Tuesday, July 5, 2022

மகனுடன் பயணிப்பதில் ஒரு சுகம்

பையன் இப்ப பார்ட் டைம் வேலையில நிறையவே சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டான். உங்க இரண்டு பேருக்கும் என் முதல் சம்பளத்துல ஏதாவது வாங்கனும்ன்னான். எல்லோருடைய வாழ்க்கையிலும் அம்மா தான் முதல்ல இருக்கனும், எவ்வளவு பிரச்சனையிருந்தாலும், அதுவரைக்கும் என் பக்கமே வராதேன்னுட்டேன். உன்னோட பழசை(ஓரிரு தடவை போட்டதே)யே எனக்கு எல்லாம் புதுசாயிருக்கு எனக்கெல்லாம் 10$க்கு மேல ஒன்னும் வாங்கக் கூடாதுன்னேன். இது நடந்து நாலைந்து மாதம் மேலேயிருக்கும்.

தன் முதல் சம்பளத்துல தன் அம்மாக்குப் பெருசா ஒன்னு வாங்கினான். என் கிட்ட மட்டும் சொல்லியிருந்தான். ஆனால் அம்மிணி அவன் அக்கௌண்ட்ல பெரிய செலவைப் பார்த்து செமையா ஆட்டம் ஆடிட்டாப்புல. அதகளமா அதிரடியாத் தெரியலை. ஏதோ கேர்ள்ப்ரண்ட் புடிச்சுட்டான்னு இரண்டு நாள் என்னை உருட்டித் தள்ளிட்டாப்புல. என்ன சொல்ல, உருட்டல்ல நல்ல தேங்காய் துவையலாச்சு.

அம்புட்டு பணம் போன பிறகு, அவன் மறுபடியும் சம்பாதிக்க நேரமானதால மூனு மாசம் பேசாம இருந்தான். இந்த தடவை ஃபாதர்ஸ்டேக்கு ஊருக்கு வர்றேன்னு சொன்னவன் தந்தையர் தினத்துக்கு விஷ் கூட பண்ணலை. நாமளே போன் பண்ணி ஹலோ சொல்ல வேண்டியதாப் போச்சு.

ஆனால் இந்த தடவை அவனும் அவன் அம்மாவும் ஏதோ குசுகுசு கிசுகிசு அடிக்கடி பேசிக்க, ஏதோ வாங்கியிருக்கான்னு புரிஞ்சு போச்சு. ஃபாதர்ஸ் டே முடிஞ்சு இரண்டு நாள் கழிச்சு வந்தான். அவன் வந்தன்னிக்கு ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலை அவன் வர்ற வரைக்கும் பிரிக்கக் கூடாதுன்னு மிரட்டல் வேற.

வந்து, பார்சலைப் பிரிச்சு, எடுத்து கையில மாட்டிவிட்டு, இதுல பின்னாடி என்ன எழுதியிருக்குப் பாருன்னு வேற பிரிச்சுக் காண்பிச்சான். ஒரே கட்டித் தழுவல்ல உச்சி குளிர்ந்து போச்சு. 

இன்னிக்கு, அது கையில லூசாக இருக்கு, டைட் பண்ண mallக்கு எடுத்துப் போய் belksல டைட் பண்ணி கொடுக்கச் சொன்னேன். அவங்க, நான் இந்த வாட்ச் கம்பெனியில் டைரெக்டாக வேலை செய்யுற ஆள், இது ஸ்பெஷல் ஆர்டர் போல இருக்கு, கடைகளில் கிடைக்காதுன்னாங்க. வாட்ச் பின்னாடி எழுதியிருப்பதைப் படிச்சு அவங்களும் உச்சி குளிர்ந்துட்டாங்க. டைட் பண்ணி கொடுத்ததற்கு பணம் எதுவும் வாங்கிக்க மாட்டேன்னுட்டாங்க.

Thank you for always being on my side Appa!
¡Gracias por estar siempre de mi lado padre !

அவனுடன் பயணிப்பதில் இனியதொரு தருணம்.
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Reloj!

No comments: