Thursday, December 2, 2021

வாழிய நல் மனதுடன்

நினைவுகளில் திளைக்கும் நாளிது
  கை பிடித்து நடந்து வந்த பாதை
தூளியில் ஆடிடும் நினைவுகளாய்!

நடப்பனவற்றில் நல்லனவற்றையே தேடிய கை
  கால்பட மிதித்த சைக்கிளில் கடந்த தூரமது
அம்மி நகராது அழுத்தமாய் பிடித்த கையுடன்!

விண்ணில் எழும் சந்திரன் மண்ணில் தோன்றும்
  நல்லதை மட்டுமே நினைக்க வைக்கும் நம்பிக்கை
  கண்ணும் காலும் அசைந்தாலும் இடறாது!

எண்ணங்கள் வாழ்த்துகள் என்றும் இனிது
  கவலைகள் என்றும் பிறரது போலாய் கரையும்
வீசுகின்ற காற்றில் அது ஒரு இளவேனில்!

வாழிய நல் எண்ணங்களுடன் எனும் நினைவில்!

வாழ்வினிது
ओलै सिरिय ।

No comments: