அருகாமையில் வசிக்கும் ஒருவர் தான் போட்ட ஊறுகாயை ருசிக்க சேம்பிள் கொடுத்தார். செம எண்ணெய்.
போகும் போது நான் வாங்கி வைத்திருக்கிற ஒரு பெரிய கடலையெண்ணைக் கேனை பார்த்து விட்டு, என்ன இவ்வளவு பெருசா வாங்கியிருக்கீங்க நல்லதுல்லையேன்னார். காஸ்ட்கோவில எல்லாமே பெருசு தானேன்னேன். ஏதோ மனசுல நினைச்சு கிட்டுப் போயிட்டார்.
இரண்டு நாள் கழிச்சு ஃபோன் பண்ணினார். மத்த எண்ணைய் சாப்பிடறதை விட கடலையெண்ணையே பரவாயில்லையேன்னு நானும் வாங்கிட்டேன். அதுலேர்ந்து எண்ணைய் எடுக்க கஷ்டமாக இருக்கு என்ன பண்றீங்கன்னார். (ஙே ஙே)
பக்கத்திலுள்ள ஆட்டோ பார்ட்ஸ் கடையில ஒரு பம்ப் இருக்கு. அதை உள்ளவிட்டு அமுக்கினா ட்யூப் வழியா வருது. இங்க நம்ம ஊர் கெரசின் எடுக்கிற மாதிரி funnel கிடைப்பதில்லை, ஆர்டர் தான் பண்ணனும்ன்னேன். இது நல்லாயிருக்கு. மீன் தொட்டி க்ளீன் பண்ணக்கூட இன்னொரு வேக்யூம் ட்யூப் வச்சுருக்கேன். அது மாதிரி வாங்கி உபயோகித்தால் ஈசியாக இருக்கும்ன்னேன்.
நீங்க சொல்ற எதுவுமே ஃபுட் க்வாலிட்டிக்கு தகுந்ததில்லை, ஆனால் ஐடியா கிடைச்சுருச்சுன்னு போனை வச்சுட்டார். கடுப்பாயிட்டார் போல.
இன்னிக்கு தோட்டத்துல கீழ கிடந்த இலைகளைப் பெருக்கி அள்ளிப் போட்டுகிட்டு இருந்தேன்.
மனுசன் வந்து ஒரு சஜஷன் வேணும்ன்னார். கேட்டேன். பிறகு சொன்னேன். அதெல்லாம் புது கன்ஸ்ட்ரக்ஷனுக்கு. நாம அதுல பணம் போடறது வேஸ்ட் ஆஃப் மணின்னேன்.
அதுவொன்னும் வேஸ்ட் இல்லைன்னு, கான்வெர்சேஷனை அங்கிட்டே நிப்பாட்டிட்டு வெடுக்குன்னு போயிட்டார்.
அப்படி என்னயா பெருசா சொல்லிட்டேன்.
அம்மிணி கிட்ட இன்றைய கதையை இன்னும் நான் வாயைத் திறக்கலை. மத்ததைச் சொன்னப்பவெல்லாம், உன் வாயை வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டீகளா, ஊர் சனத்தொட நான் வாழனும்ன்னாப்புல. இதுக்கு என்ன விழுமோ தெரியலை!
கிழக்கு மேற்கா வீட்டு வாசல் இருந்தால் மனுசங்க எண்ணங்களும் அப்படியே வேலை செய்யுதே! எப்படியா அது.
உண்மையைச் சொன்னா திட்டறாக, பிறவு அதையே செய்யுறாக, நடுவுல நான் ஏன்யா மாட்டனும்.
ஏதோ நம்ம ராசி இப்படி சரியாகப் போவதால்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Di la verdad!
No comments:
Post a Comment