ஹிந்தி கத்துகிட்டு என்ன பானிபூரியிம் பான்பராக்குமா விற்கப் போறோம்ன்னு பலர் அவமானப்படுத்தினாங்க. நம்ம புள்ளைங்க அதை கத்து வச்சுருந்துதுகன்னாக்க போர் சூழலிலிருந்து தப்பி வந்தவங்க, இப்ப பேசி சில பேராவது வெளியாட்டிலிருந்து சீக்கிரம் வந்திருக்கலாம். ஹிந்தி பேசுபவர்களை அவமானப்படுத்தியதன் விளைவுகளைப் இப்பப் பார்க்கிறோம். ஹிந்தி பேசாத மக்களை ஒதுக்கி வைப்பதும் பிரிவினைவாதமே. 65-70 கோடி மக்கள் பேசும் ஒரு மொழி, தன் தாய் மொழி தவிர ஹிந்தியும் பேசுபவர்கள் அதிகம்.
ஒரு நாட்டில் அனைவரும் ஒன்றே என்கிற கோஷத்துடன் நாட்டையும் நாட்டு மக்களையும் வளர்க்காமல், வடக்கு தெற்கு வடகிழக்கு என்று பிரிவினைவாதம் பேசி, மொழி பேதத்துடன் வளர்ந்த நாட்டில் ஆபத்து காலத்தில் அவதியுறப் போவது நம் பிள்ளைகளே!
இன்று பாவம் நம் பிள்ளைகள் அத்தகைய வடக்கு தெற்கு பாலிடிக்ஸின் அவலத்தை நேரடியாகப் பார்க்கிற நிலமை.
ஒரு நாட்டின் பிரதமரை கோ பேக் கோ பேக் என்று அவமானப்படுத்தியவர்கள், இன்று அவரிடமே போய் நிற்கும் போது அவர் கோ பேக் என்று சொல்லாமல் இருந்தால் நமக்கு மரியாதை. இதையே சீனா ரஷ்யா கொரியா மற்றும் அரபு நாடுகளில் அந்நாட்டுத் தலைவர்களை இவ்வாறு அவமானப்படுத்தியிருந்தால் நம் உசுரு நம் கையில் இருக்குமான்னு உத்திரவாதம் இருந்திருக்காது. இருக்கிற ஜனநாயகத்தை தவறாக உபயோகித்து கெடுத்துக் கொண்டால் அவதியுறப்போவது நாம் தான்.
உக்ரைன் போர் பல நாடுகளில் பலவித மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது. நாம் வாழ்கிற நாட்டில் இருக்கும் அரசாங்களின் கொள்கை படி பார்த்து நடந்து கொள்வது அவரவர்க்கு அவசியமாகப் போகிறது.
அனைத்து வகைப் பிரிவினைவாதங்களும் உடைபடும் நேரம் வர வேண்டிய காலம்.
ஒன்றாய் வாழ்ந்தால்
வாழ்வினிது!
ओलै सिरिय ।
¡Vivir unidos!
No comments:
Post a Comment