Friday, December 10, 2021

நினைவுகளில் புரண்டாடும் வயதில் - 5

காலனி வாழ்க்கை எனக்கும் எங்க குடும்பத்தில் இருக்கும் எவருக்கும் அவ்வளவு எளிதில் மறக்காது. அதற்கு காரணமிருக்கு. எழுதுவதற்கு நிறைய இருக்கு.

நான் எங்கள் வீட்டில் முற்றிலும் வித்தியாசமானவன், கோபக்காரன், எளிதில் எவருடனும் சண்டை போட வல்லவன். என் உடன் பிறந்தவர்கள் மூவரும் வேற மாதிரி, படிப்பில் அதிகம் கவனம் செலுத்தியவர்கள். அவர்களுக்கு கிளாஸ் first, school first வரறதுல முக்கியத்துவம் கொடுப்பாங்க, அவங்க படிப்புல முன்னாடி வர்ற சண்டைப்போட்டு போட்டி போட்டு படிப்பாங்க, மிக தெளிவாகப் படிப்பாங்க!

எனக்கு அந்தப்பிரச்சனையே கிடையாது. படிப்பு இரண்டாம் பட்சம். அவங்க படிப்புல சண்டை போடறப்ப, நான் விளையாடறதுல சண்டை போடறவன். அவங்கெல்லாம் காலேஜ் போற வரைக்கும் 90 மார்க்குக்கு கீழ என்ன இருக்கும்ன்னு அவங்க லைஃப்ல பார்த்தது கிடையாது. நான் 90 மார்க்கையே லைப்ல பார்த்தது கிடையாது. 35 மார்க் வாங்கி பாஸ் பண்ணிட்டா என்னோட expectation முடிஞ்சது.

பத்தாவது படிக்கும் போது R S sir ரொம்ப ரொம்ப அருமையாக மேத்ஸ் சொல்லிக்கொடுத்தார். அது ஒரு பேப்பர்லையாவது 90 பார்த்துரனும்ன்னு நினைச்சேன். முடியலை. ஃபைனல் பப்ளிக் எக்ஸாம் முன்ன ஒரு இரண்டரை மூனு மணி நேர டெஸ்ட் கொடுத்தார். அதில் நான் எடுத்தது 87. அது தான் கடைசில 10த் பப்ளிக் எக்ஸாம்லையும் வாங்கினது. அது தான் நான் இதுவரை எடுத்த அதிகபட்ச மார்க் என்று நினைக்கிறேன்.

ஒரு நாள் இங்க என் பையன்ட்ட சொன்னேன், நான் லைஃப்ல 90 பார்த்ததில்லைடான்னேன். அதுக்கு அவன் அப்பா, நீ இங்க சிட்டிசன்ஷிப்க்கு அவங்க கேட்ட எல்லாக் கேள்விக்கும் கரெக்டா பதில் சொல்லியிருக்க, மேலும் அம்மாக்கு ட்ரைவிங் சொல்லிக் கொடுத்து அம்மா ட்ரைவிங் டெஸ்ட்ல நூத்துக்கு நூறு வாங்கியிருக்கா, அது உன்னோடதோடுன்னு வச்சுக்கன்னு, அழகா சொல்லி மனசைத் தேத்திடறான்.

என்னோட மத்த உடன்பிறப்புகள் உண்மையான சரித்திரம் பள்ளிக்கூடத்தில படிச்சா, நான் ஊர் சுத்தி ஊர் சரித்திரம் படிச்சது தான் பெருசு. எனக்கு 35 மார்க் வாங்கி பாஸ் பண்ணிட்டாப் போதும், அதுக்கு மேலான எதிர்பார்ப்புகள் கிடையாது. ஆனால் வீட்டில் மத்தவங்கெல்லாம் நல்லாப் படிக்கிறவங்க. ஆகவே எல்லாத்திலும் கொஞ்சம் நான் வித்தியாசமாகவே சிந்திக்கிறவனாயிட்டேன்.

எங்க வீட்டுல மற்றவங்க எல்லோருக்கும் அம்மாவைப் பிடிக்கும். அம்மாக்கும் அவங்களை ரொம்பப் பிடிக்கும். அம்மா வெளிப்படையாவே சொல்வாங்க. ஆனால் கடந்து பத்து பதினைந்து வருடத்தில் தினமும் அம்மாவோட அதிகம் பேசியது நானாக தான் இருக்க வாய்ப்பிருக்கு. தினமும் பேசி கிட்டு இருந்தேன்.

எனக்கு அப்பாவை ரொம்ப ரொம்ப சின்ன வயசுலேர்ந்தே பிடிக்கும். என்னை அடிக்க மாட்டார். மத்தவங்க என்னை வெளுத்து வாங்கிடுவாங்க, அம்மா கூட.

D13 வாசல்ல மல்லிக்கை பந்தல் கீழ ஈசி சேர் போட்டு கொஞ்ச நேரம் படுத்திருப்பார். அப்போது அவர் காலடியில் உட்கார்ந்திருப்பேன். B1ல இருக்கும் போதும் அதே மாதிரி மல்லிகைக் கொடி பக்கத்துல தான் ஈசிச் சேர்ல படுத்திருப்பார். அப்போதும் அங்க பக்கத்திலிருப்பேன்.

அவர் அது மாதிரி படுத்திருக்கும் நேரம் மிகவும் குறைவு. எழுந்து லேடிஸ் கிளப் accounts பார்க்க அங்க போயிடுவார், அப்ப அங்க அவர் ஆபீஸ் முன்ன வாசல்ல மண்ணுல விளையாடிட்டிருப்பேன். இல்லாட்டி ஏதோ voucher அல்லது ஏதாவது paymentsக்கு ஏதாவது ஒரு கமிட்டி மெம்பர் கையெழுத்து வேணும்ன்னா எழுந்து போவார். அவர் கூடவே போவேன்.

பஜனை மடம் போவார். அவருக்கு ரொம்பப் பிடிச்ச இடம், கூடவே போவேன். பங்களா உள்ள போகும் போது மட்டும் கூட்டிப் போக மாட்டார். அங்க செக்யூரிட்டி கேட்லயோ அல்லது பஜனை மடத்துல சிவில் பாலு மாமா அல்லது ஹாஸ்டல் கிருஷ்ணமூர்த்தி மாமா இருந்தா, அங்க இருந்துப்பேன், இல்ல நானே வீட்டுக்கு திரும்பி வந்துடுவேன்.

அப்பா பின்னாடியே சுத்தினதாலத் தான் எனக்கு காலனியில பலரைத் தெரிய வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் போகும்போது அவர்ட்ட நான் கேட்கிற கேள்விகளுக்கு, அவர்ட்ட நான் போடற சண்டைக்கு, எதுக்கும் எரிச்சலாகாம நிதானமாக பதில் சொல்வார். அந்த பதில்களெல்லாம் இங்கு எழுத முடியாது. ஆனால் அவரது கேரக்டரை அவர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையை எப்படி புரிஞ்சுக்கனும்ன்னு அவர் சொன்னதைக் compile பண்ணி எழுதினாலே மிக அழகாக இருக்கும். என்னோட தனிப்பட்ட blogல அப்பப்ப இதை எழுதி வைப்பேன்.

நான் படிக்காம ஊர் சுத்தறதுக்கு அவர் பின்னாடியே போனது எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு. ஊர் சரித்திரத்தை, ஊர் மக்களை பார்த்து புரிந்து கொள்ள அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பு. 

அம்மா தன் வாழ்வின் கடைசி ஒரு மாசம் தான் தான் பேசுவதை நிறுத்திக்கொண்டார்கள். அதுவரை அவர்கள் அதிகம் பேசியது காலனி மக்களைப் பத்தி தான். அதில் நன்கு தெரியும் அப்பாக்கும் அம்மாக்கும் காலனியிலிருந்த ஒவ்வொருத்தர் மேலிருந்த நல்ல அபிப்ப்ராயம் எல்லாம் செமையாக வெளிவரும். பின்வரும் காலங்களில் சிலவற்றை மட்டும் எழுதுகிறேன்.

அவர்கள் மூலம் ஊரை அறிந்தது கொள்ள முடிந்தது. மற்றும் நாங்கள் குடும்பத்தில் கூடும் போதும் காலனி பற்றி பேசுவோம், பெயர்களை சரி பார்த்துக் கொள்வோம், நல்லது கெட்டதுகளைப் பேசிக் கொள்வோம், கரெக்ட் செய்து கொள்வோம்.

எதுவிம் என் சுய உழைப்பில் அறிந்து கொண்டதல்ல. ஒரு கூட்டு முயற்சி. அனைவரையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்கிற அளவுக்கு உண்மையில் திறமையிருந்திருந்தால், படிப்பிலும் கொஞ்சம் தேறியிருக்கு முடியும். வாழ்வில் உண்மையிலேயே முன்னேற வாய்ப்பு கிடைத்த போது மேலே உயர்ந்திருக்க முடியும். ஆனால் நம் பதின்ம வயதில் மனதில் படிந்தவைகளை, பதிந்த மக்களை எளிதில் மறக்க இயலாது. Especially when you have great respect to the people with whom you have grown up.

மற்றவைகளை பிறகு தொடர்கிறேன்.

வாழ்வினிது
ओलै सिरिय ।

No comments: