கடைசியில் வாழ்க்கையில் முதல் தடவையாக அந்த மாஜிக் ஸ்கோரைத் தாண்டி மார்க் எடுத்து ஸ்பானிஷ் 2 கோர்ஸ் முடித்தாகி விட்டது. இத்தனை வருடங்களாக தாண்ட முடியாத ஒன்றை தாண்டிய நிறைவு இன்று கிடைத்தது.
இந்த வாரத்தோடு கிளாஸ் ஆன்லைன் வெப்சைட் மூடிவிடுவார்கள். புரபசருக்கு மெசேஜ் அனுப்பி கடைசி டெஸ்ட் உடனே திருத்திக் கொடுத்தால் என்னோட கிரேடை டவுன்லோட் பண்ணிக்க முடியும்ன்னு கேட்டேன். அவங்க உடனே evaluate பண்ணி உண்மையிலேயே நான் எதிர்பார்க்காத மார்க் கொடுத்ததால் ஓவரால் கிரேட் அந்த மாஜிக் ஸ்கோரை கீழே தள்ளாமல் கொடுத்திருக்கு.
கடைசி டெஸ்ட் ரொம்பவே கடினம். சின்ன கிராமர் தப்பிற்கும் மார்க் குறைஞ்சுரும். இந்த டெஸ்ட்டில் நிறையவே சுயமாக ஸ்பானிஷில் எழுத வேண்டியிருந்தது. நிறைய உட்பகுதிகள், கேள்விகள், அதற்கு விளக்கமாக பதில் அளிக்கனும். விழி பிதுங்கிடுச்சு.
கடைசியில் ஒரு முழு பாரா போன வார இறுதியில் என்ன பண்ணினோம், எந்த கடையில் என்ன துணி என்ன கலரில் வாங்கினோம்ன்னுவெல்லாம் ஸ்பானிஷ்ல எழுதனும். போன வாரம் முழுவதும் உடம்பு சரியில்லாமல் வெளியே போக முடியவில்லை, கிளாஸ்க்கே போகலை. ஆகவே, அதையே உண்மையாக நடந்ததை அப்படியே ஸ்பானிஷில் எழுதிப் போஸ்ட் பண்ணிவிட்டேன். உடம்பு சரியில்லை, கடையில் துணி வாங்கவில்லை, அதற்கு பதிலாக மெடிசின்ஸ் வாங்கினேன் என்றே எழுதியிருந்தேன். கிராமர் மிஸ்டேக் இல்லாததால் அப்படியே எடுத்துக் கொண்டு மதிப்பீடும் கிடைச்சுருச்சு. தேவையற்ற பொய்கள் நம்பகத்தன்மையைக் குறைத்து விடும்.
ஒரு வழியாக இந்த கோர்ஸ் முடிந்தது. அந்த மாஜிக் மதில் சுவரையும் தாண்டியாச்சு.
வாழ்வினிது.
ओलै सिरिय ।
¡Curso completado correctamente!
No comments:
Post a Comment