்க்கை நினைவில் மங்காமல் நின்னு போனதற்கு பலகாரணங்கள் உண்டுஅதிலொன்றுதினமும் விளையாடுவதற்கு அங்கு கிடைத்த ஒரு பெரிய பட்டாளம் தான்.


D11 வீட்டை உஷா சாகர் லல்லி காலிபண்ணிப் போன பிறகு அந்த வீட்டிற்கு P ஷண்முகம் மாமா வந்தார்அவர்மனைவிக்கு பக்கவாத நோயால் ஒரு கையிலும் காலிலும் ப்ராப்ளம் இருந்தாலும் மிக கடுமையான உழைப்பாளிஅவங்க.


அவரது பெரிய பையன் சந்திரசேகரன் சிவில் செக்‌ஷன் உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும்பின்னாட்களில்அவர் டி4லும் இருந்தார்அவர் தம்பிகள் ராஜூஜனார்பாலு (கச்சேரி), தாமோதரன் வந்த பிறகு டி லைன்கலகலப்புக்கு விளையாட்டுக்கு குறைவே கிடையாதுஜனார் அவங்கம்மாவுக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணுவான்.


மாரியம்மன் கோவில் பண்டிகை வந்தா போதும்அவங்க வீட்டுப்பின்னாடி தோட்டத்துல மாரியம்மன் மண்பொம்மை ஒன்னு வச்சு பொங்கல் வைக்கறதைச் செய்வாங்கபசங்க சேர்ந்து ரகளை நடக்கும் அங்க.


கேகே ராமன் டோர்னமண்ட் வந்ததுன்னா வீட்டு வாசல்ல எல்லோரும் கட்டை பேட் வச்சு எல்லாரும் பூபந்துவிளையாடுவோம். B line C line பசங்க எல்லோரும் டி லைன்ல தான்மனோபபுள்முரளி கே ராவ்சம்பத்(சின்னக்கன்னு தம்பிமற்றும் அவன் பிரதர்ஸ் சீனு எல்லோரும் இங்க தான் வந்து விளையாடுவாங்கஇந்தலிஸ்ட்ல இருபது முப்பது பேர் பெயருக்கு மேல எழுதனும்டி லைன் பசங்களே ஒரு பெரிய பட்டாளம்.


எங்க வீட்டு வாசல் எதிரில் ஒரு லைட் கம்பம்அது மேலே எப்போதும் ஏறி அந்த காம்பௌண்ட் சுவத்துமேலஉட்கார்றதும்நடக்குறதும்சுவர் தாண்டி எதிர் வீட்டுல குதிக்கிறதும் தினமும் நடக்கும்.


எங்களுக்கு நேரெதிர் வீடு C3 ஜெயராமன் மாமா வீடுஅவங்க வீட்டுல ராஜுண்ணாகோபுண்ணாஉமாலக்ஷ்மிக்காஒரு நாளைக்கு குறைஞ்சது 20-30 தடவையாது அந்த காம்பௌண்ட் சுவத்து மேல ஏறி அவங்கவீட்டு பின்னாடி குதிப்போம்பால் விழுந்துரும்எடுப்போம்அந்த வீட்டுல ஒருத்தர் கூட ஒன்னும் சொல்லமாட்டாங்கஆச்சரியமாக இருக்கும் எப்படி எங்களை விட்டாங்கன்னு.


எங்க வீட்டு வேலியிலிருந்து அந்த லைட் கம்பத்துக்கு கயித்தக் கட்டி கட்டைபேட்ல பால் பேட்மிண்டன்ஆடுவோம்எல்லாப் பசங்களும் ஆடுவதால விளையாட சான்ஸ் கிடைக்கிறதுக்குள்ள போதும் போதும்ன்னுஆயிடும்இதுக்கு நடுவுல கேம் தகறாருதெருவே ஜோ ஜோன்னு இருக்கும்.


அதே மாதிரி செல்வன் சகாய் வீட்டு வாசக்கம்பத்துல கயித்தக்கட்டி இன்னொரு டீம்அப்புறம் அந்த இடம் சரிவராமசகாய் வீட்டு சைடுலடி லைன் பின்னாடி லைன்ல என பல டீம் ஆடினோம்ஏதோ ஒரு இடத்துலஎல்லோருக்கும் கொஞ்சம் விளையாட சான்ஸ் கிடைக்கும்.


ஊரே சந்தோஷமாக இருந்தா கண்ணுபடற மாதிரி ஒன்னு நடக்கும்பாங்க பாருங்கஅது நடந்தது


முன்ன மேல் லைன் இறக்கத்துல சைக்கிளில் வர்றவங்க அந்த மேட்டு இறக்கத்தில் பால் டிப்போல ஆரம்பிச்சுசகாய் வீட்டு வரை ப்ரேக் பிடிக்காம சைக்கிளில் சள்ளுனு வருவாங்கநடுவுல வேகத்தடை அப்ப கிடையாதுயாரைப் பார்த்தாலும் பறந்து கிட்டு வருவாங்க அந்த இறக்கத்துல.


இந்த ரோட்டுல கயிறு கட்டி விளையாடி கிட்டிருந்த கடைசி பசங்க இந்த கேம் முடிஞ்சவுடனே ஒரு நாள்இந்தக்கயிறைக் கழட்டாமப் போயிட்டாங்கநாங்களும் வீட்டுள்ள இருந்தோம்கவனிக்கலை.


வந்தார் ஒருத்தர் வேகமாக மேல் லைன் இறக்கத்துலஇந்த ரோட்டுல கயிறு கட்டியிதைப் பார்க்காம நிமிர்ந்துவந்தவர் கயிறுல அறுபட்டு சைக்கிளிலிருந்து விழுந்து செம அடி அவருக்குவீட்டுலேர்ந்து வெளிய வந்துப்பார்த்தா அவருக்கு நெத்தியில் ரத்தக்காயம்ரத்தம் கொட்டுது


பின்னாடியே கொஞ்சம் நேரத்துல வந்த வாட்ச்கடை அந்தோணி மாமா செம ஆட்டம் ஆடிட்டார்பசங்கஅத்தனை பேர் மேலயும் சத்தம் போடஉசுரு போனா என்னடா பண்ணுவீங்கன்னுநெத்திக்குப் பதிலாககழுத்தில் பட்டிருந்தா என போட்டு வெடிச்சுத் தள்ளிட்டாருபார்த்துகிட்டு பத்து பசங்க நின்னுகிட்டுஇருந்தோம்.


அடுத்த இரண்டு மூனு நாளும் அங்க எல்லாப்பசங்களும் கயிறு கட்டி விளையாடஅந்தோணிமாமா வந்துவேணும்ன்னே நின்னு எல்லோர்ட்டையும் சத்தம் போட ஆரம்பிச்சாரு.


பக்கத்து வீட்டு கே எஸ் கிருஷ்ணன் மாமாவும் அப்பாவும் இந்த தடவை அவர்ட்ட நேரவே பேச ஆரம்பிச்சாங்கஇவ்வளவு பசங்க நம்ம வீட்டு வாசல்ல விளையாடும் போது மேலேர்ந்து வரவங்க தானே மெதுவா வரனும்பசங்கநம்ம கண் முன்னாடி விளையாடறது சேஃப்ஆபின்னாடி எங்கயோ போய் அடிபட்டு கிட்டு வரது safeன்னுபசங்களுக்குப் பரிந்து பேச அவர் இறங்கி வந்தார்அந்தோனி மாமா சித்தப்பாக்கு பக்கத்து வீடு நல்ல நண்பர்அவருக்குஅந்தோனி கோபக்காரன்டாஅவர் வரும் போது கயிற்றைக் கழற்றி விடுங்கடான்னார்அப்பா எங்ககிட்ட இனி நம்ம வீட்டு வாசல்ல கயிறு கட்டி கட்டை பேட் ஆடக்கூடாதுன்னு சொல்லராஜுவும் ஜனாரும் அதைஅவங்க வீட்டுப் பக்கம் நவுத்திகயிற்றின் ஒரு பக்கத்தை அவங்க வீட்டு வேலியிலும்கயிற்றின் இன்னொருபக்கத்துக்கு ஒரு பெரிய கல்லைக் கட்டி சுவற்றுக்கு அந்தப்பக்கம் தொங்க விட்டு ஆட்டம் ஜோராக நடக்கஆரம்பிச்சாச்சு.


கேஎஸ்கே மாமாவும் அப்பாவும் சிவில் பாலு மாமாகிட்டயும் பேபி சகஸ்ரநாமம்ட்டையும் சொல்லி டி லைன்இறக்கத்துல ஒரு பெரிய வேகத்தடையை போட வச்சுட்டாங்கஅதற்கப்புறம் மேல்லைன்லேர்ந்து யாரும்சைக்கிளில் பறந்துவர முடியாம ஆயிடுச்சு.


நாளடைவில் இந்த கட்டைபேட் கேம்களுக்கும் சீசன் மாறிடுச்சு.


பின் வரும் போஸ்ட்களில் தொடர்கிறேன்.

நினைவுகளில் புரண்டாடும் வயதில் - 14


காலனி வாழ்க்கையை அலசும் போது மற்றவர்கள் போடும் பதிவுகளிலிருந்த பல நினைவலைகள்கிளம்பிவிடுகிறதுஇன்று p b sridhar அண்ணா போஸ்ட் பார்த்ததன் விளைவு இந்த போஸ்ட்தலைவலியாகஇருந்தால் நர்ஸ் பத்மாக்கா ஆலோசனை வழங்குவார்கள்நமக்கு மருத்துவம் செய்த மற்றவர்கள் போய்சேர்ந்தாச்சுஇல்லாட்டி மனோஜ் உதவுவான்.


D13ல் மற்றும் B1ல் இருந்த காலத்தில் வீட்டில் எந்த சின்னப்பிரச்சனையானாலும் பஞ்சு சித்தப்பாவே ரிப்பேர்பண்ணிடுவார்அவருக்கு எலக்ட்ரிக்கல், plumbing work எல்லாம் அத்துப்புடிசர்வசாதாரணமாக செய்துடுவார்இல்லாட்டி பக்கத்துவீட்டு சிவில் பாலுமாமாட்ட சொன்னாப் போதும்பத்து மணிக்கு ஆள் வந்துரும்இல்லாட்டிஎங்க லைன் வழியாப் போற யாராவது ஒரு எலக்ட்ரீஷியன்ட்ட சொன்னாப் போதும் அவங்க ஆபீஸ்ல போய்சொல்லிட்டு திரும்பி வந்து ரிப்பேர் பண்ணிடுவாங்கசெம டெடிகேஷன்.


சித்தப்பா பண்றதைப்பார்த்து பார்த்து ஒரு நாள் கை துறுதுறுக்கபத்தாவது படிக்கும் போது டி லைனில்வீட்டிலிருந்த iron box வேலை செய்யாததால்அதைக் கழட்டி ரிப்பேர் பண்ணலாம்ன்னுசொருகிற வயர் plugதிறந்தேன்அது கருகியிருந்ததுசித்தப்பா செய்யற மாதிரி அந்த கருகின வயரைக் கட் பண்ணிட்டு திருப்பிஅந்த 3-pin வயர்களை இணைக்கும் போது சரியாக கவனிக்காம மாற்றி இணைச்சுட்டேன். Plug சொருகும்போது டபார்ன்னு சத்தம்ஃப்யூஸ் போயிருச்சுப்ளக் பாயிண்ட் கருகிடுச்சுசெம பயம்வீட்டுல சொன்னாஅம்மா அடி போட்டுருவாங்க!


நேரா டைம் ஆபீஸ்ல போய் ஃப்யூஸ் போயிடுச்சுன்னு சொன்னேன்மீசை விஜயன் அண்ணன் வந்தார்


நான் பத்தாவது தான் படிச்சுட்டு இருந்தாலும்மீசை விஜயன் அண்ணன்கண்ணன்கர்ணன் (  கருணாநிதி), ராபர்ட்ஸ்பிரபாகரன் மாமா (சில சமயம்உன்னி அப்பா), கல்கத்தா பாலு மாமாமுறுக்கு மீசை வச்ச மாமாஒருத்தர் 40 வீட்டுலேர்ந்து வருவார்; (ராஜமாணிக்கம்ன்னு நினைக்கிறேன்அவர் ஸ்போர்ட்ஸ் ஷார்ட்ஸ் ஷூ/சாக்ஸோடத் தான் வாலிபால் கூட ஆடுவார்இவர்களோடு என்னையும் கடைசி ஆளா ஒரு மூலையில் நிக்கவச்சு சேர்த்துப்பாங்ககல்கத்தா பாலு மாமா மூக்குப் பொடியை உறிஞ்சுகிட்டே அதே கையிலேயே பாலையும்சர்வ் பண்ணுவார்.


இந்த வாலிபால் விளையாட்டால எனக்கு விஜயன் அண்ணனோட பழக்கம் உண்டுஅவர் வீட்டுக்கு வந்து fuse boxஐயும் switch boardஐயும் பார்த்துட்டு என்னிடம் என்னடா பண்ணினேன்னார்அவர்ட்ட ஐயர்ன் பாக்ஸ்கதையைச் சொல்லி காமிச்சேன்அவர் அதைப் பிரிச்சுப்பார்த்துட்டுஏண்டா ஸ்கூல் போகுற வயசுல உனக்குஎதுக்கு இந்த வேலைஇந்த fuse box மட்டும் இல்லைன்னா நீ உசுரோடு இருந்திருக்க மாட்ட இப்பன்னார்.


ஏண்டா இதெல்லாம் நீங்க ஆபீஸ்ல வந்து சொன்னா அடுத்த நிமிஷம் வந்து நாங்கப் பண்ணித்தரமாட்டோம்உசுரு போச்சுன்னா திரும்பி வராதுடான்னார்.


இரண்டு நாள் அவர் இருக்கிற நேரம் ஸ்டாப் அசோசியேஷன் பக்கமே போகலைமூனாவது நாள் எப்போதும்போல் வாலிபால் கோர்ட்டுக்குப் போனேன்அவர் கண்டுக்கலைவிளையாட்டுல சேர்த்துக்கிட்டாங்கஎல்லாம்மறந்து போச்சு.


இனிமையான காலங்கள் அவை.