Tuesday, March 23, 2021
மறதியின் சுமைகளில்
Monday, March 22, 2021
புலம்ப முடியா ஒரு புலம்பல்
Sunday, March 14, 2021
வாழ்வினிதாய் அமைய நம்மால் ஒன்று
ஐந்து வருடம் முன் அம்மா இங்க வந்தப்ப, என்னடா இது ஆபீஸ்லையும் உழைச்சுட்டு வீட்டுல வந்து எல்லாவேலையையும் செய்துட்டு இவ்வளவு லேட்டா போய் வீணை வாசிக்கப் போறா, உட்கார்ந்து தின்னுகிட்டுஇருக்கிற, போய்ப்பாத்திரம் தேய்ச்சு லோடு பண்றான்னு விரட்டினாங்க! அப்ப துவங்கிய பாத்திரம் டிஷ் லோடு பண்ண ஆரம்பிச்சது, இன்று வரை தொடருது. போய் சமைக்க உதவுடான்னு விரட்டியிருந்தாங்கன்னா, அதுவும்செய்தாலும் செய்திருப்பேன். இப்ப சொல்ல அம்மாயில்ல. ஆனால் மற்றவைகளைச் செய்ய ஆரம்பிக்கனும்.
பையனுக்கு நான் டயப்பர் மாத்த ஆரம்பிச்சு அவனுக்கு பன்னிரண்டு வயசு வரை குண்டி கழுவி விட்டாச்சு, இது வரைஅவன் துணி துவைப்பது எல்லாம் என் தலையில் தான். இப்பவும் எதுனா எங்கிட்டத்தான் வருவான். மற்றதைஅம்மாவை ஏய்த்து செய்து கொள்வான். நான் எனது அம்மாவைப் பார்த்துக்கொள்ள சென்ற நேரத்தில் அம்மிணி அவனுக்கு துணி லோடு பண்றதுலேர்ந்து சமையல் வரை பலவற்றைக் கற்றுக் கொடுத்துவிட்டார்.
அஸ்ஸாமிலிருந்தப்ப நண்பன் டாக்டர் சைதுல் இஸ்லாம் அடிக்கடி சொல்வான். பெண்களோடு கூட வளர்ந்தாதான் உனக்கு அந்தக்கஷ்டம் தெரியும். இப்ப உனக்குப் புரியாதும்பான். தன்னோட இரண்டு தங்கைளுக்கும் கல்யாணம் செய்து வைக்க முடியலைன்னு, தனக்குக் கிடைச்ச ஒரு மிக நல்ல பெண்ணை நன்கு படித்த ஒரு நல்ல அழகிய பணக்காரப்பெண்ணை இழந்தான்.
ஏன் இப்படி பண்ற, அந்த பெண்ணைக் கல்யாணம் பண்ணினா, அவங்க மூலமா நல்ல வாய்ப்பு கிடைக்கலாமில்லையான்னா, ஒத்துக்க மாட்டான். உனக்கு முஸ்லீம் சமுதாயம் பத்தித் தெரியாது, இன்னொருத்தரோட செல்வத்தையும் உழைப்பையும் வச்சு என் தங்கைங்க கல்யாணத்தை செய்யறதா அவங்க நினைச்சுட்டா, அதை செய்ய மாட்டேன்னு வியாக்யானம் பண்ணுவான். என் குடும்பச்சுமையை என் மனைவி மேல் திணிக்க மாட்டேம்பான் அந்த அஸ்ஸாமிய நண்பன்.
அவன் தங்கை என் மாணவி. இப்ப அஸ்ஸாம் விட்டு வந்து முப்பது வருஷமாச்சு. இரண்டு பேருக்கும் கல்யாணம் நடந்ததா, என்ன ஆச்சுன்னு தெரியலை. சைதுல் இப்ப ரிடையர் ஆகுற நேரம். சைதுல் சொல்ற பெண்களைப்பற்றிய அவன் புரிதல் தான் மனதிலாடுது. தன்னோட மாணவிகளைத் தன் அன்புச் சகோதரியாகப் பார்ப்பவன் உதவுபவன். பிற மாநிலங்களிலிருந்து அங்கு வந்து தங்கிப்படிக்கும் மாணவிகளின் ஆசிரிய நண்பன், guide.
சரி இந்தக் கதையெல்லாம் இன்னிக்கு எதுக்குன்னு கேட்கறீங்களா!
எப்போதும் இரவு குடிக்கிற மிளகு மஞ்சப்பொடி கலந்த பால் வேணுமான்னு கேட்டப்ப ஒரு நாளாவது தொல்லைபண்ணாம இருப்போன்னு நினைச்சு வேண்டாம்ன்னு சொல்லிட்டு சுடு தண்ணியில ஓமம் மிளகு வெந்தயப்பொடிபோட்டு சுயமாக செய்து சூடாகக் குடிப்பது, ஒரு பெண்ணைத் தொல்லை பண்ணாமல் சுயமாக உண்ணமுற்படுவதில் கிடைக்கும் சுகமே சுகம்!
வூட்டுல் அம்மிணி சந்தோஷமாக இருந்தாத்தான்
நம் வாழ்வினிது
ओलै सिरिय !
Saturday, February 20, 2021
உழைப்பிற்கோர் சொத்துரிமை தேவை எனில்
Saturday, February 13, 2021
கர்மவினைகள் கவலைப்படவிடுமெனில்
குற்றத்திலிருந்து எதுவும் தப்பவில்லை எனில்
குற்றம் செய்தவர் இப்போது யாரோ!
காலம் கடத்தி தீர்ப்பளிக்க நேரமில்லை அன்று
குற்றத்தை அங்கீகரிக்க உரிமையில்லை இன்று
காலம் கடத்திய குற்றம் இனி என்று!
கடமைதனை செய்ய மறுப்பது
உயிர் பிழைக்க ஓடிய பொழுதில்
கொதிக்கும் உலையில் நீராய்ப்போனதன்றோ!
அம்புகளை பிடித்து ஒடுக்கும் உரிமை
எய்த வேடனைக் காப்பாற்றவெனில்
இலக்குகள் எங்கும் நிறைந்துள்ளதோ!
மண்ணைக் காப்பது அவையின் கடமை
அதில் நேரம் காலம் பார்ப்பது மடமை
ஜனநாயகமே மக்கள் உடமை!
கர்மவினைகள் கவலைப்படவிடுமெனில்!
Thursday, February 11, 2021
மனதுள் ஆடும் சலங்கை இந்நாள்
எதையும் சொல்ல தெளிவில்லை
எழுதியதை அழிப்பதில் உசுரில்லை
பின் கை கட்டி நிற்பதில் வீரமில்லை!
ஆத்ம சிந்தனை வலிமை தரும்
தெளிந்த வார்த்தைகள் ஒளி தரும்
அழியாத சுரங்கம் அள்ளித் தரும்
உள்ளார்ந்த ஈர்ப்பில் வாசம் தரும்!
என்னில் என்னை நானறியேன்
எண்ணங்கள் என்னில் காணறியேன்
பிறர் தரும் பாசம் நானறியேன்
உற்றார் வாசம் எனதறியேன்!
வாழ்வில் கலந்தவை பஞ்சபூதம்
என்னுள் உறைவது அற்புதம்
பிறர்தன் ஏற்பில் அமுதபதம்
என்றோ கிடைப்பதில் பரமபதம்!
மனதுள் ஆடும் சலங்கை இந்நாள்!
Wednesday, February 10, 2021
நினைவு நாள் ஒன்றில் இது
நினைவலைகளாய் மாறிப்போயினர்
நீண்டதொரு பயணம் முடிந்து
இடைப்பட்ட ஊர்களில்
கொடிமரமாய் நின்றெழுந்தனர்!
வழிதடங்கள் தந்த சுமைகள் எதையும்
ஐந்து பைசா கடவுள் தட்டில் இறக்கிடுவர்
சுமையிறங்கிய தோள்களில் சுமப்பர்
தன் விழுதுகளின் சுமைதனை!
கொடி அசைத்து செல்லும் பாதையில்
வழி நெடுக மரம் நட்டனர்!
கிளைகள் இன்று செழிப்பாய் வளர
உரமாய் நின்றனர் வாழ்நாள் முழுதும்!
ஆசைதனை அளவிட்டு அகப்படாத போதும்
இருப்பவையை அளவிடாமல் கொடுத்து
வயிற்றையும் உறவையும் போற்றி
ஒரு சேர்ந்து வாழ உரமிட்டனர்!
காலம் கழிந்து கடமைகள் முடிந்து
வந்த பணி நிறைவுற்று
உடல் விட்டு சென்றாலும்
நீங்கா நினைவாய்ப் போயினர்!
விட்டுச்சென்ற நினைவலைகள்
சுமையை விட கனமாய் நிற்க
நினைவு சின்னமாய்
அவர் தந்த அழகிய தருணங்கள்!
நினைவு நாள் ஒன்றில் இது!