Tuesday, December 14, 2021

நினைவுகளில் புரண்டாடும் வயதில் - 10


காலனியை விட்டு நாராயணன் சென்னை குடியேறிய பிறகு நான் லயோலாவில படிச்சப்ப அவனைப் போய்சித்ரா அக்கா வீட்டில் பார்த்தேன். 1984-85 க்கு அப்புறம் அவனை சந்திக்க முடியவில்லை.


சீனா கொடுத்த ஈமெயில் அட்ரஸ் மூலம் இங்கு  சங்கர் அண்ணாவைத் தொடர்பு கொண்டேன்அவர் மூலம்தான் என் அத்தை பெண் ஜெயா அக்கா போனப்பஅவங்க தோழியான ரமாக்காக்கு தகவல் கொடுக்கமுடிந்தது.


என் பையன் பூணல் முடிந்த மூனாம் மாசம் 2014 செப்டம்பர் கடைசியில் அப்பா தவறிட்டார்அவரதுஅந்திமக்காரியம் முடிந்து நாலாவது நாள் வீட்டிற்கு அம்மாவிடம் நேரில் துக்கம் விசாரிக்க நாராயணன்ரமாக்காவைக் கூட்டி வந்திருந்தான். 30 வருடம் கழித்து நாராயணனைப் பார்த்ததில் பெரிய அதிர்ச்சி எனக்குஎனக்கு பேச்சே வரலைஅம்மாவோட பக்கத்தில பேசிகிட்டு இருந்தது பட்டு மாமின்னு நினைச்சேன்அவங்கநான் தான் ரமான்னு சொல்ல எனக்கு அதுக்கு மேல அதிர்ச்சிரமாக்காகிட்ட மன்னிப்பு கேட்டுட்டுநான்உங்கம்மா தான் பேசிகிட்டு இருக்காங்கன்னு நினைச்சேன் சொன்னப்ப அவங்களுக்கு அதிர்ச்சி.

 

அதற்கப்புறம் நாராயணனோடு பழைய தொடர்பு புதுப்பெற்றுவிட்டதுஅம்மாக்கு உடம்பு சரியில்லாதப்பஅம்மாவை ஹாஸ்பிடலில் வந்து பார்த்தான்பிறகு அம்மாவோட இறுதி காரியத்திற்கும் வேகமாக வந்தான்கடைசியில் அம்மாவைப் பார்க்க முடியலை.


30 வருடத்திற்கும் மேல தொடர்பு விட்ட பிறகு கூட நம்மோடு ஒன்றாக காலனியில் வளர்ந்த எவரும் நம்மைமறப்பதில்லை என்பதை அறிவது மிகமிக மகிழ்ச்சியான ஒன்று.


MKR மாமாவைப் பற்றி நான் எழுதுவதை விட அவரை நன்கு அறிந்த மற்றவர்கள் மேலும் எழுதினால் மிகநன்றாக இருக்கும்அவர் வைதீஸ்வரா பள்ளிக்கு செய்த ஒரு முக்கியமான ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.


நமது வைதீஸ்வரா தனியார் பள்ளியானதால்எவ்வளவு தான் ஒரு தனியார் கம்பெனி பள்ளிக்கு கட்டிடங்கள்கட்டிநிர்வகித்துஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கு குடியிருப்பும் கொடுத்து பராமரித்து வந்தாலும்ஒருதனியார் கம்பெனியின் பார்வையில் அந்தப் பள்ளி ஆசிரியர்களுக்கும் சம்பளம் கொடுத்துப் பராமரித்து வருவதுஅது ஒரு சுமைஎம்ப்ளாயீஸ்க்கு VRS கொடுத்து அனுப்புவது போல்அந்த சுமையைக் கழட்டி விடத்தயங்கமாட்டார்கள்.


அத்தகைய தருணத்தில் MKR மாமாவும் அவருக்கு முன்பு அந்த பதவியிலிருந்தவரும் கம்பெனி நிர்வாகத்திற்குசில பிரபலமான அரசியல்வாதிகளின் தொடர்பை வைத்துஅந்த காலத்தில் இந்த தனியார்ப்பள்ளிஆசிரியர்களுக்கு அரசு சம்பளம் கிடைக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வைத்துஅரசு DEO மேற்பார்வையில் கொண்டு வரவைத்து ஆசிரியர்கள் அரசு சம்பளப்பட்டியலில் வந்து இன்று அந்தப்பள்ளியின்எல்லா ஆசிரியர்களுக்கும் பென்ஷன் கிடைக்க வழி வகுத்து விட்டதுஇது ஒரு சிறந்ததொரு திட்டம் அவரதுகாலத்தில் நடந்ததுபால்வடிவு மாமா இங்கு வந்தபோது கூட இதை நான் குறிப்பிட்டேன்.


இதைப்பற்றிய நன்கு விவரம் அறிந்தவர்கள் மேலும் தனியாக எழுதலாம்என் மாமி சரஸ்வதி டீச்சர் கூட கடைசிகாலத்தில் ரொம்ப பெருமையாக சொல்வாங்கஸ்கூல்ல வாங்கின சம்பளத்தோட இந்த பென்ஷன் பணம்அதிகமாக வருதுஉண்மையிலேயே மேட்டூர் கெமிக்கல்ஸ் செய்த ஒரு நல்லகாரியம்ன்னு சொல்வாங்க!


காலனி வாழ்க்கையை அசை போடுவதில் அதன் முக்கியபாத்திரங்களை நினைவு கூர்வது எனக்கு மிகஇனிமையானது.

No comments: