Tuesday, November 23, 2021

காலமதைத் தேடும் குணம்

 

பொழுது போகவில்லை மனமோ கெஞ்சுகிறது
  அலையதன் அழகில் அமர்ந்திருந்தாலும் சலனமில்லை
வீசும் காற்றில் இளைப்பாற மறுக்கும் குணம்!

தன் நிலை தேடி தவமிருந்தாலும் தவிக்கும் இமைகள்
 வீசுகின்ற புயலில் அசராத கொடி போன்று
எளியதொரு விளக்கின் பிரகாசத்தில் குறுகும் குணம்!

ஆடிய பெருங்காற்றில் அவசரமின்றி தவிக்கும் உதடு
  ஒட்டிய கயிற்றுள் இறுக்கும் கைகள்
தட்டிவிடும் திவிலை போன்று பஞ்சாய் குணம்!

எட்டிய தூரமெல்லாம் தேடியும் கிடைக்காத துணை
  பஞ்சணைக்குள் உறங்கும் போது மேல் விழுந்த கை
நடந்து வந்த காலம் இதுவென்று சொல்லும் குணம்!

காலமதைத் தேடும் குணம்!

வாழ்வினிது
ओलै सिरिय ।

No comments: