Sunday, March 14, 2021

வாழ்வினிதாய் அமைய நம்மால் ஒன்று

அம்மா அடிக்கடி சொல்வாங்கவாழ்க்கையிலெந்த பெண்ணோட சாபத்துக்கும் வயித்தெரிச்சலுக்கும் உள்ளாகாதீங்கடாஒரு பெண் இல்லாம ஒரு குடும்பம் முன்னேறவே முடியாதுவீட்டுல பசங்களா பெத்துவச்சுட்டேன்சமையல் உள் கூட உங்களை வர விடாம வளர்த்துட்டேன்பெண்கள் கஷ்டம் தெரியாமவளர்ந்துட்டீங்களேடான்னு அடிக்கடி சொல்வாங்க!


ஐந்து வருடம் முன் அம்மா இங்க வந்தப்பஎன்னடா இது ஆபீஸ்லையும் உழைச்சுட்டு வீட்டுல வந்து எல்லாவேலையையும் செய்துட்டு இவ்வளவு லேட்டா போய் வீணை வாசிக்கப் போறாஉட்கார்ந்து தின்னுகிட்டுஇருக்கிறபோய்ப்பாத்திரம் தேய்ச்சு லோடு பண்றான்னு விரட்டினாங்கஅப்ப துவங்கிய பாத்திரம் டிஷ் லோடு பண்ண ஆரம்பிச்சதுஇன்று வரை தொடருதுபோய் சமைக்க உதவுடான்னு விரட்டியிருந்தாங்கன்னாஅதுவும்செய்தாலும் செய்திருப்பேன்இப்ப சொல்ல அம்மாயில்லஆனால் மற்றவைகளைச் செய்ய ஆரம்பிக்கனும்


பையனுக்கு நான் டயப்பர் மாத்த ஆரம்பிச்சு அவனுக்கு பன்னிரண்டு வயசு வரை குண்டி கழுவி விட்டாச்சுஇது வரைஅவன் துணி துவைப்பது எல்லாம் என் தலையில் தான்இப்பவும் எதுனா எங்கிட்டத்தான் வருவான்மற்றதைஅம்மாவை ஏய்த்து செய்து கொள்வான்நான் எனது அம்மாவைப் பார்த்துக்கொள்ள சென்ற நேரத்தில் அம்மிணி அவனுக்கு துணி லோடு பண்றதுலேர்ந்து சமையல் வரை பலவற்றைக் கற்றுக் கொடுத்துவிட்டார்.


அஸ்ஸாமிலிருந்தப்ப நண்பன் டாக்டர் சைதுல் இஸ்லாம் அடிக்கடி சொல்வான்பெண்களோடு கூட வளர்ந்தாதான் உனக்கு அந்தக்கஷ்டம் தெரியும்இப்ப உனக்குப் புரியாதும்பான்தன்னோட இரண்டு தங்கைளுக்கும் கல்யாணம் செய்து வைக்க முடியலைன்னு, தனக்குக் கிடைச்ச ஒரு மிக நல்ல பெண்ணை நன்கு படித்த ஒரு நல்ல அழகிய பணக்காரப்பெண்ணை இழந்தான்


ஏன் இப்படி பண்றஅந்த பெண்ணைக் கல்யாணம் பண்ணினாஅவங்க மூலமா நல்ல வாய்ப்பு கிடைக்கலாமில்லையான்னாஒத்துக்க மாட்டான்உனக்கு முஸ்லீம் சமுதாயம் பத்தித் தெரியாதுஇன்னொருத்தரோட செல்வத்தையும் உழைப்பையும் வச்சு என் தங்கைங்க கல்யாணத்தை செய்யறதா அவங்க நினைச்சுட்டாஅதை செய்ய மாட்டேன்னு வியாக்யானம் பண்ணுவான்என் குடும்பச்சுமையை என் மனைவி மேல் திணிக்க மாட்டேம்பான் அந்த அஸ்ஸாமிய நண்பன்.


அவன் தங்கை என் மாணவிஇப்ப அஸ்ஸாம் விட்டு வந்து முப்பது வருஷமாச்சுஇரண்டு பேருக்கும் கல்யாணம் நடந்ததா, என்ன ஆச்சுன்னு தெரியலைசைதுல் இப்ப ரிடையர் ஆகுற நேரம்சைதுல் சொல்ற பெண்களைப்பற்றிய அவன் புரிதல் தான் மனதிலாடுதுதன்னோட மாணவிகளைத் தன் அன்புச் சகோதரியாகப் பார்ப்பவன் உதவுபவன்பிற மாநிலங்களிலிருந்து அங்கு வந்து தங்கிப்படிக்கும் மாணவிகளின் ஆசிரிய நண்பன், guide.


சரி இந்தக் கதையெல்லாம் இன்னிக்கு எதுக்குன்னு கேட்கறீங்களா!


எப்போதும் இரவு குடிக்கிற மிளகு மஞ்சப்பொடி கலந்த பால் வேணுமான்னு கேட்டப்ப ஒரு நாளாவது தொல்லைபண்ணாம இருப்போன்னு நினைச்சு வேண்டாம்ன்னு சொல்லிட்டு சுடு தண்ணியில ஓமம் மிளகு வெந்தயப்பொடிபோட்டு சுயமாக செய்து சூடாகக் குடிப்பதுஒரு பெண்ணைத் தொல்லை பண்ணாமல் சுயமாக உண்ணமுற்படுவதில் கிடைக்கும் சுகமே சுகம்!


வூட்டுல் அம்மிணி சந்தோஷமாக இருந்தாத்தான்


நம் வாழ்வினிது

ओलै सिरिय !

No comments: