Saturday, February 20, 2021

உழைப்பிற்கோர் சொத்துரிமை தேவை எனில்

 நிலம் ஒன்று தேடிச் சென்றேன்
  இழந்தது என்னவோ நிலத்தையல்ல
வாழ்நாளில் தூய்மைதனை வாழ்வென்றேன்
   நிலம் கேட்டதில் மனதில் அழுக்கானேன்!

ஊருக்கு உழைப்பவனுக்கு ஊரே மனை
  உழைப்பைச் சுரண்டாதே என்பேன்
ஊருக்கு உழைத்தவனில் என் உழைப்பு
  நிலம் கேட்டதில் சுயமாய் சுரண்டலாய்ப்போனது!

சொத்து சேர்ப்பது சுயநலமாய் நிற்குமெனில்
   இருப்பிடம் சொத்தாயிருப்பது தவறாகுமோ
ஊருக்கு உழைக்கும் தியாகத்திற்கு
  நிலம் கொடுக்க வேண்டியது எவருமன்றோ!

ஆசாபாசங்களன்றி துறவு வாழத்தேவையில்லை
   உறவு வாழ உணவு நிலம் சிறிது தேடல் தவறன்று
உழைப்பைப் பருகியவரே உணர்வாராக!

உழைப்பிற்கோர் சொத்துரிமை தேவை எனில்!

ओलै सिरिय !

Saturday, February 13, 2021

கர்மவினைகள் கவலைப்படவிடுமெனில்

 
குற்றமில்லை என்று தீர்ப்பளித்து விட்டு

   குற்றத்திலிருந்து எதுவும் தப்பவில்லை எனில்

குற்றம் செய்தவர் இப்போது யாரோ!


காலம் கடத்தி தீர்ப்பளிக்க நேரமில்லை அன்று

   குற்றத்தை அங்கீகரிக்க உரிமையில்லை இன்று

காலம் கடத்திய குற்றம் இனி என்று!


கடமைதனை செய்ய மறுப்பது

   உயிர் பிழைக்க ஓடிய பொழுதில்

கொதிக்கும் உலையில் நீராய்ப்போனதன்றோ!


அம்புகளை பிடித்து ஒடுக்கும் உரிமை

   எய்த வேடனைக் காப்பாற்றவெனில்

இலக்குகள் எங்கும் நிறைந்துள்ளதோ!


மண்ணைக் காப்பது அவையின் கடமை

  அதில் நேரம் காலம் பார்ப்பது மடமை

ஜனநாயகமே மக்கள் உடமை!


கர்மவினைகள் கவலைப்படவிடுமெனில்!

Thursday, February 11, 2021

மனதுள் ஆடும் சலங்கை இந்நாள்

 
மனதிலிருப்பதைச் சொல்ல மனசில்லை

   எதையும் சொல்ல தெளிவில்லை

எழுதியதை அழிப்பதில் உசுரில்லை

   பின் கை கட்டி நிற்பதில் வீரமில்லை!


ஆத்ம சிந்தனை வலிமை தரும்

   தெளிந்த வார்த்தைகள் ஒளி தரும்

அழியாத சுரங்கம் அள்ளித் தரும்

   உள்ளார்ந்த ஈர்ப்பில் வாசம் தரும்!


என்னில் என்னை நானறியேன்

  எண்ணங்கள் என்னில் காணறியேன்

பிறர் தரும் பாசம் நானறியேன்

   உற்றார் வாசம் எனதறியேன்!


வாழ்வில் கலந்தவை பஞ்சபூதம்

  என்னுள் உறைவது அற்புதம்

பிறர்தன் ஏற்பில் அமுதபதம்

  என்றோ கிடைப்பதில் பரமபதம்!


மனதுள் ஆடும் சலங்கை இந்நாள்!

Wednesday, February 10, 2021

நினைவு நாள் ஒன்றில் இது

 

நினைவலைகளாய் மாறிப்போயினர்

  நீண்டதொரு பயணம் முடிந்து

இடைப்பட்ட ஊர்களில் 

  கொடிமரமாய் நின்றெழுந்தனர்!


வழிதடங்கள் தந்த சுமைகள் எதையும்

  ஐந்து பைசா கடவுள் தட்டில் இறக்கிடுவர்

சுமையிறங்கிய தோள்களில் சுமப்பர்

   தன் விழுதுகளின் சுமைதனை!


கொடி அசைத்து செல்லும் பாதையில்

  வழி நெடுக மரம் நட்டனர்!

கிளைகள் இன்று செழிப்பாய் வளர

  உரமாய் நின்றனர் வாழ்நாள் முழுதும்!


ஆசைதனை அளவிட்டு அகப்படாத போதும்

   இருப்பவையை அளவிடாமல் கொடுத்து

வயிற்றையும் உறவையும் போற்றி 

    ஒரு சேர்ந்து வாழ உரமிட்டனர்!


காலம் கழிந்து கடமைகள் முடிந்து

    வந்த பணி நிறைவுற்று

 உடல் விட்டு சென்றாலும்

    நீங்கா நினைவாய்ப் போயினர்!


விட்டுச்சென்ற நினைவலைகள்

   சுமையை விட கனமாய் நிற்க

நினைவு சின்னமாய்

    அவர் தந்த அழகிய தருணங்கள்!


நினைவு நாள் ஒன்றில் இது!

Saturday, February 6, 2021

தனி சுகம் தரும் ஒரு நாள்

 

கண்ணாடி ஜன்னலின் வழி வரும்

  சூரியக்கதிரின் சூடு தரும் சுகம்

பின் சூழலில் புன்னாகவராளி 

  இசை தரும் ஒரு தனி சுகம்!


உறையும் குளிரில் பகலவனின் சூடு இதம்

   லஜ்ஜையின்றி சூட்டில் உறங்கும் சுகம் தனி

வெயிலைக் கண்டு குளிரிலிறங்க

    மனமின்றி மறுக்கும் உடல் தனி சுகம்!


குளிர்கால சோம்பலில் 

    மடங்கிக்கிடக்கும் தனி சுகம் 

 கை கால் அசையாமல் 

    வாய் கொறிக்கத் தேடும் தனி சுகம்!


சோம்பலில் உழைக்க மறுக்கும்

    வலிந்த உடல் தனி சுகம்

அவையின் திசை நோக்காமல்

   வெயிலில் உறைவது தனி சுகம்!


தனி சுகம் தரும் ஒரு நாள்!