Tuesday, July 5, 2022

கார் சர்வீஸ் கூப்பன்

சில வருடங்கள் முன் கார் வாங்கும் போது அவங்க ஒரு கார் சர்வீஸ் கூப்பன் புக்கும் வாங்கிக்க, ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்ன்னு தலையில கட்டிட்டாங்க. 1200-1300$ பாக்கேஜ் அது. எல்லா கார் டீலர்ஸும் இந்த கூப்பன் வாங்கிப்பாங்கன்னு அவங்க சொன்னதால வாங்கினேன். ஏன்னா ஒவ்வொரு தடவையும் ஆயில் சேஞ்ச் பண்ண இவ்வளவு தூரம் வரமுடியாது.

அப்ப 50$க்கு இருந்த ஆயில் சேஞ்ச் எல்லாம் இப்ப 80$-90$ ஆயிடுச்சு. 

வேற ஒரு ஊர்ல கார் வாங்கினேன். எப்போதும் வீட்டு பக்கத்துல இருக்கிற டீலர்ஷிப்ல தான் சர்வீஸுக்குப் போவேன். ஒவ்வொரு தடவையும் கார் வாங்கின இடத்துக்குப் போனால் gasoline விலையே இந்த கூப்பனை விட அதிகமாகும். முன்னாடி இந்த கூப்பனை வாங்கிக் கிட்ட லோக்கல் டீலர் கடந்த ஒரு வருடமாக வாங்க மாட்டேங்குறாங்க. அவங்களுக்கு இந்த கூப்பன் பணத்தை கலக்ட் பண்ண இருக்கிற நடைமுறை புரசீஜர்ஸ் அதிகமாக இருப்பதை வச்சு இங்க வாங்கத் தயங்குறாங்க.

அதற்கு நான் என்ன செய்ய முடியும். நான் கட்டியுள்ள பணமே யானை அளவு. இந்த கூப்பன் ஆயில் சேஞ்ச், டயர் ரோடேஷன், ப்ரேக் க்ளீனிங் எல்லாம் கவர் பண்ணனும். ஆனால் இருக்கிற விலைவாசி ஏற்றத்தில் இந்த விலைக்கு இவங்களால் செய்யவும் முடியாது.

ஒவ்வொரு தடவையும் சலிச்சுகிட்டே இந்த கூப்பனை வாங்கிப்பாங்க. நமக்கும் அவமானமாக embarrassing ஆக இருக்கும். கூப்பன் கம்பெனி 67$ தான் கொடுத்துகிட்டு இருந்தான். ஒவ்வொரு தடவையும் நான் எக்ஸ்ட்ரா 30-40 கட்டுவேன். அவங்களும் விருப்பமில்லாமல் செய்வார்கள்.

இன்றும் கார் சர்வீஸ் போனப்ப, அந்த கூப்பன் வாங்க மாட்டேன்னாங்க, எல்லா டிராமாவும் பண்ணாங்க. பொறுமையாகவே ஒவ்வொரு தடவையும் மாதிரி பொறுமையாகவே பதில் சொல்ல வேண்டியதாகப் போச்சு.

முதலில் மாட்டேன்னவங்க, பின்னாடி இதுல 30$ தான் கிடைக்கும் மீதி 50-60 நான் கட்டனும்னனாங்க. இதுல இதுவரை 67$ வந்துச்சு மீதியை நான் கட்டறேன்னேன். அதலாம் முடியாதுன்னாங்க.

பொறுக்க முடியலை. அமைதியாகவே சொன்னேன்: இந்த கார் கம்பெனியோட ஹெட்க்வார்ட்டர்ஸ்க்கு இப்ப நான் போன் பண்ணி கேக்கப் போறேன். இது மாதிரி பாக்கேஜ் விற்கிறாங்க, ஆனால் இதை மற்ற இடத்தில் ஏற்க மாட்டேங்குறாங்க. இது அநியாயம்ன்னு சொல்லப் போறேன்னேன்.

