Thursday, December 30, 2021

நாள் அதன் முடிவில் ஒரு துவக்கம்


நாள் ஒன்றின் இறுதியில் வருடம் ஒன்று உதயம்
  உதயத்தின் தினமதில் நாளொரு உறுதிமொழிகள்
பின் சென்றவைகள் முன் நிற்கப்போகின்றன!

எண்ணமும் செயலும் பின் தள்ள இயலாது
  ஆக்கமும் உறுதியும் உதயத்தின் அறிகுறி
மனதின் ஆத்மபலம் எண்ணத்தின் புனிதம்!

வருடம் ஒன்றின் முடிவில் துவக்கம் ஒன்று இயல்பே
  கடந்தவை எதுவாயினும் நினைவில் எழும்முன் நகரும்
வாழ்க்கை அதனைத் துவங்குவோம் புதிய உற்சாகமாய்
எண்ணங்கள் செயல்கள் அலைமோதும் நட்சத்திரங்களாய்!

நாள் அதன் முடிவில் ஒரு துவக்கம்!

வாழ்வினிது
ओलै सिरिय ।

Thursday, December 23, 2021

நினைவுகளில் புரண்டாடும் வயதில் - 15


காலனியில D line வாழ்க்கை நினைவில் மங்காமல் நின்னு போனதற்கு பலகாரணங்கள் உண்டுஅதிலொன்றுதினமும் விளையாடுவதற்கு அங்கு கிடைத்த ஒரு பெரிய பட்டாளம் தான்.


D11 வீட்டை உஷா சாகர் லல்லி காலிபண்ணிப் போன பிறகு அந்த வீட்டிற்கு P ஷண்முகம் மாமா வந்தார்அவர்மனைவிக்கு பக்கவாத நோயால் ஒரு கையிலும் காலிலும் ப்ராப்ளம் இருந்தாலும் மிக கடுமையான உழைப்பாளிஅவங்க.


அவரது பெரிய பையன் சந்திரசேகரன் சிவில் செக்‌ஷன் உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும்பின்னாட்களில்அவர் டி4லும் இருந்தார்அவர் தம்பிகள் ராஜூஜனார்பாலு (கச்சேரி), தாமோதரன் வந்த பிறகு டி லைன்கலகலப்புக்கு விளையாட்டுக்கு குறைவே கிடையாதுஜனார் அவங்கம்மாவுக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணுவான்.


மாரியம்மன் கோவில் பண்டிகை வந்தா போதும்அவங்க வீட்டுப்பின்னாடி தோட்டத்துல மாரியம்மன் மண்பொம்மை ஒன்னு வச்சு பொங்கல் வைக்கறதைச் செய்வாங்கபசங்க சேர்ந்து ரகளை நடக்கும் அங்க.


கேகே ராமன் டோர்னமண்ட் வந்ததுன்னா வீட்டு வாசல்ல எல்லோரும் கட்டை பேட் வச்சு எல்லாரும் பூபந்துவிளையாடுவோம். B line C line பசங்க எல்லோரும் டி லைன்ல தான்மனோபபுள்முரளி கே ராவ்சம்பத்(சின்னக்கன்னு தம்பிமற்றும் அவன் பிரதர்ஸ் சீனு எல்லோரும் இங்க தான் வந்து விளையாடுவாங்கஇந்தலிஸ்ட்ல இருபது முப்பது பேர் பெயருக்கு மேல எழுதனும்டி லைன் பசங்களே ஒரு பெரிய பட்டாளம்.


எங்க வீட்டு வாசல் எதிரில் ஒரு லைட் கம்பம்அது மேலே எப்போதும் ஏறி அந்த காம்பௌண்ட் சுவத்துமேலஉட்கார்றதும்நடக்குறதும்சுவர் தாண்டி எதிர் வீட்டுல குதிக்கிறதும் தினமும் நடக்கும்.


எங்களுக்கு நேரெதிர் வீடு C3 ஜெயராமன் மாமா வீடுஅவங்க வீட்டுல ராஜுண்ணாகோபுண்ணாஉமாலக்ஷ்மிக்காஒரு நாளைக்கு குறைஞ்சது 20-30 தடவையாது அந்த காம்பௌண்ட் சுவத்து மேல ஏறி அவங்கவீட்டு பின்னாடி குதிப்போம்பால் விழுந்துரும்எடுப்போம்அந்த வீட்டுல ஒருத்தர் கூட ஒன்னும் சொல்லமாட்டாங்கஆச்சரியமாக இருக்கும் எப்படி எங்களை விட்டாங்கன்னு.


எங்க வீட்டு வேலியிலிருந்து அந்த லைட் கம்பத்துக்கு கயித்தக் கட்டி கட்டைபேட்ல பால் பேட்மிண்டன்ஆடுவோம்எல்லாப் பசங்களும் ஆடுவதால விளையாட சான்ஸ் கிடைக்கிறதுக்குள்ள போதும் போதும்ன்னுஆயிடும்இதுக்கு நடுவுல கேம் தகறாருதெருவே ஜோ ஜோன்னு இருக்கும்.


அதே மாதிரி செல்வன் சகாய் வீட்டு வாசக்கம்பத்துல கயித்தக்கட்டி இன்னொரு டீம்அப்புறம் அந்த இடம் சரிவராமசகாய் வீட்டு சைடுலடி லைன் பின்னாடி லைன்ல என பல டீம் ஆடினோம்ஏதோ ஒரு இடத்துலஎல்லோருக்கும் கொஞ்சம் விளையாட சான்ஸ் கிடைக்கும்.


ஊரே சந்தோஷமாக இருந்தா கண்ணுபடற மாதிரி ஒன்னு நடக்கும்பாங்க பாருங்கஅது நடந்தது


முன்ன மேல் லைன் இறக்கத்துல சைக்கிளில் வர்றவங்க அந்த மேட்டு இறக்கத்தில் பால் டிப்போல ஆரம்பிச்சுசகாய் வீட்டு வரை ப்ரேக் பிடிக்காம சைக்கிளில் சள்ளுனு வருவாங்கநடுவுல வேகத்தடை அப்ப கிடையாதுயாரைப் பார்த்தாலும் பறந்து கிட்டு வருவாங்க அந்த இறக்கத்துல.


இந்த ரோட்டுல கயிறு கட்டி விளையாடி கிட்டிருந்த கடைசி பசங்க இந்த கேம் முடிஞ்சவுடனே ஒரு நாள்இந்தக்கயிறைக் கழட்டாமப் போயிட்டாங்கநாங்களும் வீட்டுள்ள இருந்தோம்கவனிக்கலை.


வந்தார் ஒருத்தர் வேகமாக மேல் லைன் இறக்கத்துலஇந்த ரோட்டுல கயிறு கட்டியிதைப் பார்க்காம நிமிர்ந்துவந்தவர் கயிறுல அறுபட்டு சைக்கிளிலிருந்து விழுந்து செம அடி அவருக்குவீட்டுலேர்ந்து வெளிய வந்துப்பார்த்தா அவருக்கு நெத்தியில் ரத்தக்காயம்ரத்தம் கொட்டுது


பின்னாடியே கொஞ்சம் நேரத்துல வந்த வாட்ச்கடை அந்தோணி மாமா செம ஆட்டம் ஆடிட்டார்பசங்கஅத்தனை பேர் மேலயும் சத்தம் போடஉசுரு போனா என்னடா பண்ணுவீங்கன்னுநெத்திக்குப் பதிலாககழுத்தில் பட்டிருந்தா என போட்டு வெடிச்சுத் தள்ளிட்டாருபார்த்துகிட்டு பத்து பசங்க நின்னுகிட்டுஇருந்தோம்.


அடுத்த இரண்டு மூனு நாளும் அங்க எல்லாப்பசங்களும் கயிறு கட்டி விளையாடஅந்தோணிமாமா வந்துவேணும்ன்னே நின்னு எல்லோர்ட்டையும் சத்தம் போட ஆரம்பிச்சாரு.


பக்கத்து வீட்டு கே எஸ் கிருஷ்ணன் மாமாவும் அப்பாவும் இந்த தடவை அவர்ட்ட நேரவே பேச ஆரம்பிச்சாங்கஇவ்வளவு பசங்க நம்ம வீட்டு வாசல்ல விளையாடும் போது மேலேர்ந்து வரவங்க தானே மெதுவா வரனும்பசங்கநம்ம கண் முன்னாடி விளையாடறது சேஃப்ஆபின்னாடி எங்கயோ போய் அடிபட்டு கிட்டு வரது safeன்னுபசங்களுக்குப் பரிந்து பேச அவர் இறங்கி வந்தார்அந்தோனி மாமா சித்தப்பாக்கு பக்கத்து வீடு நல்ல நண்பர்அவருக்குஅந்தோனி கோபக்காரன்டாஅவர் வரும் போது கயிற்றைக் கழற்றி விடுங்கடான்னார்அப்பா எங்ககிட்ட இனி நம்ம வீட்டு வாசல்ல கயிறு கட்டி கட்டை பேட் ஆடக்கூடாதுன்னு சொல்லராஜுவும் ஜனாரும் அதைஅவங்க வீட்டுப் பக்கம் நவுத்திகயிற்றின் ஒரு பக்கத்தை அவங்க வீட்டு வேலியிலும்கயிற்றின் இன்னொருபக்கத்துக்கு ஒரு பெரிய கல்லைக் கட்டி சுவற்றுக்கு அந்தப்பக்கம் தொங்க விட்டு ஆட்டம் ஜோராக நடக்கஆரம்பிச்சாச்சு.


கேஎஸ்கே மாமாவும் அப்பாவும் சிவில் பாலு மாமாகிட்டயும் பேபி சகஸ்ரநாமம்ட்டையும் சொல்லி டி லைன்இறக்கத்துல ஒரு பெரிய வேகத்தடையை போட வச்சுட்டாங்கஅதற்கப்புறம் மேல்லைன்லேர்ந்து யாரும்சைக்கிளில் பறந்துவர முடியாம ஆயிடுச்சு.


நாளடைவில் இந்த கட்டைபேட் கேம்களுக்கும் சீசன் மாறிடுச்சு.


பின் வரும் போஸ்ட்களில் தொடர்கிறேன்.

நினைவுகளில் புரண்டாடும் வயதில் - 14


காலனி வாழ்க்கையை அலசும் போது மற்றவர்கள் போடும் பதிவுகளிலிருந்த பல நினைவலைகள்கிளம்பிவிடுகிறதுஇன்று p b sridhar அண்ணா போஸ்ட் பார்த்ததன் விளைவு இந்த போஸ்ட்தலைவலியாகஇருந்தால் நர்ஸ் பத்மாக்கா ஆலோசனை வழங்குவார்கள்நமக்கு மருத்துவம் செய்த மற்றவர்கள் போய்சேர்ந்தாச்சுஇல்லாட்டி மனோஜ் உதவுவான்.


D13ல் மற்றும் B1ல் இருந்த காலத்தில் வீட்டில் எந்த சின்னப்பிரச்சனையானாலும் பஞ்சு சித்தப்பாவே ரிப்பேர்பண்ணிடுவார்அவருக்கு எலக்ட்ரிக்கல், plumbing work எல்லாம் அத்துப்புடிசர்வசாதாரணமாக செய்துடுவார்இல்லாட்டி பக்கத்துவீட்டு சிவில் பாலுமாமாட்ட சொன்னாப் போதும்பத்து மணிக்கு ஆள் வந்துரும்இல்லாட்டிஎங்க லைன் வழியாப் போற யாராவது ஒரு எலக்ட்ரீஷியன்ட்ட சொன்னாப் போதும் அவங்க ஆபீஸ்ல போய்சொல்லிட்டு திரும்பி வந்து ரிப்பேர் பண்ணிடுவாங்கசெம டெடிகேஷன்.


சித்தப்பா பண்றதைப்பார்த்து பார்த்து ஒரு நாள் கை துறுதுறுக்கபத்தாவது படிக்கும் போது டி லைனில்வீட்டிலிருந்த iron box வேலை செய்யாததால்அதைக் கழட்டி ரிப்பேர் பண்ணலாம்ன்னுசொருகிற வயர் plugதிறந்தேன்அது கருகியிருந்ததுசித்தப்பா செய்யற மாதிரி அந்த கருகின வயரைக் கட் பண்ணிட்டு திருப்பிஅந்த 3-pin வயர்களை இணைக்கும் போது சரியாக கவனிக்காம மாற்றி இணைச்சுட்டேன். Plug சொருகும்போது டபார்ன்னு சத்தம்ஃப்யூஸ் போயிருச்சுப்ளக் பாயிண்ட் கருகிடுச்சுசெம பயம்வீட்டுல சொன்னாஅம்மா அடி போட்டுருவாங்க!


நேரா டைம் ஆபீஸ்ல போய் ஃப்யூஸ் போயிடுச்சுன்னு சொன்னேன்மீசை விஜயன் அண்ணன் வந்தார்


நான் பத்தாவது தான் படிச்சுட்டு இருந்தாலும்மீசை விஜயன் அண்ணன்கண்ணன்கர்ணன் (  கருணாநிதி), ராபர்ட்ஸ்பிரபாகரன் மாமா (சில சமயம்உன்னி அப்பா), கல்கத்தா பாலு மாமாமுறுக்கு மீசை வச்ச மாமாஒருத்தர் 40 வீட்டுலேர்ந்து வருவார்; (ராஜமாணிக்கம்ன்னு நினைக்கிறேன்அவர் ஸ்போர்ட்ஸ் ஷார்ட்ஸ் ஷூ/சாக்ஸோடத் தான் வாலிபால் கூட ஆடுவார்இவர்களோடு என்னையும் கடைசி ஆளா ஒரு மூலையில் நிக்கவச்சு சேர்த்துப்பாங்ககல்கத்தா பாலு மாமா மூக்குப் பொடியை உறிஞ்சுகிட்டே அதே கையிலேயே பாலையும்சர்வ் பண்ணுவார்.


இந்த வாலிபால் விளையாட்டால எனக்கு விஜயன் அண்ணனோட பழக்கம் உண்டுஅவர் வீட்டுக்கு வந்து fuse boxஐயும் switch boardஐயும் பார்த்துட்டு என்னிடம் என்னடா பண்ணினேன்னார்அவர்ட்ட ஐயர்ன் பாக்ஸ்கதையைச் சொல்லி காமிச்சேன்அவர் அதைப் பிரிச்சுப்பார்த்துட்டுஏண்டா ஸ்கூல் போகுற வயசுல உனக்குஎதுக்கு இந்த வேலைஇந்த fuse box மட்டும் இல்லைன்னா நீ உசுரோடு இருந்திருக்க மாட்ட இப்பன்னார்.


ஏண்டா இதெல்லாம் நீங்க ஆபீஸ்ல வந்து சொன்னா அடுத்த நிமிஷம் வந்து நாங்கப் பண்ணித்தரமாட்டோம்உசுரு போச்சுன்னா திரும்பி வராதுடான்னார்.


இரண்டு நாள் அவர் இருக்கிற நேரம் ஸ்டாப் அசோசியேஷன் பக்கமே போகலைமூனாவது நாள் எப்போதும்போல் வாலிபால் கோர்ட்டுக்குப் போனேன்அவர் கண்டுக்கலைவிளையாட்டுல சேர்த்துக்கிட்டாங்கஎல்லாம்மறந்து போச்சு.


இனிமையான காலங்கள் அவை.

நினைவுகளில் புரண்டாடும் வயதில் - 13


காலனியில ஆசிரியர்களும் நம்மோடு இருந்ததால நம்மால் அவர்களோடு இயல்பாக இருக்க முடிந்ததுமேலும்சரஸ்வதி டீச்சர் சொந்த மாமியானதால மத்த டீச்சர்களிடம் சில சமயம் ஒரு சில சலுகைகளும் கிடைக்கும்.


TVR சார் வைதீஸ்வரா ஹைஸ்கூலில் ஹிந்து சமய மன்றம் நடத்தி வந்தார்அந்த வகுப்புகளுக்கு நான்எப்போதும் போவேன்நிறைய ஸ்லோகங்கள் சொல்லித் தருவார்அப்படி அவர் சொல்லித் தந்து கத்துகிட்டதுதான் 

‘ நாத விந்து கலாதி நமோ நம

 வேத மந்த்ர ஸ்வரூபா நமோ நம

 கீத கிங்கிணி நமோ நம

 …’

பிற்காலத்தில் இந்த பாடலின் முழு வடிவத்தைப் பார்த்தபோது மலைப்பாக இருந்ததுஅவ்வளவு பெருசுஇந்தவகுப்புகளில் பாதி தான் கற்றுக்கொண்டது நினைவிருக்கிறது.


TVR sirக்கு அப்ப சிலவருடங்கள் முன் தான் ஓபன் ஹார்ட் சர்ஜரி நடந்திருந்ததுஅவர் எப்போதும் கிளாஸ்quarterly, half-yearly பேப்பர்களைத் திருத்த தன்னோட கிளாஸ் மாணவர்கள் யாராவது ஒருவரை தன்வீட்டுக்கு வரச்சொல்லி அந்த பேப்பர்களைத் திருத்தச்சொல்வார்அவர் வீடும் நாராயணராவ் சார் வீடும் என்பஞ்சு சித்தப்பா வீட்டுக்கு எதிர்ப்பக்கம் தானிருந்ததுநாரயணராவ் சார் பையன் பிரசன்னா என்னோட ஒருவயது பெரியவன்அவர் அண்ணன் அப்பவே ஸ்கூலில் லேப் அட்டெண்டராக சேர்ந்து விட்டார்.


TVR sir நான் ஹிந்து சமய மன்ற வகுப்புகளுக்குப் போவதால்ஒரு நாள் என்னை quarterly எக்ஸாம் பேப்பர்திருத்த வரச்சொன்னார்என் கிளாஸ் பேப்பரேஎன்னை பென்சில்ல மார்க் பண்ணச் சொல்லிட்டு அப்புறம் அவர்வந்து சரி பார்த்துட்டு மார்க் கூட்டிப்போட்டுருவார்அவர் போட்ட மார்க்கை கூட்டி டோட்டல் நான் போடனும்.


அப்படி திருத்தற பேப்பர்களைப் பார்த்து அதிர்ந்துட்டேன்கிளாஸ்ல என்னோட நல்லாப்படிக்கிற பசங்கபொண்ணுங்க பேப்பரை நான் திருத்துவதாஅதிர்ந்து போயிட்டேன்அப்போ ஐம்பது மார்க் வாங்குவதே பெரியவிஷயம் எனக்குமனசு ரொம்பவே உறுத்த ஆரம்பிச்சுருச்சுஇரண்டு நாள் போயிட்டு மூனாவது நாள்நின்னுட்டேன்இன்னும் இரண்டு கட்டு திருத்தனும்ஏண்டா வரலைன்னார்அவர்ட்ட உண்மையைச் சொல்லமனசு வரலைகுற்றமுல்ல நெஞ்சு குறுகுறுப்பதைச் சொல்ல தைரியமில்லை.


மனுசன் சொக்கத் தங்கம்சிரித்த முகம்அன்பானவர்அத்தகையவரின் நட்பு கிடைப்பது பாக்கியம் தான்.


அதே மாதிரி விசாலம் டீச்சர் எனக்கு எட்டாவதுக்கு கிளாஸ் டீச்சர்மேத்ஸ் செமையாக சொல்லிக்கொடுப்பாங்கஅவங்க சொல்ல சொல்ல கிளாஸ்லயே நல்லாப் புரிஞ்சுரும்அந்த ஒரு பேப்பர்லையாவது 80 எடுத்துடனும்ன்னு நினைச்சேன். 75க்கு கீழ நின்னு போச்சுஅதற்கப்புறம் அவங்க சொல்லிக்கொடுத்தவிதத்திலிருந்து அவங்க மேல ஒரு தனி மரியாதை வந்துருச்சு.


D3 மாமா மாமி குடியிருந்த போது விசாலம் டீச்சர் சரஸ்வதி டீச்சரைப் பார்க்க வருவாங்கஅவங்களைப்பார்த்தவுடனேயே எழுந்திருச்சு நிப்பேன்அவங்க போற வரைக்கும் உட்காரமாட்டேன்அவங்க போன பிறகுசரஸ்வதி டீச்சர் கிண்டல் பண்ணுவாங்கவிசாலம்அலமேலுபீட்டா டீச்சர் எல்லாம் வந்தா எழுந்து நிக்கறஎன்னைக் கண்டா மரியாதை இல்லைவிசாலத்திடமும் அலமேலுகிட்டயும் சொல்றேம்பாங்கஎதிர்த்துப்பேசினா பிரச்சனையாயிடப் போவுதுன்னு நகர்ந்துடுவேன்.


இனிமையான காலங்கள் அவை.