Friday, December 10, 2021

நினைவுகளில் புரண்டாடும் வயதில் - 7

காலனி வாழ்க்கையில ஒவ்வொருத்தருக்கும் ஏதோ ஒரு ஹீரோ மற்றும் ஹீரோயின் மிகப்பிடித்தமாக இருப்பாங்க! இல்லாமலிருப்பது குறைவாகத்தானிருக்கும்.

அப்பாவோட ஹீரோ செகரெட்டரி நடராஜன் மாமா. அவரோட ஆளுமை, கம்பீரம், துணிச்சல், நிர்வாகத்திறமையெல்லாம் அப்பாக்கு அவர் மேல ஒரு விலைமதிக்க முடியாத பிடிப்பா போயிடுச்சு. அதற்காக எப்போதும் தன்னோட ஆதர்ச ஹீரோ எங்க போனாலும் கூடவே போய் எடுபுடி வேலைகளெல்லாம் செய்யத் தயங்கியதில்லை. அதனால் எங்க குடும்பம் பெற்ற பலன்களும் அதிகம். எல்லாவற்றில் அப்பாவோட கடினமான உழைப்பு இருக்கும். இவையெல்லாம் பிறிதொரு நாளில் நேரம் வரும் போது தேவைப்படும் போது எழுதுகிறேன்.

என்னோட ஹீரோ எங்க D லைன் பக்கத்து வீட்டு சுந்தரராமன் அண்ணா தான். நாங்க டி13ல இருக்கும் போது அவர் டி15. அவர் வீட்டுல உள்ள எல்லோரும் இன்று வரை மிக நெருக்கமானவர்களே! 

சுந்தரராமன் அண்ணாவோட கம்பீரம், மென்டல் ஸ்ட்ரென்த், குடும்ப உறவுகளின் மீதான அளவுகடந்த பாசம், ஸ்டாஃப் அசோசியேஷன்ல அவர் விளையாடற எல்லா கேம்லையும் அவர் வாங்கின முதல் பரிசுகள் எல்லாம் பார்த்து எனக்கு அவர் மேல் மிகுந்த ஈர்ப்பு உண்டு. இன்று வரை அவர் தான் என்னோட ஹீரோ!

டி லைன்ல இருக்கும் போது தான் அவர் அண்ணா ஜெயராமன் அண்ணாக்கு உஷாமன்னியோட தாராபுரத்துல கல்யாணம். நானும் எல்லோருடனும் அந்த கல்யாணத்துக்கு தாராபுரம் போனேன். என் அம்மா மற்றும் செல்லையா மாமா (KVS)க்கும் தாராபுரம் பக்கத்துல கொளிஞ்சிவாடியில் உறவினர்கள் உண்டு. அங்கும் போனோம். அது பக்கத்திலுள்ள கே வில்லேஜஸ் என்றழைக்கப்படும் கிராமங்களில் ஒன்றான காரத்தொழுவு அம்மா மாமாவோட பூர்வீகம். அதற்கு பக்கத்துல இருக்கும் கிராமமான கணியூரிலிருந்து தான் நம்ம காலனிக்கும் ராமன் நகருக்கும் கணியூர் சாஸ்திரிகள் வந்தார். அம்மாக்கு தன்னோட கிராமத்து பக்கம் தாராபுரம் பக்கத்துலேர்ந்து உஷா மன்னி வந்தது ரொம்பவே சந்தோஷம்.

சுந்தரராமன் அண்ணாக்கு சுந்தரி மன்னியோட கல்யாணம் ஆன பிறகு B lineல் அந்த கடைசி வீடு மலைப்பாதை ஏறும் முன்னிருக்கிற வீட்டிற்குப் போனார். 

சுந்தரராமன் அண்ணா டென்னிஸ் விளையாடறதைப் பார்க்கிறதே ஒரு கண்கொள்ளாக் காட்சி. அவர் சர்வீஸ் போடும் போது எத்தனை ace ball போடறார்ன்னு அந்த டென்னிஸ் ஓரத்திட்டுல உட்கார்ந்து பார்த்துகிட்டு இருப்பேன்.

எனக்கு அந்த டென்னிஸ் கோர்ட் என்ட்ரன்ஸ்ல இருக்கிற திட்டுதான் என்னோட ஆஸ்தான ப்ளேஸ். 5 வயதிலிருந்து 15 வயது வரை அங்கதான். அதற்கு காரணமுண்டு. 

அப்பா லேடிஸ் கிளப் வாசல்ல உள்ள ஆபீஸில் வேலை செய்து கிட்டு இருப்பார். நான் அங்கு படியிலோ அல்லது கீழ மண்ணுலையோ விளையாடிகிட்டு இருப்பேன். மாலை 5 1/2-6 மணிக்கு அப்பா கூப்பிட்டு இப்ப செகரெட்டரி, சேஷசாயி, ஜெயராமன் (C A) மாமாவெல்லாம் வர்ற நேரம். இங்க இருக்கக்கூடாது போ; போய் கை கால் அலம்பிகிட்டு வான்னு அனுப்பிடுவார். வேற வழியில்லாம வீட்டுக்கு வந்து கை கால் அலம்பினா, அம்மா ரெடியா சுடச்சுட பக்கோடாவோ, முள்ளு முருக்கோ அல்லது பூரி மசலாவோ ஏதோ ஒன்னு இரண்டு மூன்று நாளைக்கொருதரம் இருக்கும். 

பக்கோடா முறுக்கு எல்லாம் டைரெக்டா போட்டிருக்கிற அரைகால் ட்ராயரின் இரண்டு பக்கமும் நிரப்பிகிட்டு டென்னிஸ் கோர்ட் திட்டுக்கு வந்துருவேன். திட்டுமேல உட்கார்ந்து கிட்டு ஒவ்வொன்னா தின்னுகிட்டு, சுந்தரராமன் அண்ணா, புதுக்கோட்டை சுப்பிரமணியன், கே சி சொக்கலிங்கம், ASD, சூரி மாமா எல்லாம் A courtல விளையாடறதைப் பார்க்கிறது செம ஜாலியாக இருக்கும். இவர்களுக்கெல்லாம் நான் பத்து வருட ஆடியன்ஸ். என் வயது ஒத்த பலர் இவ்வாறு உட்கார்ந்து பார்ப்போம்.

டி சேஷசாயி மாமா வரும் போது திட்டுல உட்காரமாட்டேன், எழுந்து பின்னாடி போய் நிப்பேன், பயம் மற்றும் மரியாதை. அவர் வந்து விளையாடும் போது இந்த மெகாப்ப்ளேயர்ஸே கொஞ்சம் இறங்கி வந்து ஆடுவாங்க. அவர் ஒரு கையில சிகரெட் வச்சுகிட்டே ஆடற ஒரு stylishness , ஒரு மெஜஸ்டிக் கிங் வந்து ஆடற மாதிரி இருக்கும். அப்பா, மாமா சித்தப்பாக்கெல்லாம் இவர் மேல் அளவுகடந்த மரியாதை. அது obvious ஆக எங்கள் கண்ணுக்குத் தெரிவதால் அந்த மரியாதை எங்களுக்கும். அவர் விளையாடும் போது டென்னிஸ் கோர்ட் திட்டுல உட்காரமாட்டேன், நின்னுகிட்டு பார்ப்பேன்.

சுந்தரராமன் அண்ணாவும் புதுக்கோட்டை சுப்ரமணியன் மாமாவும் ஆடற அந்த ஆக்ரோஷமான சிங்கிள்ஸ் மேட்செல்லாம் பார்க்கிறவங்க கண்ணுக்கு delight. K C Chokkalingam மாமா ஆடும் போது அவர் பாலை chop பண்றதும் ஸ்பின் பண்றதும் கேமின் பரிணாமத்தையே மாற்றிடும். சூரி மாமா இவங்க ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாம ஒவ்வொரு missக்கும் அவர் கொடுக்கிற expressions, ஓன்னு அவர் சத்தமா சிரிச்சுக்கிட்டே தான் அவங்களோட compete பண்றது ஈசி இல்லைன்னு சொல்ற விதமெல்லாம் மறக்க முடியாது.

தவக்களை ரத்தினம் மாமா டென்னிஸ் விளையாட வந்தா பசங்க எல்லோரும் அவர் பண்ற மிமிக்ரிக்காக ஒன்னா கூடிருவோம். இன்னும் எழுத வேண்டிய பல டென்னிஸ் வீரர்கள் பெயர் எழுதனும். அது எல்லாம் தனி ஸ்டோரி: ஏ என் ராமகிருஷ்ணன், ராஜ்குமார், குள்ள காவஸ்கர் கோவிந்தராஜன், அலெக்ஸ், அவர் அண்ணன் ஸ்டீபன் என ஒரு பெரிய லிஸ்டே இருக்கு.

ஸ்டாஃப் அசோசியேஷன் விளையாட்டு மைதானங்கள் ஒவ்வொன்னொத்துக்கும் ஒரு ஸ்டோரி வரையலாம். அது ஒவ்வொன்னிலும் சுந்தரராமன் அண்ணாவோட முத்திரை இருந்துகிட்டே இருக்கும்.

இன்னும் மேலப்பிடிச்சது அவர்ட்ட 45 வயசுக்கு மேலயும் படிப்பை விடாம அவரும் பக்கத்து வீட்டு எஸ் ராஜு அண்ணாவும் தினமும் ஆபீஸ்லேர்ந்து சீக்கிரம் வந்து மாலை 4 மணிக்கு சேலம் பஸ் பிடிச்சு கருப்பூர் இன்ஜினியரிங் காலேஜில் part time BE பண்ணி அதைக் கம்ப்ளீட் பண்ணியதெல்லாம் என் கண் முன்னே பார்த்த இந்த இருவரின் சாதனைகள். இந்த வயசான காலத்துல படிக்கிறதைப்பத்தி s raju அண்ணா அடிச்ச கமெண்டெல்லாம் நினைச்சா சிரிப்பா வரும்.

பிற்காலத்தில் சுந்தர்ராமன் அந்த பேஃக்டிரிக்கே GM ஆக வந்து இருந்து ரிடையர் ஆனது எங்களுக்கெல்லாம் ரொம்பவே பெருமையாக இருந்தது.

என் அம்மா இவர் GM ஆனதை ரொம்பவே பெருமையாக கடைசி காலத்துல கூட சொன்னாங்க. அது அப்பேற்ப்பட்ட சேஷசாயி, C P சாரநாத் எல்லாம் இருந்த அவ்வளவு பெரிய போஸ்ட் அது. அதுல நம்மாத்துப் பையன் சுந்தரராமன் இருந்தது எவ்வளவு பெருமை தெரியுமாடான்னாள்.

இதோட reciprocal இன்னும் இன்ட்ரஸ்டிங்க். அம்மாவோட அந்திமக்காரியத்திற்காக காலையில அம்மா bodyயை காலையில 7.30 மணி வாக்குல வாங்குறேன். காலை 7.45 மணிக்கு சுந்தரராமன் அண்ணா டெல்லியிலிருந்து எனக்கு போன் பண்ணினார் துக்கம் விசாரிக்க. 

போன்ல நான் சுந்தர் மாமா டெல்லியிலேருந்து பேசறேன்னார். யார் சுந்தர் மாமான்னு கேட்டேன். பேசறது சந்தர் தானேன்னார். ஆமான்னேன். நான் பக்கத்தாத்து சுந்தர்ராமன் பேசறேன்டான்னார். துக்கம் விசாரித்து வருத்தம் தெரிவித்தார்.

காலனி மக்களைப் பற்றி நினப்பதே ஒரு இனிமையான அநுபவம்.

மற்றவைகள் இன்னொரு போஸ்டில்!

வாழ்வினிது
ओलै सिरिय ।

No comments: