Monday, November 29, 2021
நினைவுகளில் புரண்டாடும் வயதில் - 2
Sunday, November 28, 2021
நினைவுகளில் புரண்டாடும் வயதில் - 1
காலனி வாழ்க்கை மாதிரி நமக்கு கிடைத்த அந்த சிறந்த வாழ்க்கையை அப்பப்ப நினைச்சுப் பார்த்தாபுல்லரிக்கும்.
1970களில் D13 வீட்டிலிருந்தப்ப காலையில ஏழு மணிக்கு எழுந்து வெளிய வந்தா ஒன்னா அரச மரத்தடியில்சகாய், செல்வம், மனோ மற்றும் மற்றவர்களோட அன்றைய காலை துவங்கும். இல்லாட்டி, கே கே ராமன்டோர்னமெண்ட் முன்னவோ அல்லது ஸ்டாஃப் அசோசியேஷன் annual day வருவதற்கு முன்போஅசோசியேஷன் கிரவுண்டல பூபந்து (ball-badminton) காலையில சீக்கிரமே விளையாட ஆரம்பிச்சுருவாங்க, அங்க ஓடிருவேன்.
காலையில எட்டு மணி ஷிப்ட் ஆரம்பிக்கிறதுக்குள்ள வேகமாக காலையி 6.30-7.30 மணிக்கே மேட்ச்வச்சுருப்பாங்க. அதைப் பார்க்க காலையில சீக்கிரம் எழுந்து போவேன். இந்த கிரவுண்ட்ல ஆடின பால்-பேட்மிண்டன், டென்னிஸ், வாலிபாலுக்கெல்லாம் காலனி விளையாட்டு வீரர்களுக்குல்லாம் ஆடியன்ஸே நாங்கதானே! பொடியனுங்க அப்ப!
சாஸ்திரி பாலு அண்ணா என்னைப் பார்த்தாலே அவங்க கேம் முடிக்கிற வரை என்னை லைன் அம்பயரா உட்காரவச்சுருவார். மறுப்பு சொல்ல முடியாது. மாட்டேன்னாலும் மனுசன் விடமாட்டார். உட்கார்ந்துருவேன்.
மேலும் கேண்டீன்லேர்ந்து வர்ற அந்த காலை நேர காபி செம டேஸ்டாக இருக்கும். அது ப்ளேயர்ஸ்க்கும்அம்பயர்க்கு மட்டுமேம்பார். மோகன்தாஸ், காமராஜ் அல்லது சையது முஸ்தஃபா யாராவது ஒருத்தர் வாங்கிவருவாங்க. அந்த காபிக்காகவே லைன் அம்பயரா உட்கார்ந்துருவேன். இல்லைன்னாலும் சாஸ்திரி பாலுண்ணாவிடமாட்டார். அவர் அசோசேஷியன் செகரட்டெரியாக இருந்த வருடங்களில் நிறைய உட்கார வேண்டி வந்தது.
சேர்ல உட்கார்ந்துகிட்டு கீழ ball லைனுக்குள்ள விழுதா வெளிய விழுதான்னு பார்த்துகிட்டே இருக்கனும். போரடிச்சுரும், தப்பாப் போச்சுன்னா எல்லோர்ட்டையும் திட்டு வேற வாங்கனும். சின்னப்பையன்னு டோஸ்ஜாஸ்தியாவே கிடைக்கும். தேவராஜன் (ASD)மாமாவெல்லாம், ஏண்டா சரியாப் பார்க்கிறயாம்பார் ஜாலியாக. மத்தப் பசங்க மாதிரி ஜாலியாக பேசிகிட்டு அங்கயும் இங்கயும் ஓட முடியாம உட்காரனும்.
நம்ம கேண்டீன் மசால் தோசை காபி சூப்பராக இருக்கும். அது கிரிக்கெட் ஆடறவங்களுக்கு தான். ஒரே ஒருதடவை தான் பக்கத்து வீட்டு எஸ் ராஜு அண்ணா/பாஸ்கரன் தயவுல கிடைச்சது. என்ன ஒரு டேஸ்ட் அது.
கே கே ராமன் டோர்னமெண்ட் அப்பவெல்லாம் எங்களுக்கு செம கொண்டாட்டம். ரஷீத், ராஜாராம், ஆத்தூர்கலீல், சேலம் கலீல், கணேசன், திருப்பத்தூர் ஜெயசீலன் (சகாய் செல்வன் உறவினர்) ஆடும் போதெல்லாம்வேகவேகமாக அங்க போய் இடம்புடிச்சு தரையில உட்கார்ந்து பார்க்கிற சுகமே தனி.
ஒரு தடவை கே கே ராமன் டோர்னமெண்ட்ல சாஸ்திரி பாலு அண்ணா என்னை லைன் அம்பயரா உட்காரவச்சுட்டார். நான் அப்ப பத்தாவது படிச்சுகிட்டிருந்தேன். பெரிய ஆளுங்க மேட்ச்சுக்கு பெரியவங்களைத் தான்லைன் அம்பயரா உட்கார வைப்பாங்க. நான் உட்கார்ந்த மேட்ச்ல கணேசன் விளையாடினார்ன்னுநினைக்கிறேன்.
அந்த மேட்சுல முதல் கேம்ல ஒரு கட்டத்துல ஒரு பால் லைன் ஒட்டி உள்ளே விழுந்தது. நான் கரெக்டா Ball INன்னு சைகை கொடுத்தேன். இந்த கோர்ட் நேராக மேடைக்கு எதிராக இருந்தது. மேல மேடையிலிருந்தவெங்கடாசலம் மாமா தன்னோட கணீர்ன்னு குரல்ல அதை அவுட்டுன்னு அறிவிக்க, விளையாடிகிட்டிருந்தப்ளேயர்ஸ் வந்து பால் விழுந்த இடத்தைக் பார்க்க, நான் அந்த ball markஐ காண்பிச்சும், அவர்களுக்குள்களேபரமாக, மறுபடியும் மேடையிலிருந்து தன்னோட கணீர் குரலில் அது ball-out, final decision ன்னுஅறிவிக்க, எங்க மேட்ச் அம்பயருக்கும் ஒன்னும் சொல்ல முடியல, ப்ளேயர்ஸும் கசமுசன்னு பேசிகிட்டு ஒதுங்க, வெங்கடாசலம் மாமா சாஸ்திரி பாலு அண்ணாவைத் திட்ட, சின்னப்பசங்களை எதுக்கு உட்கார வைக்கிறஇவ்வளவு பேர் இங்க இல்லையான்னு மேடையிலிருந்து கேட்க, அத்தோட என்னை நகரச்சொல்லிட்டு பாலுஅண்ணா வேற ஒருவரை உட்கார வச்சுட்டார்.
எனக்கு ரொம்ப அவமானமாகப் போயிடுச்சு. வெங்கடாசலம் மாமா போன்ற ஆளுமைகளின் குரல் மற்றும் அவர்பங்களிப்பில் மயங்கி அவர் மேல் எனக்கு மிகவும் பயம் கலந்த மரியாதை ரொம்ப உண்டு. அவர் மேல் ரொம்பரொம்ப மரியாதை. அன்றும் இன்றும் என்றுமே குறையாது. என்ன ஒரு கணீர் குரல். வாவ். பேசாம வெளியவந்தேன். பின்னாடி பஞ்சு சித்தப்பா பக்கம் வந்து, அவரோட ஆறுதல் எப்போதும் கிடைக்கும் என்பதால், அவர்பக்கத்திலேயே நின்னு கிட்டு மேட்ச் பார்த்தேன். அதான் முதலும் கடைசியுமாக கே கே ராமன்டோர்னமெண்ட்டில் லைன் அம்பயர் பார்த்த அநுபவம்.
அப்ப ப்ளேயர்ஸ்க்கும், டோர்னமெண்ட் அம்பயர்ஸுக்கும் கேண்டீன்லேர்ந்தும் ஆர் எஸ் ரயில் ஸ்டேஷன்பக்கத்திலிருந்த கீழ் மேட்டூர் நாரயணன் மாமா Modern Cafe ஓட்டலில் தான் எல்லோருக்கும் சாப்பாடு மற்றும்டிபன்.
சாஸ்திரி பாலு அண்ணா அந்த ஓட்டலுக்கு டோக்கன் கொடுக்க, நேராக அங்க போய் எனக்கு ரொம்பப் பிடிச்சபூரி மசால், வடை காபியோடு செம வெட்டு வெட்டினேன்.
காலனி வாழ்க்கையை காலனி ஆளுமைகளை நினைவு கூர்வதில் கிடைக்கிற மகிழ்ச்சி எனக்கு அளவிலாதது.
(பின் குறிப்பு:
மற்றவர்களும் தொடருங்கள். யாருக்காவது இவ்வாறு பகிர்வது பிடிக்கவில்லையென்றால் சொல்லுங்கள், எடுத்து விடுகிறேன். )
Thursday, November 25, 2021
காலமாற்றத்தில் காணும் போது
Wednesday, November 24, 2021
மருத்துவனுக்கு சமர்ப்பணம்
உயிர் விடும் தருணம்
இதயம் அசையவில்லை
உயிர்ப்பிக்கும் கைகள் அசைத்தாலும்
உயிர்ப்பிப்பவனின் இதயமே எழுகிறது!
எவர் சொல்லி எழுவார்
எழுப்புவன் குரல் கேட்காதோ
பிஞ்சுக் கைகள் தொடுவது அறியாதோ
குழந்தை மனம் கனக்காமலிருக்கட்டும்!
பிறப்பும் இறப்பும் எவர் கையில்
வாழ்விப்பதும் உயிர்விப்பதும் உன் கையில்
எழுவார் எழுவர் எழுவாதோர் விழுவர்
விழாமல் இருக்க வேண்டும் இளமனசு!
பணியில் பார்ப்பது பலவற்றை
உறையில் இருத்தாமலிருந்தால் கனக்காது
உன் கடன் பணி செய்து கிடப்பதே
பணியோடு போவட்டும் உணர்ச்சிகள்!
அலைபாயும் உறவின் மனதில்!
மனம் கணக்காமலிருந்தால்
வாழ்வினிது
ओलै सिरिय ।
போதையின் உச்சத்திலிருந்து இறங்கும் படிகள்
Tuesday, November 23, 2021
காலமதைத் தேடும் குணம்
Sunday, November 21, 2021
மாற்றத்தை அறிவோம்
Friday, November 19, 2021
கார்த்திகை தீப ஒளி
நிலவின் மலர்ந்ததொரு பிரகாசம்
கார்த்திகை தீப ஒளியின் கதிர் போன்று!
மனதுள் உறங்கும் நல் எண்ணங்கள்
தீப ஒளிச்சுடர் போல ஒளி விட்டு எரியும் போது
இருள் தன் விலகி வலிமை போற்றும் உறவு!
இனியதொரு சுற்றத்தின் அரவணைப்பே
வாசல் கோலத்தைச் சுற்றியுள்ள அகல்விளக்குகள்
திரியில் எண்ணெய் உறங்கும் முன்
மலர்ந்ததொரு பிரகாசம் நம் கையில் பொரி உருண்டை!
போற்றிப் பாடிடும் கானங்கள்
நம் மனதின் அபிலாஷைகள்
ஒளிப்பிரவாகத்தில் ஒலிக்கும் சுடர்கள்!
அன்பில் பிரகாசிக்கும் தீப ஒளிப்பிரவாகத்தில் ஒரு நாள்!
வாழ்வினிது
ओलै सिरिय ।
Tuesday, November 9, 2021
சேர்த்து வைத்த பூதத்தைக் காப்பாத்த
Saturday, November 6, 2021
இளசுகள் மனதில் ட்ராவிஸ் ஸ்காட்
பள்ளிக்கூட இளம் மாணவர்களிலிருந்து வாலிபர்கள் வரை அவர்கள் பிஞ்சு மனதில் இடம் பிடித்த மிகவும்பிரபலமான பாடகர் இங்க!
இரண்டு வருடம் முன் பையன் பத்தாவது படிக்கும் போது ட்ராவிஸ் ஸ்காட் சார்லட் நகரில் வந்து பாடினார். அப்பபையனும் அவன் கிளாஸ்மேட்டும் இதற்காக சார்லட் நகர் போக இரண்டு மாதமாக யாருக்கும் தெரியாம திட்டம்போட்டுகிட்டு இருந்தாங்க!
எழுவது என்பது டாலர் டிக்கட் பத்தி அரைகுறையாக காதில் விழ, மோப்பம் பிடிச்சுட்டேன். பையன்ட்ட என்னவிஷயம்ன்னு கேட்க மறைச்சுட்டான்.
பையனோட நண்பன் இளம் வயது மிருதங்கம் கஞ்சிரா வித்வான். இரண்டிலும் அவன் கை விளையாடும். ஆனால் அவனுக்குப் பிடித்த பாடகன் ட்ராவிஸ் ஸ்காட். அவன் வீட்டுல அநுமதிக்கலை.
பசங்க இரண்டு பேரும் வீட்டுல சொல்லாம டிக்கெட் வாங்கிட்டாங்க! என் கிட்ட வந்து ஒரு வாரம் கழிச்சு வந்துஉண்மையைச் சொல்லி, நாங்க இரண்டு பேரும் இங்கிருந்து சார்லட் நகரத்திற்கு ட்ரைன்ல போயிட்டு அடுத்தநாள் காலை ட்ரைன்ல வந்துடறோம், அவன் வீட்டுல விட மாட்டாங்க, ட்ராவிஸ் பத்தியெல்லாம் உங்களுக்குஒன்னும் தெரியாது, இதையெல்லாம் உங்களுக்கு புரிய வைக்க முடியாது, நாங்க போகனும்ன்னான்.
பக்குன்னுச்சு. இளம் வயது, பள்ளிக்கூடத்துல பத்தாவது படிக்கிற பசங்க, இந்த ம்யூசிக் ப்ரோக்ராம்போறேங்கிறாங்க, ப்ரோக்ராம்ல மத்தவங்கெல்லாம் குடிப்பழக்கத்திலும் போதை பொருளிலும் சகஜமாகஉருளற இடம், இவன்களை எப்படி அனுப்பறதுன்னு வயறு கலக்க ஆரம்பிச்சுருச்சு.
வீக் டே வேற, பள்ளிக்கூடத்தை கட் பண்ணிட்டு போக தயாராயிட்டங்க வேற!
அந்தப் பையனோட அப்பா பிரபல மிருதங்க வித்வான். அவர் வாசிக்கும் போது அவர் முகத்தோட அழகு, அந்ததேஜஸைப் பார்க்கனும். அநுபவிச்சு மிருதங்கம் வாசிப்பார்.
நேரா அவர் வீட்டுக்குப் போயிட்டேன். போன்ல பேசினா வொர்க் அவுட் ஆகாது. பசங்க இந்த வயசுல தவறானவழிக்குப் போகாம இருக்கனும்ன்னா நாம தான் அவங்களுக்கு தகுந்த படி நடந்துக்கனும். அவரை சம்மதிக்கவைக்க கஷ்டப்பட வேண்டியதாயிடுச்சு. நானே அவங்க இரண்டு பேரையும் கூட்டிட்டுப் போய் நானே கூட்டிட்டுவர்றேன். அவங்களை என் கிட்ட விடுங்கன்னு விடாம்பிடியா சம்மதிக்க வைச்சேன். மனசே வராம விட்டார். ஒரேபையன், ஆசாரமாக வளர்த்து தன்னோட கலையையும் அவனுக்குச் சொல்லிக் கொடுத்து அவனையும் சிறந்தவித்தகனாக்கியிருக்கார். நம்ம கலாசாரம் போயிடப்போவுதுன்னு பயம். என்னை நம்பி அனுப்பினார்.
இரண்டு பசங்களையும் கூட்டிப் போனேன். சார்லட் பேங்க் ஆப் அமெரிக்கா ஸ்டேடியம். பசங்களை எப்படிதனியா விடறது, நாமும் ஒரு டிக்கெட் வாங்கி உள்ளப்போயிரலாமான்னு ரொம்ப யோசிச்சேன். இன்னொருபக்கம் நாம உள்ள போயி பசங்க சந்தோஷத்தைக் கெடுத்தறக் கூடாதேன்னு வேற இருந்துச்சு.
மாலை 5 மணிக்கு அவன்களை க்யூவில் விட்டேன். பல தடவை சொல்லி அனுப்பிச்சேன், கரெக்டா இரவு 11 மணிக்கு வெளிய வந்துரனும். திரும்ப 3 மணி நேரம் ஓட்டிப் போவனும், அடுத்த நாள் வெள்ளிக் கிழமைஉங்களுக்கு ஸ்கூல் இருக்கு, எனக்கு ஆபீஸ் போகனும், ஊர் திரும்பி ஒரு இரண்டு மணி நேரமாவதுதூங்கினாத் தான் நீங்க ஸ்கூல் போக முடியும்ன்னு சொன்னேன். சரிசரின்னு சொல்லிட்டு கண்டுக்காம உள்ளபோயிட்டாங்க!
வெளிய கார் பார்க் பண்ணிட்டு ரோட்டுல நடந்து பார்த்தேன். இரவு மக்கள் நடமாட்டம் அங்கு நல்லவர்களாகஇல்லை. போதைப் பொருள் மற்றவையெல்லாம் சாதாரணமாக இருக்க, பக்கத்தில் வந்து பேச வருபவர்களிடம்என்னோட பர்ஸ் போயிரும்ன்னு தோணிச்சு! இடம் சரியில்லை. காரை எடுத்து வேற ஒரு ரெசிடென்சியல்ஏரியாலப் போட்டுவிட்டு அங்கு காரை விட்டு இறங்கலை.
பசங்க இரண்டு பேருக்கும் டெக்ஸ்ட் பண்ணி இடம் சரியில்லை வந்துருங்கன்னு பத்தரை மணியிலேர்ந்தேடெக்ஸ்ட் பண்ணி போன் பண்ணிப் பார்த்தேன். வர்றேன் வர்றேன்னு சொல்லிகிட்டு கான்சர்ட் முடிஞ்சு நடு இரவு1 1/2 -2 மணிக்கு வந்தானுங்க! வீடு திரும்ப காலை 5 மணி ஆயிடுச்சு. ட்ரைன்ல வர்றேன்னு சொன்னவங்களைநம்பி விட்டா அவ்வளவு தான்.
என்னடா இப்படி லேட் பண்ணிட்டீங்க, வெளிய என் நிலமை இவ்வளவு மோசமாக இருக்கு, ஏண்டா இப்படிஎல்லாம் பண்றீங்கன்னா, உள்ளயும் அப்படித் தானிருந்துச்சு, நாற்றம் சகிக்கலை, இருந்தாலும் சந்துல புகுந்துமேடைப் பக்கத்துல ரொம்ப கிட்டக்கப் போய் டான்ஸ் ஆடினோம்ங்கிறாங்க!
சரி பசங்க சந்தோஷமாக இருக்காங்களேன்னு அரைகுறை தூக்கத்துல வந்து சேர்ந்தோம். அவன்களுக்கோஅவங்க இளவட்டத்துல பள்ளி மாணவர்களிடையில் ஏதோ பெரியதாக சாதித்ததாகப் பெருமிதம். பூரிப்போடசந்தோஷமாக பேசிகிட்டு வந்தாங்க!
இன்னிக்கு பையன் போன் பண்ணினான். அப்பா அன்னிக்கு நாங்க சொல்லி எங்களை ட்ராவிஸ் ஸ்காட்ப்ரோக்ராம் கூட்டிப் போன, இன்னிக்கு ஹூஸ்டன்ல என்ன ஆயிருக்குப் பாருன்னான். அன்னிக்கும் நாங்கஇதையேத் தான் பண்ணினோம், முந்தித் தள்ளி நெரிச்சுகிட்ட ஸ்டேஜ் முன்ன போயி ஆடினோம், இன்னிக்கும்அதே மாதிரி, ஆனால் அன்னிக்கு ஒன்னும் ஆவலைன்னான்.
இன்னிக்கு ஹூஸ்டனில் நடந்த அதே ட்ராவிஸ் ஸ்காட் ப்ரோகிராமில் அதே மாதிரி நடந்திருக்கு. ஆனால் 14-25 வயதில் பல பேர் கூட்ட நெரிசலில் சாவு. கடவுளே! இவ்வளவு நெரிசல் சாவா!!
சின்னப் பசங்க மனசுல சின்ன வயசுல ஊருக்கு ஏற்ற மாதிரி அபிலாஷைகள் ஆட்டங்கள் பாட்டங்கள்வேதனைகள்.
இன்னிக்கு நான் கூட்டிப் போய் வந்த அந்த இரண்டு பசங்களும் நல்ல காலேஜ் நல்ல படிப்புல சேர்ந்துஇரண்டு-மூன்று வருடம் கழிச்சு அவங்க எண்ணத்தைச் சொல்லும் போது கேட்கும்
இவ்வாழ்வினிது
ओलै सिरिय ।