Tuesday, July 5, 2022

எல்லோருக்குமே ஒரு அமெரிக்கா

இங்கு பிற நாடுகளிலிருந்து வந்து குடியேறி ஒரு அமெரிக்கப் பிரஜையாவதற்கு பல வருடங்கள் ஆவும். பெரும்பாலோருக்கு அது ஒரு கடினமான பாதை.

ஒரு உள்ளூர் பெண்மணி ஒரு மேடையில் ஒரு தடவை இதைச் சொன்னாங்க:

அமெரிக்கா வந்து செட்டில் ஆகும் பல நாட்டு மைந்தர்கள் குடிமகன்கள் அவர்களது நாடுகளில் தங்களால் சுதந்திரமாய்ச் செயல்பட முடியாமல், பல்வேறு இன, மத, அரசியில், பொருளாதாரச் சூழ்நிலை, போர், சர்வாதிகாரம், அடக்குமுறை, மேற்கல்வி என பல்வேறு வகையான துன்பங்களினால் அதிலிருந்து விடுபட்டு, தேவை எதிர்பார்ப்புகளோடு, தாங்கள் அநுபவித்த கஷ்டங்களிலிருந்து விடுபட்டு, இங்கு வந்து சுதந்திரமாய் தங்கள் விருப்பப்படி வாழ விரும்புகிறார்கள். அதற்காக வருகிறார்கள். அவர்களுக்கு அங்கு அவர்கள் நாட்டில் எதை அநுபவிக்க முடியவில்லையோ, அதை இங்கு அநுபவிக்க முடியும் என்று கருதி வருகிறார்களோ, அதற்கான முழுச் சுதந்திரத்துடன் இந்த நாட்டின் constitution மற்றும் சட்ட திட்டங்கள் உலகிலிருந்து வரும் எந்த ஒரு நாட்டு மக்களுக்கும் அவர்கள் துயர் துடைப்பது மட்டுமல்ல, அவர்கள் விருப்பப்படி இங்கு சுதந்திரமாக வாழ வகுத்துக் கொடுத்துள்ளது. அதைப் பேண வேண்டும். இங்கும் அவர்கள் உரிமையைப் பறிக்கக் கூடாது.

She also said: some people want to live in certain way and it’s not possible to live that way in their country. When they land here they get all those opportunities and at the same time they get the liberty to follow their own habits and including prejudices. We have to let it go as long it doesn’t affect other person’s freedom and personal life.

மேலே உள்ளது அந்தப் பெண்மணி கூறியது. மேலும் நாம் இந்த நாட்டின் பிரஜையாக உறுதி மொழி எடுக்கும் போதும் அமெரிக்க அரசின் ஒரு வீடியோ செய்தி கூட இதை வலியுறுத்துவதாக இருக்கும்.

ஆனால் இப்போது நம் போல் உள்ள சில இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் இங்கு குடியுரிமை பெற்ற பின், அவர்களது பேச்செல்லாம், நமது முந்தைய குடியுரிமை நாடுகளின் மிச்ச சொச்சங்களை இங்கு கொண்டு வருபவர்களுக்கு, இனி விசா கொடுக்கக் கூடாது, குடியுரிமை கொடுக்கக் கூடாது, கொடுத்தவற்றை திருப்பி எடுத்துக் கொள்ள வேண்டுமென்றெல்லாம் அடித்து விடுகிறார்கள்.

இவர்கள் பேசுவதற்கும் மேலே கூறியுள்ள இங்கு பிறந்து வளர்த்துள்ள அமெரிக்கப் பெண்மணியின் கூற்றுக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம். அமெரிக்கா எதிர்பார்ப்பது தனது பழைய நாட்டின் மீதான விசுவாசத்தை அவர்கள் விட வேண்டுமென. அந்த விசுவாசத்தை வைத்துக் கொண்டு இந்த நாட்டிற்கு துரோகம் செய்யக் கூடாதென.

அமெரிக்க குடியுரிமை வேண்டுபவர்கள் மற்றும்   அதைப் பெற்று வாழ்பவர்களெல்லாம் அமெரிக்க constitution மற்றும் அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாழ்ந்தாலேப் போதும்.

இரண்டு நாள் முன் இது என் தம்பி எழுதியது:
Many Indians came to this country with almost nothing. They worked hard and became richer than white Americans. Life is all about opportunities not your skills or brain. You might be super smart but if you don't have opportunities,  you can't come up. Some of the Indian Americans have super ego  that  they think we would have come up in any country. You are right. Go back to India.  India needs your brain power not America. Don't be a traitor to two different countries at the same time.

அப்போது அவன் கூற்று எனக்கு கொஞ்சம் ஓவராக இருப்பதாக உறுத்தியது. அவனைப் போல் நான் எவரையும் திரும்பிப் போ என்று சொல்ல மாட்டேன்.

மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களை அவர்களாகவே ஏற்றுக் கொண்டு வாழக் கற்றுக் கொள்ளுங்கள் என்பது தான். தனக்கு நல்வாழ்க்கை கிடைத்து விட்டது, ஆனால் மற்றவர்களது எண்ணங்கள் நம்மோடு சரிவர ஒத்து வராததால் திரும்பிப் போ, விசா கொடுக்கக் கூடாது, கொடுத்ததைப் பறிக்கனும் என்று சொல்வதெல்லாம் ஒரு குறுகிய பார்வை.

இந்தப் பதிவை ஒரு generalized போஸ்டாக முடித்துக் கொள்கிறேன். தாய் மொழி பேசுவது, உன் மொழியை இங்க பேசற, மொழி சார்ந்த சங்கங்கள் நடத்துற என, மற்றும் நம் குழந்தைகளின் மொழிப் பற்று பற்றியெல்லாம் தொடர்ந்தால் இன்னும் போஸ்ட் பெரிதாகப் போகும்.

அனைவரையும் ஒன்றாய் அமெரிக்காவில் வாழ விடுங்கள்.

அமெரிக்கா உருவான வரலாற்றைப் புரிந்து கொண்டு வாழ்ந்தால்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Estados Unidos dice que es para todos!

No comments: