எந்த ஒரு மனிதனும் விலங்கும் தன்னோட இளமைப் பருவத்தில் இருந்த மாதிரி நடுப்பருவத்தில் இருப்பதில்லை. முதுமைப் பருவத்திலும்.
20 வயதிலிருந்த எண்ணங்கள், செயல்கள், பேச்சு வழக்கங்கள் எல்லாம் 40 வயதில் மாறியிருக்கும். அதுவே 60 வயதில் இன்னும் பலவித கோணங்களில் மாறியிருக்கும், மாறுபடும். 70-80 நெருங்கும் போது மற்றவர்களைச் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படும் போது வாழ்க்கையின் கடைசி கட்ட நிலையை நோக்கி எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும்.
இந்த ஒவ்வொரு இடைவெளிகளில் 20, 40, 60 மற்றும் 80 வயதுகளில் நமது எண்ணங்கள், எழுத்துகள், பேச்சுகள் எல்லாம் புத்தகமாகவோ, கவிதையாகவோ உருப்பெறும் போது அது அந்த வயதையொட்டிய ஒவ்வொரு மனிதனின் எண்ண ஓட்டங்கள், சமூக சிந்தனைகள், காலத்தின் நிகழ்வுகள், அரசாங்க பொருளாதார மாற்றங்களை ஒட்டிதானிருக்கும். ரொம்ப புனைவுகளாக இருக்க வாய்ப்பில்லை. புனைவிற்காக பெயர்களை மாற்றலாம், நிகழ்வுகளை மாற்றலாம், ஆனால் அடிப்படையில் தன் நினைவுகளை ஒரு படைப்பாக மாற்றத்தெரிந்த அந்த ஆற்றல் பெற்றவர் படைப்பது பெரும்பாலும் தனது மன ஓட்டங்களை, எண்ணங்களைத் தான்.
மாற்றம் என்பது மாறிக்கொண்டு தானிருக்கும். நமது 20 வயதிலிருந்த வாழ்க்கை நமது 40 வயதில் இருப்பதுல்லை, இருந்ததில்லை, பெரும்பாலும் இருக்காது. 60-80களில் இது முற்றிலும் வேறுபட்டிருக்கும். யாராலும் இந்த சுழற்சியை மாற்ற முடியாது.
மாற்றத்தை அறிந்து வாழ்தலால்
வாழ்வினிது
ओलै सिरिय ।
No comments:
Post a Comment