கல்லூரி நண்பனின் அப்பாவின் தினசரி முத்துக்களில் ஒன்று:
சிந்தனைத் துளிகள்
1) Never assume that loud is strong and quiet is weak!
2) "சந்தோஷம்" என்பதை எங்கும் வாங்க இயலாது.
அது நல்லதோர் வாழ்க்கை எனும் முதலீடு ஈட்டிய வட்டி!
3) அர்த்தமற்ற வார்த்தைகளை அறிவற்ற மனிதர் நடுவே உதிர்ப்பதைக் காட்டிலும், அர்த்தமுடன் அமைதி காத்தல் நலம்!
4) இன்றைய கவலைகள் இன்றைய முயற்சிக்கு முட்டுக்கட்டை மட்டுமல்ல! நாளைய மகிழ்ச்சிக்கும் தடை ஆகிறது!
5) நமது எண்ணங்களும் உணர்வுகளும் சொற்களும் செயல்களும் நம்மை சுற்றி உள்ளவரை மகிழ்விக்கும் எனில் நாம் தனியே இன்பத்தை தேடி எங்கும் பயணிக்க தேவை இல்லை!
நீதி
மனம் ஒரு ஆலயம்! அதில் கருணை எனும் இறைவன் அருளாசி புரிதல் வேண்டும்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
கனிவுடன் இனிய காலை வணக்கம்
மாதவன்
———-
படித்ததில் பிடித்தது.
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Vive tu vida en tu camino!
No comments:
Post a Comment