Monday, December 6, 2021

நினைவுகளில் புரண்டாடும் வயதில் - 4

காலனியில் டிசம்பர் முதல் வாரம் வந்தவுடனேயே சகாய் செல்வன் D9 வீட்டுலேயும்அதே தெரு இந்த கடைசிவீட்டுல பாய்லர் ரத்தினம் மாமா வீட்டுல D16லும் கிறிஸ்துமஸ் வரவையொட்டி ஸ்டார் கம்பம் நடுவாங்கஇதுநடும்போது எங்களுக்குள் ஒரு திருவிழா வரவையொட்டிய வைபவம் போல இருக்கும்பெரும்பாலும் அவர்கள்வைக்கும் ஸ்டார் அது பிங்க் கலர் ஸ்டாராகத் தானிருக்கும்.


அடுத்து கிறிஸ்துமஸ் தினம் வர்ற வரைக்கும் வைட் பண்ணுவதும்அன்று இரவு அவங்க எல்லாம் சேலம்கேம்ப்சர்ச் மாஸ்க்குப் போயிட்டு வந்து பட்டாசு வெடிக்கிற சத்தத்தைக் கேட்டு அந்த தெருவே குதுகூலமாகஇருக்கும்.


மற்ற இனிப்பு பணியாரங்கள் அவங்க செய்தாலும்ஸ்டெல்லா அக்காவைம் ரீட்டா அக்காவும் அவங்கம்மாவோடசேர்ந்து செய்யற அந்த fruit plum cakeன் சிறு துண்டுகளுக்கு அலையும் அந்த நாட்கள் இனிமையானதுசிலசமயம் அவங்கப்பா சேலம் போயிட்டு திரும்பும் போது ஸ்பெஷல் கேக் வந்ததுன்னா வெள்ளையனும்கருவாயனும் (சில சமயம் ஸ்டெல்லா அக்காவே கோவம் வந்தா இப்படித் தான் கூப்பிடுவாங்கபேசிக்கிறஆனந்தம் அளவிலாதது.


இங்க வந்த பிறகு கிறிஸ்துமஸ் சமயத்துல யார் வீட்டுலும் ஸ்டார் கட்டாதது மிக ஆச்சரியமாக இருந்ததுநவம்பர் தேங்க்ஸ்கிவிங் நாள் முடிஞ்ச கையோடு டிசம்பர் ஒன்னுலிருந்து எல்லோர் வீட்டிலும் இங்க நிறையகலர் கலராக சீரியல் லைட்ஸ் வச்சு அலங்கரிப்பாங்கமற்றும் வீட்டினுள் ஒரு pine tree வெட்டி எடுத்து வந்துஅதை அலங்கரித்து லைட்ஸ் போட்டுஅதன் கீழ் குழந்தைகளுக்கு முதல் நாள் இரவு கிஃப்ட்ஸ் வச்சுகாலையில் விடிஞ்சவுடன் santa வந்து உனக்கு பரிசு வச்சுட்டுப் போச்சுன்னு கொடுப்பாங்கஇது இங்க ரொம்பரொம்ப முக்கியமான ஒரு விசேஷமான event. 


இங்க எங்குமே ஸ்டார் கம்பம் வைப்பது அல்லது ஸ்டார் கட்டுவது கிடையாதுஅது பிரிட்டிஷ் மற்றும் சிலகேதலிக் பழக்கம் போல.


நான் அபார்ட்மெண்ட்ல இருந்த வரைக்கும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பதோடு சரிபையன் பிறந்து ஒருவருடத்தில் ஒரு வீடு வாங்கி வந்து குடியேறிய பிறகுஅந்த தெருவில் எல்லோர் வீட்டு வாசலிலும்அலங்கரித்திருப்பர்முதல் வருடம் என்ன செய்யனும்ன்னு தெரியாம பேசாம விட்டுவிட்டேன்இரண்டாவதுவருடம் என் வீடு மட்டும் எந்தவித சின்ன அலங்கரிப்புகளும் இல்லாம ஏதோ வெறிச்சுனு இருக்க சின்னதாகலைட்ஸ் போட்டேன்.


என் பையன் இரண்டு வயதாகும் போது மிக சரளமாகப் பேச ஆரம்பிச்சுட்டான்சொல்ல வருவதை முழுங்காமமுழுக்க கிளியராக full sentence பேசுவான்டே கேர் பழக்கம்.


அவனுக்கு  3 1/2 வயசு ஆனப்ப அவனை ஒரு நாள் ஆபீஸ் போகும் முன் அவனோட டே கேர்ல விடப்போகும்போது சொன்னான்அப்பா I know we don’t put Christmas trees in our house and we are not like my friends. But if you don’t put Xmas tree then Santa won’t get me anything ன்னான்எனக்கு ஷாக் அடிச்சாமாதிரி ஆயிடுச்சுகாரை அப்படியே ரோடுல ஓரமா நிறுத்தி அவனைத் திரும்பி அந்த அழகு முகத்தைக்பார்க்கனும் போல இருந்துச்சு.


அன்னிக்கேப் போய் ஒரு பிளாஸ்டிக் ரெடிமேட் கிறிஸ்துமஸ் ட்ரி மற்றும் santa walking sticks with lights மற்றும் சீரியல் லைட்ஸ் எல்லாம் வச்சு அலங்கரிக்க ஆரம்பிச்சாச்சுசின்ன வயசுல அவனே பல்பு மற்றும் snow hanging மாட்டி விடுவான்ஒவ்வொரு வருஷமும் அவன் அம்மா அவனுக்கு ஏதாவது ஒரு கிஃப்டை அதன் பின்னேஒளிய வச்சு அவனுக்கு கொடுத்துட்டு இருந்தாங்க.


இப்ப அவனுக்குப் 18 வயசுகாலேஜ் போயாச்சுபையன் வளர ஆரம்பிச்சுட்டான்நானே ஒவ்வொரு வருடமும்டிசம்பர் முதல் வாரம் இந்த அலங்கரிப்புகளை தொடர்ந்து வருகிறேன்இரண்டு வருடம் முன் அம்மாவோடுஇருக்க டிசம்பரில் பெங்களுர் போனதால் இங்கு வைக்க முடியவில்லை


ஒரு தடவை கொஞ்சம் லேட்டாக டிசம்பர் இரண்டாவது வாரமாகிறப்ப கூட நான் லேட் பண்ணியதால்பக்கத்துவீட்டு அல்பேனியன் குட்டிக் குழந்தை என்னிடம் ‘ஏன் உன் வீட்டுல மட்டும் ஒன்னுமேயில்லைஎன்னோடதைப்பாரு எவ்வளவு சூப்பராக இருக்குன்னு சொல்ல ஒரு மாதிரியாயிடுச்சுஉடனே எடுத்து வச்சேன்.


இந்த வருடம் ஒரு சின்னதொரு அலங்கரிப்பு மற்றும் santa வரவழைத்தலில்

வாழ்வினிது

ओलै सिरिय ।

No comments: