நிலம் ஒன்று தேடிச் சென்றேன்
இழந்தது என்னவோ நிலத்தையல்ல
வாழ்நாளில் தூய்மைதனை வாழ்வென்றேன்
நிலம் கேட்டதில் மனதில் அழுக்கானேன்!
ஊருக்கு உழைப்பவனுக்கு ஊரே மனை
உழைப்பைச் சுரண்டாதே என்பேன்
ஊருக்கு உழைத்தவனில் என் உழைப்பு
நிலம் கேட்டதில் சுயமாய் சுரண்டலாய்ப்போனது!
சொத்து சேர்ப்பது சுயநலமாய் நிற்குமெனில்
இருப்பிடம் சொத்தாயிருப்பது தவறாகுமோ
ஊருக்கு உழைக்கும் தியாகத்திற்கு
நிலம் கொடுக்க வேண்டியது எவருமன்றோ!
ஆசாபாசங்களன்றி துறவு வாழத்தேவையில்லை
உறவு வாழ உணவு நிலம் சிறிது தேடல் தவறன்று
உழைப்பைப் பருகியவரே உணர்வாராக!
உழைப்பிற்கோர் சொத்துரிமை தேவை எனில்!
ओलै सिरिय !
No comments:
Post a Comment