பள்ளிக்கூட இளம் மாணவர்களிலிருந்து வாலிபர்கள் வரை அவர்கள் பிஞ்சு மனதில் இடம் பிடித்த மிகவும்பிரபலமான பாடகர் இங்க!
இரண்டு வருடம் முன் பையன் பத்தாவது படிக்கும் போது ட்ராவிஸ் ஸ்காட் சார்லட் நகரில் வந்து பாடினார். அப்பபையனும் அவன் கிளாஸ்மேட்டும் இதற்காக சார்லட் நகர் போக இரண்டு மாதமாக யாருக்கும் தெரியாம திட்டம்போட்டுகிட்டு இருந்தாங்க!
எழுவது என்பது டாலர் டிக்கட் பத்தி அரைகுறையாக காதில் விழ, மோப்பம் பிடிச்சுட்டேன். பையன்ட்ட என்னவிஷயம்ன்னு கேட்க மறைச்சுட்டான்.
பையனோட நண்பன் இளம் வயது மிருதங்கம் கஞ்சிரா வித்வான். இரண்டிலும் அவன் கை விளையாடும். ஆனால் அவனுக்குப் பிடித்த பாடகன் ட்ராவிஸ் ஸ்காட். அவன் வீட்டுல அநுமதிக்கலை.
பசங்க இரண்டு பேரும் வீட்டுல சொல்லாம டிக்கெட் வாங்கிட்டாங்க! என் கிட்ட வந்து ஒரு வாரம் கழிச்சு வந்துஉண்மையைச் சொல்லி, நாங்க இரண்டு பேரும் இங்கிருந்து சார்லட் நகரத்திற்கு ட்ரைன்ல போயிட்டு அடுத்தநாள் காலை ட்ரைன்ல வந்துடறோம், அவன் வீட்டுல விட மாட்டாங்க, ட்ராவிஸ் பத்தியெல்லாம் உங்களுக்குஒன்னும் தெரியாது, இதையெல்லாம் உங்களுக்கு புரிய வைக்க முடியாது, நாங்க போகனும்ன்னான்.
பக்குன்னுச்சு. இளம் வயது, பள்ளிக்கூடத்துல பத்தாவது படிக்கிற பசங்க, இந்த ம்யூசிக் ப்ரோக்ராம்போறேங்கிறாங்க, ப்ரோக்ராம்ல மத்தவங்கெல்லாம் குடிப்பழக்கத்திலும் போதை பொருளிலும் சகஜமாகஉருளற இடம், இவன்களை எப்படி அனுப்பறதுன்னு வயறு கலக்க ஆரம்பிச்சுருச்சு.
வீக் டே வேற, பள்ளிக்கூடத்தை கட் பண்ணிட்டு போக தயாராயிட்டங்க வேற!
அந்தப் பையனோட அப்பா பிரபல மிருதங்க வித்வான். அவர் வாசிக்கும் போது அவர் முகத்தோட அழகு, அந்ததேஜஸைப் பார்க்கனும். அநுபவிச்சு மிருதங்கம் வாசிப்பார்.
நேரா அவர் வீட்டுக்குப் போயிட்டேன். போன்ல பேசினா வொர்க் அவுட் ஆகாது. பசங்க இந்த வயசுல தவறானவழிக்குப் போகாம இருக்கனும்ன்னா நாம தான் அவங்களுக்கு தகுந்த படி நடந்துக்கனும். அவரை சம்மதிக்கவைக்க கஷ்டப்பட வேண்டியதாயிடுச்சு. நானே அவங்க இரண்டு பேரையும் கூட்டிட்டுப் போய் நானே கூட்டிட்டுவர்றேன். அவங்களை என் கிட்ட விடுங்கன்னு விடாம்பிடியா சம்மதிக்க வைச்சேன். மனசே வராம விட்டார். ஒரேபையன், ஆசாரமாக வளர்த்து தன்னோட கலையையும் அவனுக்குச் சொல்லிக் கொடுத்து அவனையும் சிறந்தவித்தகனாக்கியிருக்கார். நம்ம கலாசாரம் போயிடப்போவுதுன்னு பயம். என்னை நம்பி அனுப்பினார்.
இரண்டு பசங்களையும் கூட்டிப் போனேன். சார்லட் பேங்க் ஆப் அமெரிக்கா ஸ்டேடியம். பசங்களை எப்படிதனியா விடறது, நாமும் ஒரு டிக்கெட் வாங்கி உள்ளப்போயிரலாமான்னு ரொம்ப யோசிச்சேன். இன்னொருபக்கம் நாம உள்ள போயி பசங்க சந்தோஷத்தைக் கெடுத்தறக் கூடாதேன்னு வேற இருந்துச்சு.
மாலை 5 மணிக்கு அவன்களை க்யூவில் விட்டேன். பல தடவை சொல்லி அனுப்பிச்சேன், கரெக்டா இரவு 11 மணிக்கு வெளிய வந்துரனும். திரும்ப 3 மணி நேரம் ஓட்டிப் போவனும், அடுத்த நாள் வெள்ளிக் கிழமைஉங்களுக்கு ஸ்கூல் இருக்கு, எனக்கு ஆபீஸ் போகனும், ஊர் திரும்பி ஒரு இரண்டு மணி நேரமாவதுதூங்கினாத் தான் நீங்க ஸ்கூல் போக முடியும்ன்னு சொன்னேன். சரிசரின்னு சொல்லிட்டு கண்டுக்காம உள்ளபோயிட்டாங்க!
வெளிய கார் பார்க் பண்ணிட்டு ரோட்டுல நடந்து பார்த்தேன். இரவு மக்கள் நடமாட்டம் அங்கு நல்லவர்களாகஇல்லை. போதைப் பொருள் மற்றவையெல்லாம் சாதாரணமாக இருக்க, பக்கத்தில் வந்து பேச வருபவர்களிடம்என்னோட பர்ஸ் போயிரும்ன்னு தோணிச்சு! இடம் சரியில்லை. காரை எடுத்து வேற ஒரு ரெசிடென்சியல்ஏரியாலப் போட்டுவிட்டு அங்கு காரை விட்டு இறங்கலை.
பசங்க இரண்டு பேருக்கும் டெக்ஸ்ட் பண்ணி இடம் சரியில்லை வந்துருங்கன்னு பத்தரை மணியிலேர்ந்தேடெக்ஸ்ட் பண்ணி போன் பண்ணிப் பார்த்தேன். வர்றேன் வர்றேன்னு சொல்லிகிட்டு கான்சர்ட் முடிஞ்சு நடு இரவு1 1/2 -2 மணிக்கு வந்தானுங்க! வீடு திரும்ப காலை 5 மணி ஆயிடுச்சு. ட்ரைன்ல வர்றேன்னு சொன்னவங்களைநம்பி விட்டா அவ்வளவு தான்.
என்னடா இப்படி லேட் பண்ணிட்டீங்க, வெளிய என் நிலமை இவ்வளவு மோசமாக இருக்கு, ஏண்டா இப்படிஎல்லாம் பண்றீங்கன்னா, உள்ளயும் அப்படித் தானிருந்துச்சு, நாற்றம் சகிக்கலை, இருந்தாலும் சந்துல புகுந்துமேடைப் பக்கத்துல ரொம்ப கிட்டக்கப் போய் டான்ஸ் ஆடினோம்ங்கிறாங்க!
சரி பசங்க சந்தோஷமாக இருக்காங்களேன்னு அரைகுறை தூக்கத்துல வந்து சேர்ந்தோம். அவன்களுக்கோஅவங்க இளவட்டத்துல பள்ளி மாணவர்களிடையில் ஏதோ பெரியதாக சாதித்ததாகப் பெருமிதம். பூரிப்போடசந்தோஷமாக பேசிகிட்டு வந்தாங்க!
இன்னிக்கு பையன் போன் பண்ணினான். அப்பா அன்னிக்கு நாங்க சொல்லி எங்களை ட்ராவிஸ் ஸ்காட்ப்ரோக்ராம் கூட்டிப் போன, இன்னிக்கு ஹூஸ்டன்ல என்ன ஆயிருக்குப் பாருன்னான். அன்னிக்கும் நாங்கஇதையேத் தான் பண்ணினோம், முந்தித் தள்ளி நெரிச்சுகிட்ட ஸ்டேஜ் முன்ன போயி ஆடினோம், இன்னிக்கும்அதே மாதிரி, ஆனால் அன்னிக்கு ஒன்னும் ஆவலைன்னான்.
இன்னிக்கு ஹூஸ்டனில் நடந்த அதே ட்ராவிஸ் ஸ்காட் ப்ரோகிராமில் அதே மாதிரி நடந்திருக்கு. ஆனால் 14-25 வயதில் பல பேர் கூட்ட நெரிசலில் சாவு. கடவுளே! இவ்வளவு நெரிசல் சாவா!!
சின்னப் பசங்க மனசுல சின்ன வயசுல ஊருக்கு ஏற்ற மாதிரி அபிலாஷைகள் ஆட்டங்கள் பாட்டங்கள்வேதனைகள்.
இன்னிக்கு நான் கூட்டிப் போய் வந்த அந்த இரண்டு பசங்களும் நல்ல காலேஜ் நல்ல படிப்புல சேர்ந்துஇரண்டு-மூன்று வருடம் கழிச்சு அவங்க எண்ணத்தைச் சொல்லும் போது கேட்கும்
இவ்வாழ்வினிது
ओलै सिरिय ।
No comments:
Post a Comment