காலனியில D line வாழ்க்கை நினைவில் மங்காமல் நின்னு போனதற்கு பலகாரணங்கள் உண்டு. அதிலொன்றுதினமும் விளையாடுவதற்கு அங்கு கிடைத்த ஒரு பெரிய பட்டாளம் தான்.
D11 வீட்டை உஷா சாகர் லல்லி காலிபண்ணிப் போன பிறகு அந்த வீட்டிற்கு P ஷண்முகம் மாமா வந்தார். அவர்மனைவிக்கு பக்கவாத நோயால் ஒரு கையிலும் காலிலும் ப்ராப்ளம் இருந்தாலும் மிக கடுமையான உழைப்பாளிஅவங்க.
அவரது பெரிய பையன் சந்திரசேகரன் சிவில் செக்ஷன் உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். பின்னாட்களில்அவர் டி4லும் இருந்தார். அவர் தம்பிகள் ராஜூ, ஜனார், பாலு (கச்சேரி), தாமோதரன் வந்த பிறகு டி லைன்கலகலப்புக்கு விளையாட்டுக்கு குறைவே கிடையாது. ஜனார் அவங்கம்மாவுக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணுவான்.
மாரியம்மன் கோவில் பண்டிகை வந்தா போதும், அவங்க வீட்டுப்பின்னாடி தோட்டத்துல மாரியம்மன் மண்பொம்மை ஒன்னு வச்சு பொங்கல் வைக்கறதைச் செய்வாங்க! பசங்க சேர்ந்து ரகளை நடக்கும் அங்க.
கேகே ராமன் டோர்னமண்ட் வந்ததுன்னா வீட்டு வாசல்ல எல்லோரும் கட்டை பேட் வச்சு எல்லாரும் பூபந்துவிளையாடுவோம். B line C line பசங்க எல்லோரும் டி லைன்ல தான். மனோ, பபுள், முரளி கே ராவ், சம்பத்(சின்னக்கன்னு தம்பி) மற்றும் அவன் பிரதர்ஸ் சீனு எல்லோரும் இங்க தான் வந்து விளையாடுவாங்க. இந்தலிஸ்ட்ல இருபது முப்பது பேர் பெயருக்கு மேல எழுதனும். டி லைன் பசங்களே ஒரு பெரிய பட்டாளம்.
எங்க வீட்டு வாசல் எதிரில் ஒரு லைட் கம்பம். அது மேலே எப்போதும் ஏறி அந்த காம்பௌண்ட் சுவத்துமேலஉட்கார்றதும், நடக்குறதும், சுவர் தாண்டி எதிர் வீட்டுல குதிக்கிறதும் தினமும் நடக்கும்.
எங்களுக்கு நேரெதிர் வீடு C3 ஜெயராமன் மாமா வீடு. அவங்க வீட்டுல ராஜுண்ணா, கோபுண்ணா, உமா, லக்ஷ்மிக்கா. ஒரு நாளைக்கு குறைஞ்சது 20-30 தடவையாது அந்த காம்பௌண்ட் சுவத்து மேல ஏறி அவங்கவீட்டு பின்னாடி குதிப்போம், பால் விழுந்துரும், எடுப்போம், அந்த வீட்டுல ஒருத்தர் கூட ஒன்னும் சொல்லமாட்டாங்க. ஆச்சரியமாக இருக்கும் எப்படி எங்களை விட்டாங்கன்னு.
எங்க வீட்டு வேலியிலிருந்து அந்த லைட் கம்பத்துக்கு கயித்தக் கட்டி கட்டைபேட்ல பால் பேட்மிண்டன். ஆடுவோம். எல்லாப் பசங்களும் ஆடுவதால விளையாட சான்ஸ் கிடைக்கிறதுக்குள்ள போதும் போதும்ன்னுஆயிடும். இதுக்கு நடுவுல கேம் தகறாரு. தெருவே ஜோ ஜோன்னு இருக்கும்.
அதே மாதிரி செல்வன் சகாய் வீட்டு வாசக்கம்பத்துல கயித்தக்கட்டி இன்னொரு டீம். அப்புறம் அந்த இடம் சரிவராம, சகாய் வீட்டு சைடுல, டி லைன் பின்னாடி லைன்ல என பல டீம் ஆடினோம். ஏதோ ஒரு இடத்துலஎல்லோருக்கும் கொஞ்சம் விளையாட சான்ஸ் கிடைக்கும்.
ஊரே சந்தோஷமாக இருந்தா கண்ணுபடற மாதிரி ஒன்னு நடக்கும்பாங்க பாருங்க. அது நடந்தது.
முன்ன மேல் லைன் இறக்கத்துல சைக்கிளில் வர்றவங்க அந்த மேட்டு இறக்கத்தில் பால் டிப்போல ஆரம்பிச்சுசகாய் வீட்டு வரை ப்ரேக் பிடிக்காம சைக்கிளில் சள்ளுனு வருவாங்க. நடுவுல வேகத்தடை அப்ப கிடையாது. யாரைப் பார்த்தாலும் பறந்து கிட்டு வருவாங்க அந்த இறக்கத்துல.
இந்த ரோட்டுல கயிறு கட்டி விளையாடி கிட்டிருந்த கடைசி பசங்க இந்த கேம் முடிஞ்சவுடனே ஒரு நாள்இந்தக்கயிறைக் கழட்டாமப் போயிட்டாங்க. நாங்களும் வீட்டுள்ள இருந்தோம். கவனிக்கலை.
வந்தார் ஒருத்தர் வேகமாக மேல் லைன் இறக்கத்துல. இந்த ரோட்டுல கயிறு கட்டியிதைப் பார்க்காம நிமிர்ந்துவந்தவர் கயிறுல அறுபட்டு சைக்கிளிலிருந்து விழுந்து செம அடி அவருக்கு. வீட்டுலேர்ந்து வெளிய வந்துப்பார்த்தா அவருக்கு நெத்தியில் ரத்தக்காயம், ரத்தம் கொட்டுது.
பின்னாடியே கொஞ்சம் நேரத்துல வந்த வாட்ச்கடை அந்தோணி மாமா செம ஆட்டம் ஆடிட்டார். பசங்கஅத்தனை பேர் மேலயும் சத்தம் போட, உசுரு போனா என்னடா பண்ணுவீங்கன்னு, நெத்திக்குப் பதிலாககழுத்தில் பட்டிருந்தா என போட்டு வெடிச்சுத் தள்ளிட்டாரு. பார்த்துகிட்டு பத்து பசங்க நின்னுகிட்டுஇருந்தோம்.
அடுத்த இரண்டு மூனு நாளும் அங்க எல்லாப்பசங்களும் கயிறு கட்டி விளையாட, அந்தோணிமாமா வந்துவேணும்ன்னே நின்னு எல்லோர்ட்டையும் சத்தம் போட ஆரம்பிச்சாரு.
பக்கத்து வீட்டு கே எஸ் கிருஷ்ணன் மாமாவும் அப்பாவும் இந்த தடவை அவர்ட்ட நேரவே பேச ஆரம்பிச்சாங்க. இவ்வளவு பசங்க நம்ம வீட்டு வாசல்ல விளையாடும் போது மேலேர்ந்து வரவங்க தானே மெதுவா வரனும், பசங்கநம்ம கண் முன்னாடி விளையாடறது சேஃப்ஆ, பின்னாடி எங்கயோ போய் அடிபட்டு கிட்டு வரது safeன்னுபசங்களுக்குப் பரிந்து பேச அவர் இறங்கி வந்தார். அந்தோனி மாமா சித்தப்பாக்கு பக்கத்து வீடு நல்ல நண்பர்அவருக்கு. அந்தோனி கோபக்காரன்டா, அவர் வரும் போது கயிற்றைக் கழற்றி விடுங்கடான்னார். அப்பா எங்ககிட்ட இனி நம்ம வீட்டு வாசல்ல கயிறு கட்டி கட்டை பேட் ஆடக்கூடாதுன்னு சொல்ல, ராஜுவும் ஜனாரும் அதைஅவங்க வீட்டுப் பக்கம் நவுத்தி, கயிற்றின் ஒரு பக்கத்தை அவங்க வீட்டு வேலியிலும், கயிற்றின் இன்னொருபக்கத்துக்கு ஒரு பெரிய கல்லைக் கட்டி சுவற்றுக்கு அந்தப்பக்கம் தொங்க விட்டு ஆட்டம் ஜோராக நடக்கஆரம்பிச்சாச்சு.
கேஎஸ்கே மாமாவும் அப்பாவும் சிவில் பாலு மாமாகிட்டயும் பேபி சகஸ்ரநாமம்ட்டையும் சொல்லி டி லைன்இறக்கத்துல ஒரு பெரிய வேகத்தடையை போட வச்சுட்டாங்க. அதற்கப்புறம் மேல்லைன்லேர்ந்து யாரும்சைக்கிளில் பறந்துவர முடியாம ஆயிடுச்சு.
நாளடைவில் இந்த கட்டைபேட் கேம்களுக்கும் சீசன் மாறிடுச்சு.
பின் வரும் போஸ்ட்களில் தொடர்கிறேன்.
No comments:
Post a Comment