Saturday, February 13, 2021

கர்மவினைகள் கவலைப்படவிடுமெனில்

 
குற்றமில்லை என்று தீர்ப்பளித்து விட்டு

   குற்றத்திலிருந்து எதுவும் தப்பவில்லை எனில்

குற்றம் செய்தவர் இப்போது யாரோ!


காலம் கடத்தி தீர்ப்பளிக்க நேரமில்லை அன்று

   குற்றத்தை அங்கீகரிக்க உரிமையில்லை இன்று

காலம் கடத்திய குற்றம் இனி என்று!


கடமைதனை செய்ய மறுப்பது

   உயிர் பிழைக்க ஓடிய பொழுதில்

கொதிக்கும் உலையில் நீராய்ப்போனதன்றோ!


அம்புகளை பிடித்து ஒடுக்கும் உரிமை

   எய்த வேடனைக் காப்பாற்றவெனில்

இலக்குகள் எங்கும் நிறைந்துள்ளதோ!


மண்ணைக் காப்பது அவையின் கடமை

  அதில் நேரம் காலம் பார்ப்பது மடமை

ஜனநாயகமே மக்கள் உடமை!


கர்மவினைகள் கவலைப்படவிடுமெனில்!

No comments: