Saturday, March 5, 2022

சொல்வன அறிந்து சொல்

ஒரு நாட்டின் பொருளாதார நலத்தின்பாற் அக்கறை கொண்டுள்ளவர்கள், அனைவரையும் தனது கார்களில் பெட்ரோல் டீசலை நிரப்பிக் கொள்ளச் சொல்வது, அதுவும் வருங்காலத்தில் பதவிக்கு வர வாய்ப்புள்ளவர்கள் சொல்வது அவர்களது அறியாமையையே வெளிப்படுத்துகிறது.

இது மறைமுகமாகப் பதுக்கிக் கொள் என்று சொல்வது போல் உள்ளது.

மக்கள் அவ்வாறு செய்யத் துவங்கினால், அது இடைக்கால பொருளாதார நஷ்டத்திற்கு மட்டுமல்ல, முறையற்ற பாதுகாப்பற்ற வழியில் சேமிக்கும் எரிபொருள்கள் விபத்துகளை உருவாக்கவும் முற்படும். அதற்கு யார் பொறுப்பேற்பது. அதனால் ஏற்படும் சப்ளைச்செயின் இடைஞ்சலால் ஏற்படும் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்திற்கு யார் பொறுப்பேற்பது.

ஆள்பவரைப் பிடிக்கவில்லையென்றால் ஜனநாயகத் தேர்தல் முறையில் வீழ்த்த முயல்வது தான் சரியாக இருக்கும்.

இன்றைய போர்க்கால சூழ்நிலையில் கச்சா எண்ணெய் விலை ஏறுவது மட்டுமல்ல அனைத்து வகை எரிபொருள்கள் மற்றும் விலையேற்றம் தவிர்க்க இயலாது. இங்கும் ஏறிக்கொண்டுள்ளது.

பெட்ரோல் டீசல் பதுக்குவதால் நீங்கள் வீழ்த்தப்போவது ஒரு அரசை அல்ல. அதே ஏழை மக்களை என்று எப்போது உணரப்போகிறீர்கள்.

ஒரு கேஸ் பைப் லைன் இங்கு உடைந்தால், இங்கு தட்டுப்பாடு வரும்ன்னு மக்கள் உடனே வேகமாகப் போய் தங்கள் கார்களை நிரப்பிக் கொள்வார்கள். பெட்ரோல் பங்க் ஆட்கள் வசதியாக விலையை ஏற்றிக்கொள்வார்கள். ஒரு வாரத்தில் சப்ளை சரியாகிடும். அதற்குள் இந்த இடைப்பட்ட காலத்தில் மற்ற சப்ளைச்செயின் அடிபட்டு பிற பொருட்களின் தட்டுப்பாடும் விலையேற்றமும் தவிர்க்க இயலாதாகி விடும்.

ஒருவர் ஒரு சிறந்த அரசியல்வாதியாக வளர்வதற்கு கொஞ்சம் பொருளாதார விளைவுகளை அறிந்து பேசுதல் அவர்களது வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.

எதிரியை வீழ்த்த மக்களின் எதிரியாய் வேலை செய்வது நல்லதல்ல. ஜனநாயகத்திற்கு ஆபத்து.

பொருளாதாரம், அரசியல் பொருளாதாரம் கற்பதால்

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Deberíamos aprender economía!

No comments: