வசந்தகாலமதனை வரவேற்கவிருந்தோம்
வீட்டினுள் அடைபட்ட செடி கொடிகள்
வெளியே சுவாசத்தை நேசிக்கத் துவங்கையில்
பருவத்தின் கடைசிப் பனியால் உறைகின்றன!
வசந்தத்தை எதிர்நோக்கும் பறவைகள்
சிலிர்த்து சிறகிட்டுப் பறக்கையில்
திடீர் அடைக்கலம் தேடுது
அலகு துருத்தி தன் இறக்கையில்!
நாளதன் மாற்றத்தில் நாடகமாய்ப் போனது
அடுக்கி வைத்த குளிராடைகள்
இந்நாடக நடிகனின் அங்கமாய்ப் போனது!
விடுமுறை கழிந்து கல்விச்சாலைக்கு பறக்கையில்
பயணமது மாற்றத்தின் பாத்திரமாய்ப் போனது
பருவத்தின் நாடகத்தில் பாத்திரமாய் நான்!
வசந்தம் பிறக்குமென நிற்கையில்!
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Temporada de primavera!
No comments:
Post a Comment