காலனியில ஆசிரியர்களும் நம்மோடு இருந்ததால நம்மால் அவர்களோடு இயல்பாக இருக்க முடிந்தது. மேலும்சரஸ்வதி டீச்சர் சொந்த மாமியானதால மத்த டீச்சர்களிடம் சில சமயம் ஒரு சில சலுகைகளும் கிடைக்கும்.
TVR சார் வைதீஸ்வரா ஹைஸ்கூலில் ஹிந்து சமய மன்றம் நடத்தி வந்தார். அந்த வகுப்புகளுக்கு நான்எப்போதும் போவேன். நிறைய ஸ்லோகங்கள் சொல்லித் தருவார். அப்படி அவர் சொல்லித் தந்து கத்துகிட்டதுதான்
‘ நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்த்ர ஸ்வரூபா நமோ நம
கீத கிங்கிணி நமோ நம
…’
பிற்காலத்தில் இந்த பாடலின் முழு வடிவத்தைப் பார்த்தபோது மலைப்பாக இருந்தது. அவ்வளவு பெருசு. இந்தவகுப்புகளில் பாதி தான் கற்றுக்கொண்டது நினைவிருக்கிறது.
TVR sirக்கு அப்ப சிலவருடங்கள் முன் தான் ஓபன் ஹார்ட் சர்ஜரி நடந்திருந்தது. அவர் எப்போதும் கிளாஸ்quarterly, half-yearly பேப்பர்களைத் திருத்த தன்னோட கிளாஸ் மாணவர்கள் யாராவது ஒருவரை தன்வீட்டுக்கு வரச்சொல்லி அந்த பேப்பர்களைத் திருத்தச்சொல்வார். அவர் வீடும் நாராயணராவ் சார் வீடும் என்பஞ்சு சித்தப்பா வீட்டுக்கு எதிர்ப்பக்கம் தானிருந்தது. நாரயணராவ் சார் பையன் பிரசன்னா என்னோட ஒருவயது பெரியவன். அவர் அண்ணன் அப்பவே ஸ்கூலில் லேப் அட்டெண்டராக சேர்ந்து விட்டார்.
TVR sir நான் ஹிந்து சமய மன்ற வகுப்புகளுக்குப் போவதால், ஒரு நாள் என்னை quarterly எக்ஸாம் பேப்பர்திருத்த வரச்சொன்னார். என் கிளாஸ் பேப்பரே. என்னை பென்சில்ல மார்க் பண்ணச் சொல்லிட்டு அப்புறம் அவர்வந்து சரி பார்த்துட்டு மார்க் கூட்டிப்போட்டுருவார். அவர் போட்ட மார்க்கை கூட்டி டோட்டல் நான் போடனும்.
அப்படி திருத்தற பேப்பர்களைப் பார்த்து அதிர்ந்துட்டேன். கிளாஸ்ல என்னோட நல்லாப்படிக்கிற பசங்கபொண்ணுங்க பேப்பரை நான் திருத்துவதா, அதிர்ந்து போயிட்டேன். அப்போ ஐம்பது மார்க் வாங்குவதே பெரியவிஷயம் எனக்கு. மனசு ரொம்பவே உறுத்த ஆரம்பிச்சுருச்சு. இரண்டு நாள் போயிட்டு மூனாவது நாள்நின்னுட்டேன். இன்னும் இரண்டு கட்டு திருத்தனும். ஏண்டா வரலைன்னார். அவர்ட்ட உண்மையைச் சொல்லமனசு வரலை. குற்றமுல்ல நெஞ்சு குறுகுறுப்பதைச் சொல்ல தைரியமில்லை.
மனுசன் சொக்கத் தங்கம். சிரித்த முகம். அன்பானவர். அத்தகையவரின் நட்பு கிடைப்பது பாக்கியம் தான்.
அதே மாதிரி விசாலம் டீச்சர் எனக்கு எட்டாவதுக்கு கிளாஸ் டீச்சர். மேத்ஸ் செமையாக சொல்லிக்கொடுப்பாங்க. அவங்க சொல்ல சொல்ல கிளாஸ்லயே நல்லாப் புரிஞ்சுரும். அந்த ஒரு பேப்பர்லையாவது 80 எடுத்துடனும்ன்னு நினைச்சேன். 75க்கு கீழ நின்னு போச்சு. அதற்கப்புறம் அவங்க சொல்லிக்கொடுத்தவிதத்திலிருந்து அவங்க மேல ஒரு தனி மரியாதை வந்துருச்சு.
D3 மாமா மாமி குடியிருந்த போது விசாலம் டீச்சர் சரஸ்வதி டீச்சரைப் பார்க்க வருவாங்க. அவங்களைப்பார்த்தவுடனேயே எழுந்திருச்சு நிப்பேன், அவங்க போற வரைக்கும் உட்காரமாட்டேன். அவங்க போன பிறகுசரஸ்வதி டீச்சர் கிண்டல் பண்ணுவாங்க. விசாலம், அலமேலு, பீட்டா டீச்சர் எல்லாம் வந்தா எழுந்து நிக்கற, என்னைக் கண்டா மரியாதை இல்லை, விசாலத்திடமும் அலமேலுகிட்டயும் சொல்றேம்பாங்க! எதிர்த்துப்பேசினா பிரச்சனையாயிடப் போவுதுன்னு நகர்ந்துடுவேன்.
இனிமையான காலங்கள் அவை.
No comments:
Post a Comment