Thursday, November 2, 2023
சுற்றிலும் சுடரும் அறிவே
Sunday, June 18, 2023
நடைபாதையில் ஒரு நாடகம்
Saturday, October 29, 2022
நமக்கான ஒரு தூண் நிற்கையில்
Friday, September 30, 2022
வெகுளியின் பொருட்டு எழும் விழுப்புண்
Sunday, September 25, 2022
தொலைத்த உறவுகள்
காலம் காட்டும் வழிப்பாதையில்
Tuesday, July 5, 2022
வானம் வண்ணங்களால் நிறைந்த பொழுதில்
Wednesday, June 22, 2022
இணையாத உலகமது நிலைக்காத கனவாய்
Thursday, June 9, 2022
கரையோரம் மூழ்கும் வீரர்கள்
நம் கரை நோக்கி பயணமாதலில்
வண்ணத்துப் பூச்சியாய் உணரும் பொழுதில்
நடைபயணமே சுமையான பொழுதில்
Thursday, May 19, 2022
பயணிகளை அறியாப் பயணமது
Saturday, March 12, 2022
வசந்தம் பிறக்குமென நிற்கையில்
Friday, March 11, 2022
நாடகமேடையில் நான் நடிகன்
அவரவர் நாடகத்தில் நானொரு கதாபாத்திரம்
தோளில் சுமக்க வலிமையும் இல்லை
உதறி விட்டுச் செல்ல மனமுமில்லை
நாடகத்தில் நடிப்பதே சுவை தான்!
ஊதுகின்ற குழலுக்குப் புரிவதில்லை
புகைந்து போன சாம்பலை எழுப்பவியல்வதை!
இற(ர)க்கமதை ஏற்க முடியா மனதில்
படியேற வழிகிடைப்பதில் தோல்வியாகுமே!
மனதிலிருந்து இறங்கும் சொற்றொடர்களில்
வாழ்வின் இரு கோடுகள் நிற்கின்றன!
தடம் அதில் ஏறிப்பயணிப்பது ரயில் வண்டியா
எதிரெதிர் கோடுகள் வாகனங்களின் தடமா!
நாடகமேடையில் எனது கோடுகள் ரயில் சிநேகமாய்!
நாடகமேடையில் வாழ்வினிது!
ओलै सिरिय ।
¡Viajes en tren!
Sunday, January 30, 2022
நாண் விடுக்கும் அம்புகள் கதை சொல்கிறது
Saturday, January 29, 2022
மூப்பு சொல்லும் பாடம்
Thursday, January 27, 2022
நீண்டதொரு ஓட்டம் கவிதை சுரக்கையில்
தை பிறந்தால் வழி பிறக்கும்
பால்ய நண்பனுக்கோ கவிதை சுரக்கும்
ஆறடி தூரத்தில் பந்து வீசியவனுக்கு
நாலடியில் கவிதை நான்மணிக்கடிகையாய்!
அன்பில் சுரக்கும் அதன் வெளிப்பாடு
தினமொரு ஆட்டமாய் வருகிறது
பால்ய தினத்தின் ஆக்கிரமம்
இன்றும் பிரதிபலிக்கும் ஆத்மபந்தத்தோடு!
நீண்ட கைகளில் உயர்ந்து விழுந்த அந்த பந்துகள்
சிதறி விழும் மூன்று சிறு தடிகளை நோக்கி
சிதறும் இன்றைய இச்சிறு கவிதை முனைப்புகள்
ஒவ்வொரு நொடியிலும் உயிர் நாடியைத் தொடும்!
நீண்டதொரு ஓட்டம் கவிதையாய் தொடரும் பொழுதில்!
ओलै सिरिय ।
அள்ளமுடியா குருவி வான்வெளியில்
Saturday, January 1, 2022
புதினம் அது ஓர் இயல்பாய் கடக்கையில்
புதினத்தில் புதிதாய் தோன்றும் எண்ணங்கள்
நாளடைவில் நினைவுகளாய் மாறிடினும்
இயல்பாய் அமைவது அலைமோதும் பணிகள்!
புதினத்தில் மனிதன் மாறுவதில்லை
மாற்றங்களே புதிதாய் திவிளைகள் போன்று
வருடம் கடக்கும் பாதையில் நம் பயணம்!
புதினத்தின் விடியலில் காலம் மாறுகிறது
காலமாற்றத்தில் படகு போல் திமிறும் நாம்
வாழ்வை இயல்பாய் வாழும் தருணத்தில்
புதின உறுதிமொழிகள் காலம் கடந்தவை!
புதினம் அது ஓர் இயல்பாய் கடக்கையில்!
வாழ்வினிது
ओलै सिरिय ।