Monday, March 22, 2021

புலம்ப முடியா ஒரு புலம்பல்

 போன மாசம் கொஞ்சம் தடுமாறிப் போற நிலமையாயிடுச்சு. வெளிய சொல்லி புலம்ப முடியல.

பத்து வருசம் முன்ன வாங்கின பாஸ்போர்ட் இன்னும் இரண்டு மாசத்துல எனக்கும் அம்மிணிக்கும் காலாவதியாகப் போவுது. சரி புதுசு வாங்கிடலாம்ன்னு ஆன்லைன்ல பார்த்து, சுலபமாக வாங்கிடலாம்ன்னு தயாரானேன். நம்மது straight forward case என்பதால ஒரு ஃபார்ம் fill பண்ணி, பழைய பாஸ்போர்ட்டோடு பணத்தை அனுப்பினால் போதும், வந்துரும். அவ்வளவு தான். 

அம்மிணி யோசிச்சாப்புல. இந்த கோவிட் ப்ரீயட்ல பாஸ்போர்ட் மாட்டிக்கிச்சுன்னா அவங்கம்மாக்கு ஏதாவது ஒன்னு ஆனா எப்படி நாம ஊர் போவதுன்னு ஒரு வாரம் இழுத்தடிச்சாப்புல.

எனக்கு பொறுமையில்லை. பாஸ்போர்ட் ஆறுமாசத்துக்குள்ள எக்ஸ்பயர் ஆவுதுன்னா சில நாடுகளில் உள்ள விடமாட்டாங்க.

சரி நம்முது முதல்ல பண்ணிருவோம், வந்த பிறகு அம்மிணிக்கு பண்ணலாம்ன்னு நினைச்சேன். அப்ப யாராவது ஒருத்தர் போய் வர ஏதுவாக இருக்கும்ன்னு நினைச்சேன்.

எனக்கு இந்த ஊர் போஸ்ட் ஆபீஸ் மற்றும் பாஸ்போர்ட் சர்வீஸ் மேல எல்லாம் ஒரு அபார நம்பிக்கை உண்டு. கடமை தவறாம குறித்த நேரத்துல செய்வாங்கன்னு ஒரு மிகப்பெரிய நம்பிக்கை உண்டு. இது வரை நடந்துள்ளது.

எல்லாம் ரெடி பண்ணி வெறும் ஆர்டினரி போஸ்ட்ல அனுப்ப தயாராகும் போது அம்மிணி தன்னோடதும் பண்ணுன்னு கொடுத்தாப்புல.

இங்ஙன தான் பெரிய தப்பு பண்ணினேன். அந்த சர்வீஸஸ் மேல உள்ள அபார நம்பிக்கையில் பழைய பாஸ்போர்ட் போட்டோகாப்பி எடுக்காம, அதையும் சேர்த்து ஒரு போஸ்ட்ல அனுப்பிட்டேன். எவ்வளவு பெரிய முட்டாள் தனம்ன்னு புரிய ஒரு வாரம் ஆச்சு.

வெள்ளிக்கிழமை அனுப்பியது போக வேண்டிய ஊருக்கு திங்கள் காலையில போய் சேர்ந்துருச்சு. சரி இன்னிக்கே பாஸ்போர்ட் ஆபீஸ்ல கொடுத்துருவாங்கன்னு நினைச்சேன். அதே ஊர்ல அடுத்த zip code. செவ்வாய், புதன் அன்று ஸ்டேடஸ் பார்த்தா இவனுங்க போய் கொடுக்கலை. வேற facility க்கு போயிருக்கு, ஆனால் கரெக்டா டெலிவரி ஆயிரும்ன்னு சொல்லுது. சரி செக்யூரிட்டி ஸ்கேனுக்குப் போயிருக்குன்னு நினைச்சேன்.

அந்த வாரம் பூரா இவனுங்க டெலிவரி பண்ணலை. ஒரே ஊர்ல அடுத்த ஸிப்கோடு. என்னடா பிரச்சனைன்னு போஸ்ட் ஆபீஸ் போன் பண்ணா, அவங்க நீ கேஸ் ஓபன் பண்ணிக்கங்குறாங்க! கேஸ் ஓபன் பண்ணினேன். ஆனால் பதிலில்லை.

ஒரு நாள் இரண்டு நாள் இல்லை. மூன்று வாரம் எந்த பதிலும் கிடையாது. போன் பண்ணினால் அதே ஸ்டேட்டஸ் சொல்றாங்க. பாஸ்போர்ட் ஆபீஸ் போன் பண்ணினா அவங்க கடுப்பாகுறாங்க, வரலைன்னு சொல்ல.

ஆடிப்போச்சு நமக்கு. பத்து வருசமா டிராவல் பண்ண ரிக்கார்ட் எல்லாம் அந்த பழைய பாஸ்போர்ட்ல உள்ள முத்திரையை வச்சு தான் கண்டுபிடிக்கனும். போட்டோகாப்பி லேடஸ்ட் இல்லை, 3-4 வருசம் முன்ன எடுத்த போட்டோகாப்பி தான் இருக்கு. ஆடிப்போச்சு. ட்ரம்ப் சொல்றது நிஜமான்னு சந்தேகம் வந்துருச்சு. போஸ்ட் ஆபீஸ் ஆளு தூக்கி கடாசிட்டானான்னு சந்தேகம். 

இனி எப்படி டூப்ளிகேட் வாங்கறது, அதை வச்சு எப்படி இந்திய விசா வாங்கறது எப்படி ஊர் போவறதுன்னு ஒரு மாசமா ஆடிப்போச்சு.

3 வாரம் பிறகு போஸ்டாபீஸ் கேஸ் escalate பண்ணினேன். திடீர்ன்னு 4 நாள் கழிச்சு நாளை டெலிவரி பண்ணுவோம்ன்னு மெசேஜ் வருது. கடைசியில அன்னிக்கு சாயந்தரமே கொண்டு போய் பாஸ்போர்ட் ஆபீஸ்ல கொடுத்திருக்காங்க! எஸ்கலேட் பண்ணதுல ஏதோ நடந்திருக்கு, என்னாச்சு தெரியலை, போய் கொடுத்துட்டாங்க.

அடுத்த நாள் பாஸ்போர்ட் ஆபீஸ் போன் பண்ணினேன். இந்த தடவை ஒரு நல்ல பெண்மணி கையில போன் போச்சு. அவங்க இன்னிக்குத் தானே எங்க கிட்ட வந்திருக்கு, பிராஸஸ் பண்ண 4 வாரம் ஆவும், நீ இப்ப டிராவல் பண்ணப் போறயான்னு கேட்டாங்க! 

இல்லைங்கன்னு சொல்லிட்டு இதுவரை நடந்த கதையை சொல்லிட்டு, ஒன்னே ஒன்னு சொல்லுங்க, உங்க கையில என் பாஸ்போர்ட் எந்த டேமேஜும் இல்லாம வந்து சேர்ந்ததா சொல்லுங்க, அது போதும்ன்னேன்.

எல்லாம் சரியா இருக்கு, ஏற்கனவே உனக்கு 4 வாரம் டிலேவா, சரி, 4 வாரத்துக்குள்ள என்ன பண்ணமுடியுமோ பண்றோம்ன்னாங்க! 

அவ்வளவு தான். பேசி பத்து நாள் கூட ஆவலை. இன்னிக்கு கையில எங்க இரண்டு பேரோட பாஸ்போர்ட் வந்துருச்சு! இனி ஓசிஐ விசா வேலை ஆரம்பிக்கனும்.

பிரச்சனைகள் சிலருக்கு மட்டும் விதவிதமாக வந்து நிக்குது. Straight forward case, போஸ்ட் ஆபீஸ் அல்லது பாஸ்போர்ட் ஏஜன்சி போய் எதுவும் வெரிஃபை பண்ணக்கூட இல்லாதது நம்ம கேஸ், போஸ்ட்ல அனுப்பினா போதும் வந்துரும்கிற கேஸ். இருப்பினும் 5 வாரம் வெளிய சொல்லிக்க முடியாம முடக்கிப் போட்டுருச்சு!

விடிவு பிறந்த இன்று
வாழ்வினிது

ओलै सिरिय !

No comments: