Thursday, November 25, 2021

காலமாற்றத்தில் காணும் போது

1980களில் கல்லூரி மாணவனாக இருந்த போது கல்லூரிப் பேராசியர்களில் சிலர் போதிப்பவராக, ஆலோசனை கூறுபவராக, வாழ்க்கைக்கு வழிகாட்டிச் செல்பவர்களாக சொல்லித்தந்தனர்.

அதே நேரத்தில் கல்லூரி நேரம் தவிர மற்ற நேரத்தில் அரசியல் பாடம் கற்றுத் திரிந்த காலத்தில் அரசியல் களத்தில் அவர்கள் போதித்தது சுய விமர்சனம், நல்லது தவறு ஆய்ந்து அறிதல், பொது வாழ்க்கை குறைபாடுகள் , சமுதாய மாற்றங்கள் பற்றி அறிந்து வளர்ந்தேன்.

இன்று 35-40 ஆண்டுகள் கழித்து, எல்லா தொடர்பும் போன பிறகு ஒரு சுயசார்பு வாழ்க்கை சுயநலமாக வாழ்ந்த பிறகு, இப்போது அதே களங்களின் ஆட்களை இணையத்தில் பார்க்கும் போது கூட அரசியல் பாடம் கற்றவர்களும் சரி, ஏனையவர்களும் சரி, இன்று அதே பாடங்களை அவர்கள் மறந்து போய் சுய விமர்சனம் என்றால் மற்றவர்களை வசை பாடுவதாக மாறி, நல்லது கெட்டது எல்லாம் கெட்டது நல்லதாக ஆய்ந்தறிந்து, தன் தோல்விகளுக்கு காரணம் மற்றவர்களின் வளர்ச்சி மற்றும் வளர்ப்பு முறை என்று முன் முடிவுகளோடு உலாவி வருவதைப் பார்க்கும் போது

மாற்றம் என்பது எப்போதும் மாறிக் கொண்டு தானிருக்கும், காலத்தின் மாற்றத்திற்கு ஏற்றவாறு மாறுவதற்கான சுய விமர்சனத்தோடு உலாவ வேண்டும் என்ற ஆவலோடு வாழ்வதில் தான்
வாழ்வினிது
ओलै सिरिय ।

No comments: