காலனியில் நடக்குற நம்ம வீட்டு விசேஷங்களில் எல்லாம் மற்றவர்கள் வந்து எல்லா உதவிகளும் சர்வசாதாரணமாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாம தானாகவே முன் வந்து நிறையவே உதவி செய்வாங்க.
அதுமாதிரி நான் நிறையவே பார்த்திருக்கேன். மலைப்பிள்ளையார் கோவில் அருகிலிருந்த வீடுகளில் அம்மாஅடிக்கடி போய் கைமுறுக்கு சுத்திக் கொடுத்து விட்டு வருவார்கள். கல்யாண சீர் முறுக்கு 5 சுத்து, மத்தபடிதின்பதற்கு இரண்டு சுத்து என நிறைய முறுக்கு சுத்துவார்கள். அம்மாவோடு நான் அடிக்கடி போவேன், ஆதலால்அந்த வீட்டிலிருப்பவர்களை நன்கு அறிவேன்.
அதே மாதிரி ஆர்சி பிளாண்ட் கல்யாணசுந்திரத்தின் மனைவி எங்க ராஜீக்கா வருவாங்க. சிவில் பாலு மாமாவீட்டிலும் எங்க வீட்டிலும் எப்ப கூப்பிட்டாலும் வந்து விசேஷ நாட்களில் வந்து ரொம்ப உதவுவாங்க!
எங்க பூணல் எல்லாம் ஸ்டாஃப் அசோசியேஷன்ல தான் கூட்டாக நடந்தது, 5 பேருக்கு சேர்த்து வச்சு பூணல். ஸ்டாப் அசோசியேஷன் வாசல்லையே கொட்டகை போட்டு கிச்சன். கல்கண்டு கோபாலய்யர் மாமாட்டசொன்னா போதும் ரொம்ப நல்லாவே சமைச்சு கொடுத்திடுவார். அதே மாதிரி வேறொருத்தரும் நன்குசமைப்பார்.
பரிமாறுவதற்கு நம்ம காலனி மக்கள் யாருக்கும் விட்டுக்கொடுக்காம தானாகவே எல்லோரும் செய்வாங்க! கல்கண்டு கோபாலய்யர் மாமா பையன் வைத்தி, சுந்தரராமன் அண்ணா, ஜெயராமன் அண்ணா, ரிக்கார்ட்ஸ்ராமநாதன் அண்ணா, கேண்டீன் நாராயணன் மாமா, வெங்கட்ராமன் அண்ணா என ஒரு பெரிய க்ரூப்பே வந்துசெமையாக பக்கெட் எடுத்து பரிமாறுவாங்க. இன்னும் நிறைய பேர். கோல்டன் டேஸ்.
எனக்கும் ப்ளஸ் 2 படிக்கும் போது அத்தகைய வாய்ப்பு கிடைத்தது. விக்டர் அண்ணன் கல்யாண ரிசப்ஷன்1978-79 வாக்கில் நம்ம ஸ்டாப் அசோசியேஷனில் நடந்தது. முதல் நாள் ஸ்டாப் அசோசியேஷன் வாசல்லபந்தல் போட்டு வாழைமரம் கட்டி சீரியல் லைட்ஸ் போடற வேலை நடந்து கிட்டு இருந்துச்சு. அப்ப மனோவைப்பார்க்கனுமே! தன் சொந்த வீட்டுக்கல்யாணம் மாதிரி தோரணம் கட்டுவதும், உள்ளே ஹாலை அலங்கரிப்பதும், அவனுக்கு மோகன் எலக்ட்ரிக்கல்ஸ் மோகனும் சேகரும் ரொம்ப பழக்கம், அவங்களோடு சேர்ந்து சீரியல் லைட்போடுவதிலும் எல்லாவற்றிலும் செல்வன் சகாய் சார்லஸோட முன்னணியில் வேலை செய்துகிட்டு இருந்தான். அவன் முகத்தில் அவ்வளவு ஒரு மகிழ்ச்சி.
விக்டர் அண்ணன் திருமணம் அன்னிக்கு நான் காலையில எட்டு மணி வாக்கில், நான் ஸ்டாஃப் அசோசியேஷன்போனா அங்கு யாருமேயில்லை. அப்ப தான் தெரிஞ்சது அவங்க கல்யாணம் சேலம்கேம்ப் சர்ச்லேன்னு. பெண்ணும் சேலம்கேம்ப் தான்.
சரி நாம போய் டிபன் சாப்பிடலாம்ன்னு போனேன். நம்ம வைதீஸ்வரா ப்ரைமரி ஸ்கூல் ஹெட்மாஸ்டர் ரூம்வாசல்ல கிச்சன். குக் சமைச்சு கிட்டு இருந்தார். இலையெடுக்க பெண்மணிகள் இருவர் இருந்தனர். என்னபண்ணலாம்ன்னு யோசிக்கும் போது துவாரக்நாத் வந்தான். அப்ப துவாரக்நாத் எம்பிபிஎஸ் படிச்சுகிட்டு இருந்தநேரம். அவன் தம்பி ரவீந்தரநாத்தே என்னை விட இரண்டு வயது பெரியவன்.
நானும் துவாரக்நாத்தும் இருந்த டிபனை எடுத்துப் போட்டு சாப்பிட்டோம். சரி கிளம்பலாம்ன்னு நினைச்சா, செல்வம்/சகாயோட உறவினர்கள் ஒவ்வொருத்தரா வெளியூரிலிருந்த வர ஆரம்பிச்சார்கள். துவாரக் சொன்னான்வா நாமளே சர்வ பண்ணுவோம்ன்னு. நாங்க இரண்டு பேர் தான். கட கடன்னு வர்றவங்களுக்கு டிபன்இலையைப் போட்டு தண்ணி வச்சு டிபன் வச்சு கிட்டத்தட்ட 25-30 பேருக்கும் மேல வந்தவங்களுக்கு சர்வ்பண்ணியிருப்போம். பத்தரை மணி ஆகுற நேரத்துல, சேலம்கேம்ப் சர்ச் கல்யாணம் முடிஞ்சு, பெண்வீட்டுக்காரங்களில் 4 பேர் வந்து, இது எங்க வீட்டு முறை, பெண் சைடு தான் பண்ணனும், நீங்க யாருன்னுகேட்க, நானும் துவாரக்கும் சிரிச்சுகிட்டே வா போலாம்ன்னு வந்துட்டோம். செம நிறைவாக இருந்தது. அருமையான நாட்கள் அவை.
ஏதோ எழுத வந்து ஏதோ நினைவுகள் வர பலவற்றை எழுதி விட்டேன். மன்னிக்கவும். பழைய நினைவுகளில்புரளும் போது ஏதேதோ நினைவுக்கு வருகிறது.
இன்று இங்க கடையில் இலந்தவடை கிடைத்தது. அதோடு கைமுறுக்கும். கைமுறுக்கில் ஆரம்பிச்சு என்கையை முறுக்கி கிட்டேன் (நிறைய எழுதியதைச் சொல்கிறேன்).
இன்று கிடைத்த இலந்தை வடை ரொம்ப சுமார். நல்லாவேயில்லை. இத்தனைக்கும் freshஆகத்தானிருக்கு. வைதீஸ்வரா ஸ்கூல்ல படிக்கும் போது வெளிய அரசமரத்தடியில் இலந்தைவடையும்/எளந்த வடையும், கம்மர்கட்டும், மாங்கா மற்றும் நெல்லிக்காய் விற்பாங்க! அதை வாங்கிச் சுவைத்த அநுபவமே தனி. அந்தஇலந்தவடைக்கு ஈடுஇணையே இல்லை.
பிறகு தொடர்கிறேன்.
பின் குறிப்பு: நான் எழுதியது ஏதாவது யாருக்காவது பிடிக்கவில்லையென்றால் சொல்லுங்கள். எடுத்துவிடுகிறேன்.
No comments:
Post a Comment