இசை மீதான ஆசையில்
பிறரை வசை பாடும் ஓசை
தாளம் தப்பிப் போகிறது!
இசை எனும் ஓசை
அது ஓர் அமுதசுரபி
கொடுக்கும் போதே சுரக்கும்!
நடிப்பில் இசை தேடி ஓடிய பதத்தில்
இன்று ராகம் மாற்றிப் பாடுவது
வளரும் இசைக்கு வழுக்கும் ஸ்ருதியோ!
கமல் எனும் கலைஞன்
அவர் தன் கலைவாழ் அவரது ஓசையில்
அவரவர் வாழ்க்கை அவரது இசை!
இசை முன் நீ மண்டியடி
உன் வளத்தைக் ஓசையின்றி கொடுக்கும்
தாளம் தப்ப இடம் பெயராமல்!
மீட்டும் நாதத்தில் இனிமையின் சுவை
அதை உன் இசையில் வசையின்றி கொடு
கேட்போர்க்கு கிடைக்கும் நறுசுவை!
நாள் முழுவதும் தன் இசையில் என் அம்மிணி
அவள் முன் இவ்வெளி உலகு சர்ச்சை
நிலைப்பதில்லை மீட்டும் அவள் வீணையில்!
பொழுதெல்லாம் அவள் போக்கு தன் இசையில்
அவள் கவலை தன் இசையின் பயிற்சி
அதன் வளர்ச்சி தன்னிடம் பயில்பவர்களிடம்!
இசையின் மீதான ஓர் ஆசையில்!
No comments:
Post a Comment