Tuesday, July 5, 2022

வானம் வண்ணங்களால் நிறைந்த பொழுதில்

வாணவேடிக்கையின் கடைசி துளி முடிந்த பின்னும்
  இன்னும் ஒரு வெடி வருமா என நிற்கையில்
பிறர் திரும்புகையில் மறைகின்றன ஏக்கங்கள்!

வண்ண ஒளிப்பிரளயத்தில் மலரும் முகங்கள்
   ஒவ்வொரு வெடியின் கலப்பிலும் மலரும் பூவானங்கள்
நினைவினுள் அகலும் முன் கரையும் கூட்டம்!

வான்வெளியில் நட்சத்திரங்களை மறைக்கும் வானவெடிகள்
  காலமெல்லாம் காத்திருந்து காணத்துவங்குகையில்
கையைப் பிடித்துக் கொள்ளும் குழந்தை தொலைதூரத்தில்!

சுதந்திர பூமியின் வண்ணங்கள் 
  அண்டவெளியில் பயணிக்கும் பொழுதில்
அமைதியாய் ஒதுங்கிய ஒரு கனம் இது!

வானம் வண்ணங்களால் நிறைந்த பொழுதில்!

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Fuegos artificiales!

No comments: