Tuesday, July 5, 2022

டெக்னிகல் தமிழ்

பையன் இரண்டு வாரம் முன்ன ஒரு பேஷண்டை எமர்ஜென்சி வார்டுக்கு ட்ரான்ஸ்போர்ட் பண்ணியிருக்கான். போற வழியில அந்தப் பேஷண்ட்டுக்கு தமிழ் மட்டும் தான் தெரியும்ன்னு தெரிஞ்சு போச்சு இவனுக்கு.

இவனுக்கு தமிழ் அரைகுறை வேற. எமர்ஜென்சி டாக்டருக்கு அந்த பேஷண்ட் சொல்லறது புரியலை. பையன் இரண்டு பேருக்கும் நடுவுல mediator வேலைப் பார்த்துருக்கான் கொஞ்ச நேரம்.

இதை இரண்டு நாள் கழிச்சு என் கிட்ட சொன்னான். அப்பா அவர் தமிழில் ரொம்ப டெக்னிகலாகப் பேசறார்ப்பான்னான். ஒன்னும் புரியல. அப்புறம் கையில தொட்டு காண்பிச்சு எங்க வலின்னு கண்டுபுடிச்சு டாக்டர் கிட்ட சொன்னேன்னான்.

அப்படி என்னடா டெக்னிகலா சொன்னார்ன்னேன்.

அப்பா அவர் கல்லீரல்ல வலிக்குது கல்லீரல்ல வலிக்குதுங்கிறார். கல்லீரல்ன்னா என்னப்பான்னான்.

இப்ப நான் அவுட்டு. கல்லீரல்ன்னா என்னன்னு மறந்து போச்சு. அது gall bladder ஆ, pancreas ஆ, லிவர்ரான்னு மறந்து போச்சு. பையன்ட்ட பார்த்து சொல்றேன்டான்னேன்.

தேவையேயில்லை. நாங்களே கண்டுபுடிச்சு தேவையான ட்ரீட்மண்ட் கொடுத்தாச்சு, விடுன்னு போயிட்டான். அவருக்கு வேற ப்ராப்ளம்பா விடுன்னு போயிட்டான்.

நமக்கு படிச்சது மறக்காமலிருந்தால்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Técnico tamil!

No comments: