ஒரு மொழியை கற்றுக்கொள்ளும் போது அல்லது எழுதும் போது எவ்வளவுக்கெவ்வளவு அதில் நாம் பிழைகளைக் களைகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அந்த மொழியின் சிறப்பு மட்டுமல்ல, அந்த மொழியில் சொல்லவருவதின் பொருள்/அர்த்தம் கூட மாறாமலிருக்கும். சொல்ல வருவதும் தெளிவாக இருக்கும்.
இப்போது ஸ்பானிஷ் கற்றுக்கொள்ளும் போது வாரா வாரம் quiz மற்றும் டெஸ்ட் வைப்பார்கள். ஒரு சிறு தவறு செய்தால் கூட அதன் முழு மதிப்பெண்ணை கம்ப்யூட்டர் குறைத்து விடும். எந்தவித concessionம் கிடையாது.
போன வாரம் கொடுத்த quiz ஒன்றில் இது மாதிரி கொடுத்து அதை இலக்கணப்பிழையில்லாமல் வாக்கியத்தை முழுமையா எழுத வேண்டும்.
அவர்கள் டெஸ்டில் கொடுத்தது (பெயர் மாற்றத்துடன்) இது மாதிரி இருக்கும்.
Carlos y yo / preocupado / la situación / el aeropuerto.
இதை இலக்கணப்பிழையில்லாமல் முழு வாக்கியமாக எழுத வேண்டும். சில சமயம் அந்த verb/adjectives வருகிற இடத்தில் இடைவெளி விட்டிருப்பார்கள். அதை நிரப்பனும்.
நான் எழுதிய விடை
Carlos y yo estamos preocupado por la situación en el aeropuerto.
சரியான விடை
Carlos y yo estamos preocupados por la situación en el aeropuerto.
அவ்வளவு தான். சிறு இலக்கணப்பிழை. ஒரு letter குறைவு. அர்த்தம் மாறுபடுது/இங்க வாக்கியம் சரியாக முற்றுப்பெறவில்லை. முழு மதிப்பெண் போச்சு.
பலருக்கு இது என்ன சாதாரண விஷயம் தானேன்னு இருக்கும். ஆனால் அதுவல்ல.
இது பதிப்பகத்தாருக்கும், மொழி பெயர்ப்பாளர்களுக்கும், பத்திரிக்கைத் துறையிலிருப்பவர்களுக்கும் இதன் முக்கியத்துவம் புரியும்.
ஆனால் நம்மைப் போல் சாதாரண மனிதர்கள் கற்கும் போதோ எழுதும் போதோ பெரிதுபடுத்தாமல் செய்கிறோம்.
என்னால் அந்த குறிப்பிட்ட மதிப்பெண் பெற முடியாததற்கு இது மாதிரி சிலது காரணமாய் நிற்கிறது. வெறும் அரை மணிநேரத்துளிக்குள் இவற்றை கூர்ந்து கவனித்து 20-25 கேள்விகளுக்கு பதிலளிப்பது, முழு பாரா எழுதுவது தான் சிரமமாக உள்ளது.
தமிழில் எழுதும் போதும் மேலே உள்ளது போல் நான் நடுவில் ஆங்கில வார்த்தைகளைச் சேர்ப்பதும் தமிழ் மொழியின் சிறப்பைக் குறைக்கும். ஆனால் இப்போது தூய தமிழில் எழுதினால் நம்மை பிரமை பிடித்தவராய்ப் பார்ப்பதுவும் இக்காலத்தில் உண்டு.
பின்குறிப்பு: நேற்று எல்லா டெஸ்ட்டும் முடிச்ச பிறகு ஏற்பட்ட சஞ்சலத்தால் நேற்றிரவிலிருந்து பழைய டெஸ்ட் பேப்பர்ஸ் எடுத்துப் பார்த்து வருகிறேன். என்ன தவறு செய்துள்ளேன்னு பார்க்கும் போது பிடிபட்டவைகளுள் ஒன்று இது. சில்லி மிஸ்டேக்ஸ் பிடிபடவில்லை.
எவ்வாறாயினும் கற்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Evitar errores!
No comments:
Post a Comment