Tuesday, March 23, 2021

மறதியின் சுமைகளில்

 மறதி புகுந்து விளையாடுது!

முந்தாநாள் நல்லா ஒரு 2 1/2 மைல் வாக்கிங் போயிட்டு வந்தேன். வந்து உடனே அப்படியே பக்கத்திலுள்ள இந்தியன் ஸ்டோர்ஸ் போய் நொறுக்குத் தீனி வாங்கலாம்ன்னு போய் எல்லாம் கூடையில எடுத்து போட்டுகிட்டு counterல போய் பாக்கெட்ல கையை விட்டா காசில்லை! பக்குன்னுச்சு! 

கடைக்காரம்மா கிட்ட சொல்லிட்டு இதோ போய் பணம் எடுத்துகிட்டு வந்துர்றேன்னு சொல்லி கிளம்பி வீட்டுக்கு வந்தேன். பாதி வழியில அம்மிணி கிட்ட சொன்னா, நீ எதுக்குத் திரும்பி வர்ற, கடையிலேர்ந்தே இதைச் சொல்லியிருந்தா, நான் போன்ல கிரெடிட் கார்ட் நம்பர் சொல்லியிருப்பேனே! என்ன ஆச்சு ஏன் வர்றீங்ககாப்புல! அதானே! தோனலை!

வீட்டுக்குப் போய் எடுத்து வந்து கடைக்காரம்மாட்ட கார்ட் கொடுத்தேன்.

கடைக்காரம்மாவும் அவங்க புருஷனும் நொந்துட்டாங்க! 

நீ பணம் எடுத்து வர்றேன்னு காருக்குத் தான் போறேன்னு நினைச்சோம். வீடு வரைக்கும் போயிருக்கயே! நீ பணம் கொடுக்காட்டித் தான் என்ன, எத்தனை வருஷமா வர்ற, அடுத்த தடவை வந்து கொடுத்திருக்கலாமே, 45$ க்காக வீடு வரைக்கும் போனுமா, எங்களை இப்படி பண்ணிட்டியேங்கிறாங்க!

அட ஆமாம்ல அதைப் பண்ணியிருக்கலாமே! தோனலை!

இல்லைங்க இதுவரை அப்படி ஆனதில்லை. முதல் தடவை. வாலட் இல்லாம வண்டியேறியதில்லை! எப்படி மறந்தேன்னு தெரியலைன்னு சொல்லிட்டு மன்னிப்பு கேட்டுபுட்டு வந்தேன்!

Counterல வந்து பணம் இல்லாம நிக்கறோமேன்னு செம கில்டி ஃபீலிங். சில தடவை மத்தவங்களை இந்த situationல பார்த்து அவங்களுக்கும் சேர்த்து 4-5 தடவை கட்டியிருக்கேன். 

நம்ம ஊர்க்காரங்க ஒருத்தங்களுக்கு அது மாதிரி ஒரு தடவை 5$ கட்டினேன். அதை அவங்க ஒரு வருடம் கழிச்சு தேடி வந்து கொடுத்தாங்க! ஏங்க 5$ ஒன்னுமேயில்லாதது, அதுக்குப் போய் இவ்வளவு மாதம் கழிச்சு தேடி வந்து கொடுக்கனுமான்னு கேட்டதற்கு, அவங்க, ஆமாம் அது ஒன்னுமில்லாத அமௌண்ட், ஆனால் தேவையான நேரத்துல கொடுத்த பாரு, அதோட மதிப்பு ஜாஸ்தின்னு சொல்லி என்னோட பத்து வயசு சின்னவங்க பத்து வருஷம் முன்ன சொன்னது மனசுல இப்ப நிக்குது! 

அதே நிகழ்வு எனக்கு!

சரி இந்தக் கதை இப்ப எதுக்கா? இருக்கு!

அன்னிக்கு அந்த கடையில மோர் மிளகாய் வாங்கி வந்தேன். அம்மிணி நான் திருட்டத்தனமா அப்பளம்/பப்படம் பொரிச்சுத் திங்கறதைக் கண்டுபுடிச்சுட்டாப்புல. அதனால ஒரு oil fryer (french fries பொரிக்கிற மாதிரி ஒரு சின்ன குக்கர் வாங்கிக் கொடுத்துட்டாப்புல. இனி எண்ணெய் சமாசாரம் எங்கிட்ட வராதே நீயே இதுல பொரிச்சுக்கன்னுட்டாப்புல!

இனி திருட்டுத்தனம் பண்ண வேண்டிய அவசியமில்லை! அம்மிணி முன்னவே நல்லா மோர் மிளகாய் பொரிச்சு டேபுள் மேல வச்சேன். தயிர்சாதத்துல கலந்து வெட்டலாம்ன்னு.

இரண்டு நாளா தயிர்சாதம் சாப்பிட்டு முடிச்சு எழும் போது மோர் மிளகாய் கண்ணுல படுது. சாப்பிட முடியலை. இப்ப நமுத்துப் போயிருக்கும்.

மறதியின் சுமைகளில்
வாழ்வினிது
ओलै सिरिय !

No comments: