காலனி வாழ்க்கையில ஒவ்வொருத்தரும் ஏதோ ஒன்றில் திறமையோடு மிக சிறப்பாக செயல்படுவர். அவர்களதுஆளுமை வளர்ந்து உச்சத்திலிருக்கும் போது அவர்களை நாம் கீழ நின்னு கவனிக்கும் போது நமக்கு மெய்சிலிர்க்கும். அவர்கள் கையால் பரிசு வாங்குபவர்களைப் பார்க்கும் போது பெருமையாக பிரமிப்பாக இருக்கும். அந்த வாய்ப்பு நமக்கு கிடைக்காத போது ஏமாற்றமாக இருக்கும்.
அத்தகைய ஒரு ஆளுமை M K R என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட M K Rajagopal மாமா. நான்வைத்தீஸ்வராவில் 10வது முடிக்கிற வரை அவர் தான் ஸ்கூல் correspondent (superintendent ன்னுசொல்லுவது சரியாக இருக்கும்). ஒவ்வொரு விழாமேடையிலும் அவரும் ஹெட்மாஸ்டர் பாலு வாத்யார் சுந்தரம்வாத்யாரெல்லாம் அலங்கரித்த அந்த மேடைகளில் கீழ உட்கார்ந்து பார்ப்பது ஒரு சுகம்.
எனது உடன் பிறந்தவர்கள் எல்லாம் படிப்பில் மட்டுமல்ல, பள்ளிகளில் மற்றும் அவர்கள் சென்ற கல்லூரிகளில்கூட பேச்சுப் போட்டி, எழுத்துப் போட்டி, நாடகமேடை ஏறி பல டிராமாக்களில் நடித்துள்ளனர். வைதீஸ்வராபள்ளியில் அவர்கள் படிக்கும் போது ஒருத்தர் மாத்தி ஒருத்தர், ஏதாவதொரு நாடகமேடை, ஸ்கூல், ஸ்டாஃப்அசோசியேஷன், லேடீஸ் கிளப், என எங்க டிராமா போட்டாலும் இவர்களில் ஒருவர் நடித்து MKR மாமா, செகரட்டரி, சேஷசாயீ, சுந்தரம் வாத்யார், பால்வடிவு, கே எஸ் பி மாமா கைகளில் என யாராவது ஒருத்தர்கையில பரிசு வாங்கிட்டு வருவாங்க!
வீட்டில் எங்களுக்கு சந்தோஷமாக இருந்தாலும் அதை ரொம்ப சிலாகித்து சொல்லி சொல்லிக் கொண்டாடுவதுஎங்க செல்லையா மாமா (கேவிஎஸ்)வும் சரஸ்வதி டீச்சர் மாமியும் தான். பஞ்சு சித்தப்பாக்கு போட்டோ எடுப்பதுரொம்பப்பிடிக்கும், இதையெல்லாம் அவரோ அல்லது அவரது நெருங்கிய நண்பர் லதா ஸ்டூடியோ கந்தசாமிமாமாவும் படம் பிடிச்சு ஆவணப்படுத்தியிருவாங்க. கந்தசாமி மாமா கடை திவாலாகியிருந்தா, அதற்கானcontributor நாங்கவா கூட இருக்கலாம். அவ்வளவு ஓசி போட்டோவும், குறைந்த விலையில் போட்டோபடங்களும் கிடைக்கும்.
எனக்கு இந்த டிராமாவில் நடிப்பது, பேச்சுப் போட்டி, எழுத்துப் போட்டி என எதுக்கும் போனதில்லை. மனப்பாடம் செய்ய வராது. திறமை கிடையாது, மேடைப்பயம். மேடை பக்கம் போனா மைண்ட் வெட்டவெளிச்சமா மழுங்கி நிக்கும். ஒரு பரிசு இதுவரை வாங்கியதில்லை. பால்வடிவு மாமா இங்க வந்த போது கூடஇதை அவரிடம் நினைவுகூர்ந்தேன்.
எனக்குப் பரிசு கிடைக்க நான் தேடிய இடம், மார்கழி மாச பஜனைக்கு விடியற்காலையில் ஊர்வலமாகப் பத்துநாள் போனா, மார்கழி முடிஞ்சு கடைசி நாளன்னிக்கு பசங்களுக்கு கொடுக்கிற பரிசுல, அதுக்கு சூறாவளிராமன் மாமா எனக்கு சின்ன கிண்ணம் தருவாரா, டபராவா, டம்ளரா அல்லது தொன்னையில வெறும் சர்க்கரைப்பொங்கல் மட்டும் தானான்னு எதிர் நோக்கியது மட்டும் தான்.
எனக்கு இதுவரை பரிசு கிடைத்தது சூறாவளி ராமன் மாமாட்டேர்ந்து தான், அதுவும் பஜனை மடத்தில் மட்டும்தான். கேண்டீன் சூபர்வைசர் மாமா பையன் சம்பத்தும் சிதம்பரம் மாமாவாத்து கிருஷ்ணனும் நிறைய நாள்பஜனைக்குப்போய் பெருசா ஏதோவொரு புது பாத்திரம் வாங்கிடுவாங்க. இது இன்னொரு நாளைக்குவச்சுப்போம்.
எம்கேஆர் மாமாவோட பர்சனாலிட்டி காலனியில எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். அப்பாக்கு அவர் மேல் ஒருபயங்கர மரியாதை. எப்போதும் எம்கேஆர் மாமா பட்டு மாமி அப்பாவோடு பேசும் போதெல்லாம் அந்த மரியாதைகலந்த பாசம் இரு பக்கமும் நன்கு தெரியும்.
நான் சின்னவனாயிருக்கும் போதே ரமா அக்காக்கு கல்யாணம் ஆகி மற்றும் ரவி அண்ணாவும் முன்னரே ஊரைவிட்டு கிளம்பி விட்டனர். அவர்களை நான் ஊரில் அதிகம் பார்த்தது கிடையாது. நான் அதிகம் பார்த்தது சித்ராஅக்கா, சங்கர் அண்ணா மற்றும் நாராயணனை. சித்ரா அக்கா கொள்ளை அழகு. தேவதை மாதிரி இருப்பாங்க. சங்கர் அண்ணாக்கு ஒரு கம்பீரமான நிமிர்ந்த நடை.
MKR நாராயணன் என்னோட எலிமண்ட்ரி ஸ்கூல் கிளாஸ்மேட். அவன் ஓரியண்டல் ஸ்கூல் சேர்ந்ததால, அவனை ஸ்கூல் இடைவேளையிலோ, அல்லது அப்பாவோடு அந்தப்பக்கம் போகும் போது அல்லது ஸ்டாஃப்அசோசியேஷன் அவன் வரும் போது பார்ப்பது பேசுவதுன்னு ஆயிடுச்சு. அவன் 10th முடிச்சவுடனேயேசென்னைக்கு வேறப்போயிட்டான்.
நான் சென்னை லயோலாவில படிக்கும் போது 1984-85ல இரண்டு தடவை அவனை சித்ரா அக்கா வீட்டுவாசல்ல மந்தைவெளியில் பார்த்தது. அப்புறம் தொடர்பே இல்லாமப்போயிடுச்சு.
—-
போஸ்ட் பெருசாயிடுச்சு.
அடுத்த பதிவில் தொடர்கிறேன்
No comments:
Post a Comment