இந்த இஸ்பானியோல் மொழியை இங்கிலீஷ்காரன் மேல இருக்கிற கடுப்புல கண்டுபுடிச்சாங்களோன்னு ஒரு சந்தேகம். உலகில் இந்தப்பக்கம் பல நாடுகளில் பேசுகிற மொழி இது.
இன்னிக்கு ஒரு டெஸ்ட் வச்சாங்க. அதன் தாக்கம் இப்ப தூக்கத்துல கூட இடிக்குது.
எத்தனை மணிக்கு ஸ்பானிஷ் கிளாஸ் ? ( மாலை 6.25)
கிளாஸ் ஆரம்பிக்கிற நேரத்தை அப்படியே அந்த மொழியில எழுதனும். ஓலையைக் கிழிச்சு கீறிப்புடிச்சி எழுத வேண்டியதாகிடுச்சு.
சப்ஜக்ட் + verb + டைம்.
கிழிஞ்சது போங்க!
¡La class de español es a las seis y veinticinco de la noche!
(இதைச் சரியான்னு செக் பண்ணனும்)
இதைக் கிளாஸ்ல நம்மளைப் படிக்கவும் உட்டுடுவாங்க! நம்ம உச்சரிப்பைக் கேட்டு நமக்கே சிரிப்பு வரும்.
முன்பெல்லாம் ஸ்பானிஷ் டிவி சேனல் பார்க்கும் போதெல்லாம் ஏதோ கடக்கு முடக்குன்னு பேசறாங்கன்னு சேனலை மாத்திடுவேன். இந்த மொழியை கடந்த இருபத்தைந்து வருடமாக கேட்டுகிட்டு இருக்கேன். ஒரு வார்த்தை அவங்க சொல்றது புரியாது.
இப்ப ஒரு மாசமாக கத்துக்கும் போது, ஸ்பானிஷ் யூட்யூப் வீடியோ பார்க்கும் போது அந்த வார்த்தைகள் மற்றும் அவங்க சொல்ல வருவது புரிகிறது.
உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கு. பையன் கூட ஸ்கூலில் படிச்சான். அன்னிக்கு ஏர்போர்ட்ல announcements வரும் போது, அப்பா அவங்க சொல்றது புரியுதுப்பான்னான். இந்த மொழி முறையாகப் படிக்காமல் வராது போலிருக்கு.
இப்போது சந்தோஷமாகக் கேட்பதில் வாழ்வினிது!
ओलै सिरिय ।
¡Feliz de aprender!
No comments:
Post a Comment