காலனி வாழ்க்கையை அலசும் போது மற்றவர்கள் போடும் பதிவுகளிலிருந்த பல நினைவலைகள்கிளம்பிவிடுகிறது. இன்று p b sridhar அண்ணா போஸ்ட் பார்த்ததன் விளைவு இந்த போஸ்ட். தலைவலியாகஇருந்தால் நர்ஸ் பத்மாக்கா ஆலோசனை வழங்குவார்கள். நமக்கு மருத்துவம் செய்த மற்றவர்கள் போய்சேர்ந்தாச்சு! இல்லாட்டி மனோஜ் உதவுவான்.
D13ல் மற்றும் B1ல் இருந்த காலத்தில் வீட்டில் எந்த சின்னப்பிரச்சனையானாலும் பஞ்சு சித்தப்பாவே ரிப்பேர்பண்ணிடுவார். அவருக்கு எலக்ட்ரிக்கல், plumbing work எல்லாம் அத்துப்புடி. சர்வசாதாரணமாக செய்துடுவார். இல்லாட்டி பக்கத்துவீட்டு சிவில் பாலுமாமாட்ட சொன்னாப் போதும். பத்து மணிக்கு ஆள் வந்துரும். இல்லாட்டிஎங்க லைன் வழியாப் போற யாராவது ஒரு எலக்ட்ரீஷியன்ட்ட சொன்னாப் போதும் அவங்க ஆபீஸ்ல போய்சொல்லிட்டு திரும்பி வந்து ரிப்பேர் பண்ணிடுவாங்க! செம டெடிகேஷன்.
சித்தப்பா பண்றதைப்பார்த்து பார்த்து ஒரு நாள் கை துறுதுறுக்க, பத்தாவது படிக்கும் போது டி லைனில்வீட்டிலிருந்த iron box வேலை செய்யாததால், அதைக் கழட்டி ரிப்பேர் பண்ணலாம்ன்னு, சொருகிற வயர் plugஐதிறந்தேன். அது கருகியிருந்தது. சித்தப்பா செய்யற மாதிரி அந்த கருகின வயரைக் கட் பண்ணிட்டு திருப்பிஅந்த 3-pin வயர்களை இணைக்கும் போது சரியாக கவனிக்காம மாற்றி இணைச்சுட்டேன். Plugஐ சொருகும்போது டபார்ன்னு சத்தம், ஃப்யூஸ் போயிருச்சு. ப்ளக் பாயிண்ட் கருகிடுச்சு. செம பயம். வீட்டுல சொன்னாஅம்மா அடி போட்டுருவாங்க!
நேரா டைம் ஆபீஸ்ல போய் ஃப்யூஸ் போயிடுச்சுன்னு சொன்னேன். மீசை விஜயன் அண்ணன் வந்தார்.
நான் பத்தாவது தான் படிச்சுட்டு இருந்தாலும், மீசை விஜயன் அண்ணன், கண்ணன், கர்ணன் ( ஏ கருணாநிதி), ராபர்ட்ஸ், பிரபாகரன் மாமா (சில சமயம், உன்னி அப்பா), கல்கத்தா பாலு மாமா, முறுக்கு மீசை வச்ச மாமாஒருத்தர் 40 வீட்டுலேர்ந்து வருவார்; (ராஜமாணிக்கம்ன்னு நினைக்கிறேன், அவர் ஸ்போர்ட்ஸ் ஷார்ட்ஸ் ஷூ/சாக்ஸோடத் தான் வாலிபால் கூட ஆடுவார்) இவர்களோடு என்னையும் கடைசி ஆளா ஒரு மூலையில் நிக்கவச்சு சேர்த்துப்பாங்க. கல்கத்தா பாலு மாமா மூக்குப் பொடியை உறிஞ்சுகிட்டே அதே கையிலேயே பாலையும்சர்வ் பண்ணுவார்.
இந்த வாலிபால் விளையாட்டால எனக்கு விஜயன் அண்ணனோட பழக்கம் உண்டு. அவர் வீட்டுக்கு வந்து fuse boxஐயும் switch boardஐயும் பார்த்துட்டு என்னிடம் என்னடா பண்ணினேன்னார். அவர்ட்ட ஐயர்ன் பாக்ஸ்கதையைச் சொல்லி காமிச்சேன். அவர் அதைப் பிரிச்சுப்பார்த்துட்டு, ஏண்டா ஸ்கூல் போகுற வயசுல உனக்குஎதுக்கு இந்த வேலை, இந்த fuse box மட்டும் இல்லைன்னா நீ உசுரோடு இருந்திருக்க மாட்ட இப்பன்னார்.
ஏண்டா இதெல்லாம் நீங்க ஆபீஸ்ல வந்து சொன்னா அடுத்த நிமிஷம் வந்து நாங்கப் பண்ணித்தரமாட்டோம், உசுரு போச்சுன்னா திரும்பி வராதுடான்னார்.
இரண்டு நாள் அவர் இருக்கிற நேரம் ஸ்டாப் அசோசியேஷன் பக்கமே போகலை. மூனாவது நாள் எப்போதும்போல் வாலிபால் கோர்ட்டுக்குப் போனேன். அவர் கண்டுக்கலை. விளையாட்டுல சேர்த்துக்கிட்டாங்க. எல்லாம்மறந்து போச்சு.
இனிமையான காலங்கள் அவை.
No comments:
Post a Comment