காலனியில பஜனைமடம் ரெகுலாரகப் போகிறவர்களுக்கு இந்த மார்கழி தனுர் மாசம் சிறப்பான மாசம். பஜனைமட வாழ்வை பின்னாளில் எழுதலாம்ன்னு நினைச்சேன். ஆனால் இன்று மார்கழி 1.
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளில் கார்மேனிச் செங்கண் மதி நிறைய நாராயணனை ஆண்டாள்வழிபட்ட இந்தாள் சீக்கிரமே வந்ததால் இன்றே துவங்குகிறேன்.
நான் 5 வயதிலிருந்து 13-14 வயது வரை மிகுந்த ஆர்வத்தோடு கலந்துகிட்டது இந்த மார்கழி மாத பஜனை. பஜனை ஊர்வலமாக காலை 5.15-5.30க்கு பஜனை மடத்தில் கிளம்பி, மேல் லைன் மற்றும் பிள்ளையார்கோவில் வழியாக வந்து நேராக b line மேட்டு இறக்கத்தில் இறங்கி b line - c line வழியாக வந்து காலனி சுற்றிமெயின்ரோடு வழியாக பஜனை மடத்துக்கு காலை 6.30க்குள் வந்தடைஞ்சுரும்.
மார்கழி மாச குளிரில் காலையில் எழுந்திரிக்கறதே கஷ்டம், இருந்தாலும் குளிச்சுட்டு அந்த குளிரில் நடந்துவரும்போது சில சமயம் பல்கூட நடுங்க ஆரம்பிச்சுரும்.
அப்பா காலையில் 4.30 க்கே எழுந்து அம்மா போட்டுத்தர்ற வெந்நீரில் குளிச்சுட்டு 5.30க்குள்ள பஜனைகிளம்பறதுக்குள்ள அங்க ஓடிடனும்ன்னு பார்ப்பார். அவர் என்னை விட்டுட்டுப் போயிடுவாரோன்னு குளிக்காமகூட அவரோட ஓடுவேன். அப்பவும் சில நாள் எழுந்திரிக்க முடியாம மிஸ்ஸாயிடும் எனக்கு.
அப்பாக்கு லேட்டாகி பஜனை ஆரம்பத்துல கலந்துக்காம பிள்ளையார் கோவிலிலோ அல்லது அஷ்டகிரகம்வரைக்கும் போய் அங்க கலந்து கிட்டா கூட சிவராமன் மாமா ஏதோ சொல்லிடுவாரோன்னு பயம். அவரைக்கண்டா அப்பாக்கு நடுக்கம் தான்.
ராஜா பாகவதர் மாமா, தெலுங்கு சீதாராமன் மாமாவெல்லாம் அப்பாக்கு ரொம்ப தோஸ்த் மாதிரி, ஆனால்சிவராமன் மாமாவைக் கண்டா பயம். பஜனை ஊர்வலத்துல வரும் போது சிவராமன் மாமா எப்ப தன்னைப் பாடச்சொல்லுவார்ன்னு வைட் பண்ணிக் காத்திருப்பார். எப்படியும் ஒரு நாமாவளி பாட சான்ஸ் கிடைக்கும். சிலசமயம் இரண்டு கிடைக்கும்.
சில நாள் கிடைக்கலைன்னா எனக்கு செம ஏமாற்றமாக இருக்கும். என்னப்பா இப்படின்னு அவர்ட்ட சண்டைபிடிப்பேன். அவரோ, ஏண்டா நான் பாடறதோ சில வரி நாமாவளி, அவாயெல்லாம் முழுப்பாட்டு பாடி வர நேரம்வேண்டாமா என்பார். எதையும் ஏமாற்றமாகவே எடுத்துக் கொள்ள மாட்டார். அவர்கள் மாதிரி பாட முடியலை, பாட்டு முறையாக கத்துக்கலைன்னு வருத்தத்தை மறைச்சு வேற மாதிரி சொல்லி சமாதானப்படுத்திடுவார்.
பஜனைல வர்ற மத்தவங்கெல்லாம் அப்பாவை ஜெய் அநுமான் பாட்டைத் தான் பாடச்சொல்வாங்க, ஆனால் அதுகடைசியாகத் தான் பாடனும்பார். அதற்காக வேறு சில நாமாவளிகளையும் முதல் நாள் இரவு டின்னர் முடிஞ்சுதன்னோட ஈசிசேரில் வாசலில் சாய்ந்து படுத்திருக்கும் போது பாடிப்பார்த்துக் கொள்வார்.
அவர் காலடியிலேயே எப்போதும் சுத்திகிட்டிருந்த நான், அவர் தனக்குள் முனுமுனுத்துக் கொள்கிற சிலபாட்டைப் பாடச் சொல்வேன். அது நிந்தாஸ்துதி, அதை பஜனை ஊர்வலத்துலப்பாடக்கூடாதும்பார். எங்கள்வற்புறுத்தலில் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் பாடிக்காண்பிப்பார். அது முருகப்பெருமானை நிந்திப்பதுபோல் துதித்துப் பாடுவது. அந்தப்பாடல் நினைவிருக்கிறது, ஆனால் அவரே வெளியே பாட விருப்பப்படாததால்அதை இங்கே குறிப்பிடவில்லை.
சிவில் பாலு மாமா காலை 4.30-4.45க்கே கிளம்பி ஊர்வலம் புறப்படுவதற்கு முன்பே பஜனை மடத்தைத் திறக்கஓடிடுவார். சூறாவளி ராமன் மாமாவும் அங்கு இருப்பார். அவர் மற்றும் அவர் தம்பி பிச்சுமணி எல்லாம் பஜனைமடத்தில் ரெகுலர்.
பாடல்கள் பாடுவதற்கு எவ்வளவு லெஜண்ட்ஸ் இருந்தனர். வாவ். அது எனக்கொரு பொன்னான காலம் அது. ராஜா பாகவதர், சிவராமன் மாமா, தெலுங்கு சீதாரமன், ஆர்கே சுந்தரம், ஜே பி சாரதி, சந்திரசேகரன்(சுலோச்சனா மாமி), ஆர் சி பிளாண்ட் கல்யாணசுந்தரம் (அவர் அங்கிருந்து இங்க வருவார். அவ்வளவுdedication, involvement), பகவதி, என ஒரு பெரிய பஜனை கோஷ்டியே பாடுவார்கள். இன்னும் நிறைய பேர்பாட இருப்பார்கள், சான்ஸ் கிடைக்க வைட் பண்ணுவார்கள். கூட வர்றவங்க பேரை அடுத்த போஸ்டில்போடுகிறேன். ஹாஸ்டல் ஶ்ரீசைலமே ரொம்ப நல்லாப்பாடுவார், ஆனால் அவரால் ஹாஸ்டல் விட்டு வர முடியாது.
எழுத வேண்டிய பெயர்கள் நிறைய உண்டு. எவ்வளவு முடியுமோ ஞாபகம் வருதோ அவற்றை எழுதுகிறேன்.
இது எல்லாத்தை விட நான் அங்க போவதற்கு முக்கிய காரணம் அந்த சுவையான பொங்கல் அவ்வளவு பெரியதொன்னையில வாங்குவதற்கு.
போஸ்ட் பெருசாயிடுச்சு. மார்கழி மாச போஸ்டை பொங்கல் இல்லாம முடிக்கக் கூடாதுன்னு இன்னிக்குசுருக்கமாக சொல்லி முடிச்சுக்குறேன். நிறைய சுவைபட அநுபவங்கள் உண்டு. எல்லாவற்றையும் எழுதமுடியுமாதெரியலை. பலருக்கு போரடிக்கலாம். குறைத்துக்கொள்கிறேன்.
அடுத்து வரும் போஸ்ட்களில் தொடர்வோம்.
No comments:
Post a Comment