சில வருடங்கள் முன் கார் வாங்கும் போது அவங்க ஒரு கார் சர்வீஸ் கூப்பன் புக்கும் வாங்கிக்க, ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்ன்னு தலையில கட்டிட்டாங்க. 1200-1300$ பாக்கேஜ் அது. எல்லா கார் டீலர்ஸும் இந்த கூப்பன் வாங்கிப்பாங்கன்னு அவங்க சொன்னதால வாங்கினேன். ஏன்னா ஒவ்வொரு தடவையும் ஆயில் சேஞ்ச் பண்ண இவ்வளவு தூரம் வரமுடியாது.
அப்ப 50$க்கு இருந்த ஆயில் சேஞ்ச் எல்லாம் இப்ப 80$-90$ ஆயிடுச்சு.
வேற ஒரு ஊர்ல கார் வாங்கினேன். எப்போதும் வீட்டு பக்கத்துல இருக்கிற டீலர்ஷிப்ல தான் சர்வீஸுக்குப் போவேன். ஒவ்வொரு தடவையும் கார் வாங்கின இடத்துக்குப் போனால் gasoline விலையே இந்த கூப்பனை விட அதிகமாகும். முன்னாடி இந்த கூப்பனை வாங்கிக் கிட்ட லோக்கல் டீலர் கடந்த ஒரு வருடமாக வாங்க மாட்டேங்குறாங்க. அவங்களுக்கு இந்த கூப்பன் பணத்தை கலக்ட் பண்ண இருக்கிற நடைமுறை புரசீஜர்ஸ் அதிகமாக இருப்பதை வச்சு இங்க வாங்கத் தயங்குறாங்க.
அதற்கு நான் என்ன செய்ய முடியும். நான் கட்டியுள்ள பணமே யானை அளவு. இந்த கூப்பன் ஆயில் சேஞ்ச், டயர் ரோடேஷன், ப்ரேக் க்ளீனிங் எல்லாம் கவர் பண்ணனும். ஆனால் இருக்கிற விலைவாசி ஏற்றத்தில் இந்த விலைக்கு இவங்களால் செய்யவும் முடியாது.
ஒவ்வொரு தடவையும் சலிச்சுகிட்டே இந்த கூப்பனை வாங்கிப்பாங்க. நமக்கும் அவமானமாக embarrassing ஆக இருக்கும். கூப்பன் கம்பெனி 67$ தான் கொடுத்துகிட்டு இருந்தான். ஒவ்வொரு தடவையும் நான் எக்ஸ்ட்ரா 30-40 கட்டுவேன். அவங்களும் விருப்பமில்லாமல் செய்வார்கள்.
இன்றும் கார் சர்வீஸ் போனப்ப, அந்த கூப்பன் வாங்க மாட்டேன்னாங்க, எல்லா டிராமாவும் பண்ணாங்க. பொறுமையாகவே ஒவ்வொரு தடவையும் மாதிரி பொறுமையாகவே பதில் சொல்ல வேண்டியதாகப் போச்சு.
முதலில் மாட்டேன்னவங்க, பின்னாடி இதுல 30$ தான் கிடைக்கும் மீதி 50-60 நான் கட்டனும்னனாங்க. இதுல இதுவரை 67$ வந்துச்சு மீதியை நான் கட்டறேன்னேன். அதலாம் முடியாதுன்னாங்க.
பொறுக்க முடியலை. அமைதியாகவே சொன்னேன்: இந்த கார் கம்பெனியோட ஹெட்க்வார்ட்டர்ஸ்க்கு இப்ப நான் போன் பண்ணி கேக்கப் போறேன். இது மாதிரி பாக்கேஜ் விற்கிறாங்க, ஆனால் இதை மற்ற இடத்தில் ஏற்க மாட்டேங்குறாங்க. இது அநியாயம்ன்னு சொல்லப் போறேன்னேன்.
அவ்வளவு தான், அவங்க தொணி இறங்கிடுச்சு. சரி் கூப்பன் கொடுங்க நானே பார்த்துகிறேன்னு கூப்பனை வாங்கிக் கிட்டாங்க.
சர்வீஸ் வைட்டிங் ரூம் போவதற்கு முன், மறுபடியும் அவங்க கிட்ட கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் தொணியிலேயே, do you want me to talk to this service plan company right now?ன்னேன். இல்லையில்ல நானே பேசிக்கிறேன்னு வாங்கிக் கிட்டாங்க.
வைட்டிங் ரூம் பக்கத்தில், கவுன்ட்டர்ல, டீலர்ஷிப்பின் பெரிய சூபர்வைசர் அல்லது மானேஜரைப் பார்க்கனும்ன்னேன். பிரச்சனைகளைச் சொன்னேன். அவங்க பார்க்க விடலை. சரி, கார் ஹெட்க்வார்ட்டர்ஸ்க்கு கால் பண்ணிக்கிறேன்னு போய் உட்கார்ந்துட்டேன்.
இதுல மனசைப் போட்டு அலட்டிக்காம, மீறிப்போனா என்ன 100$ தானே கட்டனும் விடு, இதுக்கு எதுக்கு அலட்டிக்கனும்ன்னு ஸ்பானிஷ் நோட்ஸ் எடுத்துப் படிக்க ஆரம்பிச்சுட்டேன். மனசு ரொம்பவே அமைதியாயிடுச்சு.
ஆனால் அவங்க மனசு நிம்மதியாவலை போலிருக்கு. அந்த சர்வீஸ் மேனேஜரே வந்து, நாங்களே அந்த கூப்பன் கம்பெனியோட பேசிட்டோம். இந்த கூப்பன் வேறு சிலவற்றையும் கவர் பண்ணனும், அது உனக்குத் தேவையில்லை, ஆகவே அவங்க முழுப்பணம் கொடுக்கறேன்னுட்டாங்கன்னாங்க.
நம்ம மனசு இன்னும் நிம்மதியாயிடுச்சு. கடைசியில காரை வாங்கும் போது அவங்களே சொன்னாங்க, அந்த கூப்பன் உனக்கு 106$ கொடுத்திருக்கு, அவங்க இதுவரை இவ்வளவு கொடுத்ததில்லையாம், மத்த சர்வீஸுக்கு ஃபில்டர் மாற்றியதற்கு மட்டும் 68$ கட்டிட்டுப்போன்னு சாவியைக் கொடுத்தாங்க.
ஆச்சரியமாக இருந்துச்சு. முடியாதுன்னவங்க, 30$ மட்டும் தான்னவங்க, அவங்களேப் பேசி 106$ வாங்கியிருக்காங்க.
இதுக்கெதுக்கு ஒவ்வொரு தடவையும் நம்மளை சஞ்சலப்படுத்தனும்ன்னு தெரியலை. நம்ம ராசிபலன் அப்படி.
ராசிபலன் சரியாக வேலை செய்வதால் இயல்பாக இயங்க முடிவதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Servicio de coche!
No comments:
Post a Comment