ஒரு மணி நேரம் படிக்கப் போறேன் டிஸ்டர்ப் பண்ணாதேன்னு சொன்னா, என்னது இது எப்பப் பார்த்தாலும் இந்த புத்தகத்தோடயே உட்கார்ந்திருந்தா வீட்டுல ஒரு வேலை செய்யறதில்லை, இப்படி அநியாயம் பண்ணா என்ன செய்யன்னு அசரீரி கேட்குது பின்னாடியே!
இங்கு ஜூலை 4 ஒட்டி அனைவருக்கும் விடுமுறை. ஆனால் நமக்கு இன்று இரவுக்குள் இரண்டு quiz மற்றும் ஒரு யூனிட் டெஸ்ட் முடிச்சாவனும். ஒவ்வொன்னும் அரை மணி நேரத்துக்குள்ள முடிக்கனும்ன்னு இருக்கு. நம்ம இழுப்புக்கு ஒன்னு கூட அரை மணி நேரத்தில் முடிவதில்லை.
இரண்டு நாளாப் படிச்சு, இன்று வரை இழுத்தடிக்க வேண்டாமென்று, நேற்று மாலையே முடித்துவிட்டேன். ஆனால் திருப்தியில்லை. ஒரு ஸ்பானிஷ் paragraph கொடுத்து அதிலிருந்து கேள்விகள். ஒரே வாக்கியத்தை அர்த்தம் மாறாமல் எப்படி திருப்பி எழுதுவது. அதே மாதிரி ஒரு வாக்கியத்தை நான், நீ, உன், அவர், அவர்கள், நாங்கள் என எவ்வாறு வாக்கியங்கள் மாற்றி அமைப்பது என பல வகைகளில் எழுதனும்.
யூனிட் டெஸ்ட் மட்டும் ஒரு தடவை சப்மிட் பண்ணியதை மறுபடியும் திருத்திக் கொடுக்க வாய்ப்பில்லை. ஒரு வழியாக நேற்று முடித்து இருப்பினும் மனம் அமைதி கொள்ளாமலிருக்கு. இரவும் பழைய lessons சாப்டரை எடுத்து உருட்ட ஆரம்பிச்சேன்.
முயற்சியில் பின் வாங்க விருப்பமில்லை. எப்படியோ ஸ்பானிஷ் கற்றுக் கொண்டு விட வேண்டுமென ஒரு துடிப்பு. சுலபமாக முடியவில்லை. சிரமமாக இருக்கு.
கல்லூரி வகுப்பில் சேர்ந்து ஐந்து மாதமாகி விட்டது. இப்ப ஒரு ஸ்பானிஷ் பாரா படித்தால் இப்ப அர்த்தம் புரிகிறது. அதை வைத்து பதில் எழுத முடிகிறது. ஆனால் சுயமாக ஒரு முழு பாரா எழுத தடுமாறுகிறது. வகுப்பில் பேச வேண்டும் வேற.
அடுத்த மாதத்தோடு ஸ்பானிஷ் 2 முடியுது. ஒரே வாரத்தில் ஸ்பானிஷ் 3 ஆரம்பமாகிறது. ஒரு பிரேக் எடுத்து நல்லா ரிவைஸ் பண்ணிவிட்டுப் போனால் நன்றாக இருக்கும் போலிருக்கு.
பார்ப்போம்.
கற்பதில் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிவதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Un largo camino por recorrer!
No comments:
Post a Comment