Wednesday, December 8, 2021

காலத்தின் மாற்றத்தில் நமது சுவடுகள்


வானெழுந்த நீர்திவலை போல் கவலைகள்
  தன் கை மீட்டும் நாதத்தில் கரைகின்றன
கம்பிகளில் எழும் ஸ்வரங்கள் அவை
   மீட்டுபவனின் கைவன்மையின் அதிர்வுகளாய்!

எண்ணங்கள் தோன்றும் தினமும் நட்சத்திரமாக
  நடக்கையில் அவை உதிரும் மலர் போல
நினைவுகளில் தோன்றும் வாசல்படிகள்
  காலத்தின் மாற்றத்தில் காணாமல் போயின!

நீயும் நானும் கைகோர்த்து நடந்த வீதிகள்
  பேசும் நமது உறவின் தன்மையை
எஞ்சியிருக்கும் கற்கள் பேசும் நம் வலிகளை
  காலத்தில் மீதியாய் நிற்கும் நாட்களில்!

மண்ணும் பொருளும் மாறும் மனம் போல்
  கடந்து வந்த பாதைகள் அழியாக்கோலம்
காணும் நம் கண்கள் பேசும் கோடி கவிதைகளை!

காலத்தின் மாற்றத்தில் நமது சுவடுகள்!

வாழ்வினிது
ओलै सिरिय ।

No comments: