புதினத்தில் புதிதாய் தோன்றும் எண்ணங்கள்
நாளடைவில் நினைவுகளாய் மாறிடினும்
இயல்பாய் அமைவது அலைமோதும் பணிகள்!
புதினத்தில் மனிதன் மாறுவதில்லை
மாற்றங்களே புதிதாய் திவிளைகள் போன்று
வருடம் கடக்கும் பாதையில் நம் பயணம்!
புதினத்தின் விடியலில் காலம் மாறுகிறது
காலமாற்றத்தில் படகு போல் திமிறும் நாம்
வாழ்வை இயல்பாய் வாழும் தருணத்தில்
புதின உறுதிமொழிகள் காலம் கடந்தவை!
புதினம் அது ஓர் இயல்பாய் கடக்கையில்!
வாழ்வினிது
ओलै सिरिय ।
No comments:
Post a Comment