அவரவர் நாடகத்தில் நானொரு கதாபாத்திரம்
தோளில் சுமக்க வலிமையும் இல்லை
உதறி விட்டுச் செல்ல மனமுமில்லை
நாடகத்தில் நடிப்பதே சுவை தான்!
ஊதுகின்ற குழலுக்குப் புரிவதில்லை
புகைந்து போன சாம்பலை எழுப்பவியல்வதை!
இற(ர)க்கமதை ஏற்க முடியா மனதில்
படியேற வழிகிடைப்பதில் தோல்வியாகுமே!
மனதிலிருந்து இறங்கும் சொற்றொடர்களில்
வாழ்வின் இரு கோடுகள் நிற்கின்றன!
தடம் அதில் ஏறிப்பயணிப்பது ரயில் வண்டியா
எதிரெதிர் கோடுகள் வாகனங்களின் தடமா!
நாடகமேடையில் எனது கோடுகள் ரயில் சிநேகமாய்!
நாடகமேடையில் வாழ்வினிது!
ओलै सिरिय ।
¡Viajes en tren!
No comments:
Post a Comment