Sunday, November 28, 2021

நினைவுகளில் புரண்டாடும் வயதில் - 1


காலனி வாழ்க்கை மாதிரி நமக்கு கிடைத்த அந்த சிறந்த வாழ்க்கையை அப்பப்ப நினைச்சுப் பார்த்தாபுல்லரிக்கும்.


1970களில் D13 வீட்டிலிருந்தப்ப காலையில ஏழு மணிக்கு எழுந்து வெளிய வந்தா ஒன்னா அரச மரத்தடியில்சகாய்செல்வம்மனோ மற்றும் மற்றவர்களோட அன்றைய காலை துவங்கும்இல்லாட்டிகே கே ராமன்டோர்னமெண்ட் முன்னவோ அல்லது ஸ்டாஃப் அசோசியேஷன் annual day வருவதற்கு முன்போஅசோசியேஷன் கிரவுண்டல பூபந்து (ball-badminton) காலையில சீக்கிரமே விளையாட ஆரம்பிச்சுருவாங்கஅங்க ஓடிருவேன்.


காலையில எட்டு மணி ஷிப்ட் ஆரம்பிக்கிறதுக்குள்ள வேகமாக காலையி 6.30-7.30 மணிக்கே மேட்ச்வச்சுருப்பாங்க அதைப் பார்க்க காலையில சீக்கிரம் எழுந்து போவேன்இந்த கிரவுண்ட்ல ஆடின பால்-பேட்மிண்டன்டென்னிஸ்வாலிபாலுக்கெல்லாம் காலனி விளையாட்டு வீரர்களுக்குல்லாம் ஆடியன்ஸே நாங்கதானேபொடியனுங்க அப்ப!


சாஸ்திரி பாலு அண்ணா என்னைப் பார்த்தாலே அவங்க கேம் முடிக்கிற வரை என்னை லைன் அம்பயரா உட்காரவச்சுருவார்மறுப்பு சொல்ல முடியாதுமாட்டேன்னாலும் மனுசன் விடமாட்டார்உட்கார்ந்துருவேன்


மேலும் கேண்டீன்லேர்ந்து வர்ற அந்த காலை நேர காபி செம டேஸ்டாக இருக்கும்அது ப்ளேயர்ஸ்க்கும்அம்பயர்க்கு மட்டுமேம்பார்மோகன்தாஸ்காமராஜ் அல்லது சையது முஸ்தஃபா யாராவது ஒருத்தர் வாங்கிவருவாங்கஅந்த காபிக்காகவே லைன் அம்பயரா உட்கார்ந்துருவேன்இல்லைன்னாலும் சாஸ்திரி பாலுண்ணாவிடமாட்டார்அவர் அசோசேஷியன் செகரட்டெரியாக இருந்த வருடங்களில் நிறைய உட்கார வேண்டி வந்தது


சேர்ல உட்கார்ந்துகிட்டு கீழ ball லைனுக்குள்ள விழுதா வெளிய விழுதான்னு பார்த்துகிட்டே இருக்கனும்போரடிச்சுரும்தப்பாப் போச்சுன்னா எல்லோர்ட்டையும் திட்டு வேற வாங்கனும்சின்னப்பையன்னு டோஸ்ஜாஸ்தியாவே கிடைக்கும்தேவராஜன் (ASD)மாமாவெல்லாம்ஏண்டா சரியாப் பார்க்கிறயாம்பார் ஜாலியாகமத்தப் பசங்க மாதிரி ஜாலியாக பேசிகிட்டு  அங்கயும் இங்கயும் ஓட முடியாம உட்காரனும்.


நம்ம கேண்டீன் மசால் தோசை காபி சூப்பராக இருக்கும்அது கிரிக்கெட் ஆடறவங்களுக்கு தான்ஒரே ஒருதடவை தான் பக்கத்து வீட்டு எஸ் ராஜு அண்ணா/பாஸ்கரன் தயவுல கிடைச்சதுஎன்ன ஒரு டேஸ்ட் அது


கே கே ராமன் டோர்னமெண்ட் அப்பவெல்லாம் எங்களுக்கு செம கொண்டாட்டம்ரஷீத்ராஜாராம்ஆத்தூர்கலீல்சேலம் கலீல்கணேசன்திருப்பத்தூர் ஜெயசீலன் (சகாய் செல்வன் உறவினர்ஆடும் போதெல்லாம்வேகவேகமாக அங்க போய் இடம்புடிச்சு தரையில உட்கார்ந்து பார்க்கிற சுகமே தனி.


ஒரு தடவை கே கே ராமன் டோர்னமெண்ட்ல சாஸ்திரி பாலு அண்ணா என்னை லைன் அம்பயரா உட்காரவச்சுட்டார்நான் அப்ப பத்தாவது படிச்சுகிட்டிருந்தேன்பெரிய ஆளுங்க மேட்ச்சுக்கு பெரியவங்களைத் தான்லைன் அம்பயரா உட்கார வைப்பாங்கநான் உட்கார்ந்த மேட்ச்ல கணேசன் விளையாடினார்ன்னுநினைக்கிறேன்.


அந்த மேட்சுல முதல் கேம்ல ஒரு கட்டத்துல ஒரு பால் லைன் ஒட்டி உள்ளே விழுந்ததுநான் கரெக்டா Ball INன்னு சைகை கொடுத்தேன்இந்த கோர்ட் நேராக மேடைக்கு எதிராக இருந்ததுமேல மேடையிலிருந்தவெங்கடாசலம் மாமா தன்னோட கணீர்ன்னு குரல்ல அதை அவுட்டுன்னு அறிவிக்கவிளையாடிகிட்டிருந்தப்ளேயர்ஸ் வந்து பால் விழுந்த இடத்தைக் பார்க்கநான் அந்த ball mark காண்பிச்சும்அவர்களுக்குள்களேபரமாகமறுபடியும் மேடையிலிருந்து தன்னோட கணீர் குரலில் அது ball-out, final decision ன்னுஅறிவிக்கஎங்க மேட்ச் அம்பயருக்கும் ஒன்னும் சொல்ல முடியலப்ளேயர்ஸும் கசமுசன்னு பேசிகிட்டு ஒதுங்கவெங்கடாசலம் மாமா சாஸ்திரி பாலு அண்ணாவைத் திட்டசின்னப்பசங்களை எதுக்கு உட்கார வைக்கிறஇவ்வளவு பேர் இங்க இல்லையான்னு மேடையிலிருந்து கேட்கஅத்தோட என்னை நகரச்சொல்லிட்டு பாலுஅண்ணா வேற ஒருவரை உட்கார வச்சுட்டார்.


எனக்கு ரொம்ப அவமானமாகப் போயிடுச்சுவெங்கடாசலம் மாமா போன்ற ஆளுமைகளின் குரல் மற்றும் அவர்பங்களிப்பில் மயங்கி அவர் மேல் எனக்கு மிகவும் பயம் கலந்த மரியாதை ரொம்ப உண்டுஅவர் மேல் ரொம்பரொம்ப மரியாதைஅன்றும் இன்றும் என்றுமே குறையாதுஎன்ன ஒரு கணீர் குரல்வாவ்பேசாம வெளியவந்தேன்பின்னாடி பஞ்சு சித்தப்பா பக்கம் வந்துஅவரோட ஆறுதல் எப்போதும் கிடைக்கும் என்பதால்அவர்பக்கத்திலேயே நின்னு கிட்டு மேட்ச் பார்த்தேன்அதான் முதலும் கடைசியுமாக கே கே ராமன்டோர்னமெண்ட்டில் லைன் அம்பயர் பார்த்த அநுபவம்.


அப்ப ப்ளேயர்ஸ்க்கும்டோர்னமெண்ட் அம்பயர்ஸுக்கும் கேண்டீன்லேர்ந்தும் ஆர் எஸ் ரயில் ஸ்டேஷன்பக்கத்திலிருந்த கீழ் மேட்டூர் நாரயணன் மாமா Modern Cafe ஓட்டலில் தான் எல்லோருக்கும் சாப்பாடு மற்றும்டிபன்.


சாஸ்திரி பாலு அண்ணா அந்த ஓட்டலுக்கு டோக்கன் கொடுக்கநேராக அங்க போய் எனக்கு ரொம்பப் பிடிச்சபூரி மசால்வடை காபியோடு செம வெட்டு வெட்டினேன்.


காலனி வாழ்க்கையை காலனி ஆளுமைகளை நினைவு கூர்வதில் கிடைக்கிற மகிழ்ச்சி எனக்கு அளவிலாதது.


(பின் குறிப்பு:

மற்றவர்களும் தொடருங்கள்யாருக்காவது இவ்வாறு பகிர்வது பிடிக்கவில்லையென்றால் சொல்லுங்கள்எடுத்து விடுகிறேன். )



No comments: