Thursday, October 28, 2021

நண்பனாய் வளர்ப்போம் சொல்லித்தருவோம்

 பசங்க வளரும் போது நாமும் அவங்களோட வெறும் பெற்றோர்ன்னு மட்டும் காண்பிச்சுக்காம அவங்களை தன் நண்பனாக நடத்த ஆரம்பிச்சாத் தான் நம்மகிட்ட தேவைப்படும் போது வந்து எதுவும் கேட்பாங்க! என் பையன் கிட்ட அவன் ஹைஸ்கூல் போக ஆரம்பிச்சதிலிருந்தே அதைத் தான் முயற்சி செய்யறேன். பலன் இப்ப அவன் காலேஜ் போகும் போது தெரியுது.

நானெல்லாம் கல்லூரி படிக்கும் போது ஒரு பார்ட் டைம் வொர்க் செய்து நமக்கு நாமே நம்ம அடித்தளத்தை வலுவாக்கிகனும்ன்னு தெரியாம, கல்லூரியில் படித்த 8 வருடமும் வெட்டியாக அரசியல் கற்று பேசி வீணாக்கிக்கிட்டேன். அதோடு சேர்ந்து வாழ்க்கைக்கு உண்மையான தேவையானவற்றைக் கற்காம, செய்யாம விட்டுவிட்டேன்.

அப்ப திருச்சி ஜோசப் கல்லூரி புரபசர் செமையாகத் திட்டினார்: ஏண்டா அப்பா காசுலேயே இவ்வளவு படிச்சுக்கலாம்ன்னு பார்க்கிற, ஒரு ஏழை என்பதை கூட உணராம இருப்பது தவறுன்னார். அப்ப புரியல, இப்ப புரியுது.

இங்க கல்லூரியில் படிக்கிற அத்தனை பசங்களும் பார்ட் டைம் வேலை செய்யறாங்க! பார்ட் டைம் வேலை செய்யலைன்னா கௌரவக்குறைவாக நினைக்கிறாங்க!

பையனைப் பார்க்க அவன் காலேஜ் போய் பக்கத்திலுள்ள ஹோட்டலில் தங்கினேன். நம்ம ஊர் கோவை சென்னை பணக்கார வீட்டுப் பசங்க தான் அந்த ஹோட்டல் பணியாளர்கள். தங்கமாக இருக்காங்க!

பையனும் தனக்குத் தெரிந்த எமர்ஜென்சி மெடிகல் பணியில் சேர்ந்துட்டான். அங்கு ஆம்புலன்ஸ் ஓட்டப் போறான். அவன்ட்ட நண்பனாகப் பழகுவதால் எல்லாம் சொல்வான்.

அப்பா! பணத்தை நேராக என்னோட ஸ்டாக் அக்கௌண்ட்ல போட்டுகிடலாமா, இவ்வளவு ஃபார்ம் கொடுத்திருக்காங்க, இதெல்லாம் என்ன பண்றதுன்னு வந்து தயங்காம கேட்டான். ஆச்சரியமாக இருந்தாலும், இப்பவே அவனுக்கு சொல்லித் தர வேண்டிய நிலமை சீக்கிரமே வந்துருச்சு!

சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சாச்சு!

வருமானத்தை இரண்டாகப் பிரிச்சுக்க: ஒன்று இன்றைய வாழ்வுக்கு, இரண்டாவது வாழ்க்கையின் சேஃப்டிக்கு. 15$ சம்பாதிக்கிறன்னா, 8$ தான் இப்ப அதை வச்சு உன்னோட இன்றைய செலவுக்கும், மீதி 7$ வரி , இன்சூரன்ஸ் மற்றும் சேமிப்புக்குப் போவனும். கிடைக்குற 15ம் உடனே செலவு பண்ண முடியும்ன்னு நினைக்காதேன்னேன்.

இரண்டு நாளா ஒவ்வொன்னா புரிய வைச்சேன். சோஷியல் செக்யூரிட்டி 35 வருடம் கணக்கிடுவதுலேர்ந்து, ஒவ்வொன்னா சொல்லிக் கொடுத்து, இப்ப எந்த இன்சூரன்ஸ் உனக்குத் தேவை எது தேவையில்லைன்னு விளாவாரியாக சொல்லியிருக்கு. ஒரு எக்ஸல் ஸ்ப்ரெட்ஷீட் போட்டு ஒவ்வொன்னுலையும் எவ்வளவு வரி, பிடித்தம், எவ்வளவு கையில எதிர்பார்க்கலாம் என்று போட்டு அனுப்பியாச்சு!

இப்ப படிக்கிற காலத்துல பணத்தைக் கணக்கு போடாதேன்னு கணக்குப் போட்டு சொல்லிக் கொடுத்தாச்சு. படிக்க வேண்டிய காலத்துல பணம் பண்ணப் போய் உடலை வருத்திக்கொள்ளக் கூடாது, படிப்பது தடைபடாம பார்த்துக்கன்னு வேற கிண்டல் கேலியோட சொல்லிருக்கு!

சொல்லித் தர வேண்டியவைகள நேரத்தில் சொல்லித் தருவது நல்லது.

வாழ்வினிது
ओलै सिरिय ।

No comments: