மனதிலிருப்பதைச் சொல்ல மனசில்லை
எதையும் சொல்ல தெளிவில்லை
எழுதியதை அழிப்பதில் உசுரில்லை
பின் கை கட்டி நிற்பதில் வீரமில்லை!
ஆத்ம சிந்தனை வலிமை தரும்
தெளிந்த வார்த்தைகள் ஒளி தரும்
அழியாத சுரங்கம் அள்ளித் தரும்
உள்ளார்ந்த ஈர்ப்பில் வாசம் தரும்!
என்னில் என்னை நானறியேன்
எண்ணங்கள் என்னில் காணறியேன்
பிறர் தரும் பாசம் நானறியேன்
உற்றார் வாசம் எனதறியேன்!
வாழ்வில் கலந்தவை பஞ்சபூதம்
என்னுள் உறைவது அற்புதம்
பிறர்தன் ஏற்பில் அமுதபதம்
என்றோ கிடைப்பதில் பரமபதம்!
மனதுள் ஆடும் சலங்கை இந்நாள்!
No comments:
Post a Comment