எனது தினசரி மாலைநேர இரண்டரை மணி நேர வாக்கிங் போகிறப்ப, வழியில் ஒரு உள்ளூர்க்காரர் தன்னுடையநாயைக் கூட்டி வருவார். சந்தித்த முதல் தடவை தான் என் பெயரைக் கேட்டார். என் தொழில் மற்றும் இங்குவசிப்பதையெல்லாம் எங்களது முதல் சந்திப்பிலேயே நன்கு விசாரித்து விட்டார். அதிலிருந்து இன்று வரை என்பெயரை மறக்கவில்லை, இரண்டாவது தடவை கூட என் பெயரைக் கேட்டதில்லை. அவ்வளவு ஞாபகம்.
நடுவில் சில நாட்கள் வாக்கிங் போகாமல் பிறகு தொடர்ந்த போது அதையும் விசாரித்தார். எப்போதும் ஓரிருநிமிடம் நின்று பேசிவிட்டுப் போவார். முன்பு இரண்டு நாய்களுடன் வருவார், இப்போது ஒன்று தான். நோயின்கொடுமையில் ஒரு நாய் தவிக்க அதைக் கொண்டு போய் hospicesக்கு விட்டுவிட்டார். இது அவரே சொன்னது.
எப்போதும் அவர் அவரது இந்தியக்கிளையுடன் பணியாற்றுவது பற்றி பெருமையாகச் சொல்வார். இப்போதுதான் அவுட்சோர்ஸிங் யூனிட்ஸோடு பழகுவதால் அதைப்பற்றி பெருமையாகச் சொல்வார். இன்று அவரே ஐந்துநிமிடத்திற்கு மேல் நின்று பேசிவிட்டுப் போனார்.
உன் பெயரை கடைசி பெயராகக் கொண்ட ஒருவரோடு போன வாரம் உரையாடினேன் என்றார். நான் என் பெயர்தென்னகத்தில் (தமிழகம்ன்னு சொல்லலை) பரவலான பெயர் என்றேன்.
அவர் மேலும், தான் பணி செய்யும் அலுவலகம் மூலமாக உலகம் முழுவதும் 75 இஞ்சினியர்களைப் பணியில்அமர்த்துவதாகச் சொன்னார். இப்போது தென்னமெரிக்காவில் அந்த ஊர் இஞ்சினியரையே நியமித்து விட்டேன், புதிதாக வேற இடத்தில் தேட வேண்டிய அவசியமில்லை என்று சந்தோஷமாகச் சொன்னார்.
சரி, இதை வச்சு நம்ம உறவினருக்கு வேலை கேப்போமான்னு நினைச்சேன். அதுக்குள்ள பெரிய குண்டைத்தூக்கிப்போட்டார்.
அங்க இந்தியாவில் வடஇந்திய ஆள் இந்த தென் இந்தியனை எடுக்காதேங்கறான், இந்த தென்னிந்தியன் அந்தவடக்கு ஆளை நம்பாதே, அவன் லாஸ்ட்நேம் பாரு, நம்பத்தகுந்ததல்லை, அவன் பேச்சைக்கேட்காதேங்கிறான்.
இவங்க எப்படி வேலை செய்யறாங்கன்னு எங்களுக்குத் தெரியும், அவங்களுக்கு ஒருத்தரொத்தரோடவேலைத்திறமை பற்றி தெரியாது, ஆனால் வேறவற்றை தேவையில்லாமல் காரணம் காட்டுகிறார்கள். ஒருவடக்கு ஆளே இன்னொரு வடக்கு ஆளின் லாஸ்ட்நேம் வச்சு வேறு விதமாகப் பேசறாங்க, எப்படி வேலைசெய்கிறார்கள்ன்னு தெரியாம, திறமைக்கு மதிப்பில்லாமப் பேசறாங்கங்கிறார்.
நான் ஏதோ உளற, அவர், நானும் நீயும் ஒன்னா இருந்தாக் கூட அரசாங்கங்கள் விடாது போலிருக்கேன்னுசொல்லிட்டுக் கிளம்பிட்டார்.
இனி சந்திக்கும் போது எப்படி பேசுவாரோத் தெரியலை. நடைபயணங்கள் தொடரும், சந்திப்பும் தொடரும்.
கசப்பான அநுபவங்களைக் கேட்பதிலும் அதை அசை போடுவதிலும்
வாழ்வினிது.
ओलै सिरिय ।
¡Piensa como un nacional!
No comments:
Post a Comment