அவ்வளவு தான், அவங்க தொணி இறங்கிடுச்சு. சரி் கூப்பன் கொடுங்க நானே பார்த்துகிறேன்னு கூப்பனை வாங்கிக் கிட்டாங்க.

சர்வீஸ் வைட்டிங் ரூம் போவதற்கு முன், மறுபடியும் அவங்க கிட்ட கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் தொணியிலேயே, do you want me to talk to this service plan company right now?ன்னேன். இல்லையில்ல நானே பேசிக்கிறேன்னு வாங்கிக் கிட்டாங்க.

வைட்டிங் ரூம் பக்கத்தில், கவுன்ட்டர்ல, டீலர்ஷிப்பின் பெரிய சூபர்வைசர் அல்லது மானேஜரைப் பார்க்கனும்ன்னேன். பிரச்சனைகளைச் சொன்னேன். அவங்க பார்க்க விடலை. சரி, கார் ஹெட்க்வார்ட்டர்ஸ்க்கு கால் பண்ணிக்கிறேன்னு போய் உட்கார்ந்துட்டேன்.

இதுல மனசைப் போட்டு அலட்டிக்காம, மீறிப்போனா என்ன 100$ தானே கட்டனும் விடு, இதுக்கு எதுக்கு அலட்டிக்கனும்ன்னு ஸ்பானிஷ் நோட்ஸ் எடுத்துப் படிக்க ஆரம்பிச்சுட்டேன். மனசு ரொம்பவே அமைதியாயிடுச்சு.

ஆனால் அவங்க மனசு நிம்மதியாவலை போலிருக்கு. அந்த சர்வீஸ் மேனேஜரே வந்து, நாங்களே அந்த கூப்பன் கம்பெனியோட பேசிட்டோம். இந்த கூப்பன் வேறு சிலவற்றையும் கவர் பண்ணனும், அது உனக்குத் தேவையில்லை, ஆகவே அவங்க முழுப்பணம் கொடுக்கறேன்னுட்டாங்கன்னாங்க.

நம்ம மனசு இன்னும் நிம்மதியாயிடுச்சு. கடைசியில காரை வாங்கும் போது அவங்களே சொன்னாங்க, அந்த கூப்பன் உனக்கு 106$ கொடுத்திருக்கு, அவங்க இதுவரை இவ்வளவு கொடுத்ததில்லையாம், மத்த சர்வீஸுக்கு ஃபில்டர் மாற்றியதற்கு மட்டும் 68$ கட்டிட்டுப்போன்னு சாவியைக் கொடுத்தாங்க.

ஆச்சரியமாக இருந்துச்சு. முடியாதுன்னவங்க, 30$ மட்டும் தான்னவங்க, அவங்களேப் பேசி 106$ வாங்கியிருக்காங்க.

இதுக்கெதுக்கு ஒவ்வொரு தடவையும் நம்மளை சஞ்சலப்படுத்தனும்ன்னு தெரியலை. நம்ம ராசிபலன் அப்படி. 

ராசிபலன் சரியாக வேலை செய்வதால் இயல்பாக இயங்க முடிவதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Servicio de coche!

மகனுடன் பயணிப்பதில் ஒரு சுகம்

பையன் இப்ப பார்ட் டைம் வேலையில நிறையவே சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டான். உங்க இரண்டு பேருக்கும் என் முதல் சம்பளத்துல ஏதாவது வாங்கனும்ன்னான். எல்லோருடைய வாழ்க்கையிலும் அம்மா தான் முதல்ல இருக்கனும், எவ்வளவு பிரச்சனையிருந்தாலும், அதுவரைக்கும் என் பக்கமே வராதேன்னுட்டேன். உன்னோட பழசை(ஓரிரு தடவை போட்டதே)யே எனக்கு எல்லாம் புதுசாயிருக்கு எனக்கெல்லாம் 10$க்கு மேல ஒன்னும் வாங்கக் கூடாதுன்னேன். இது நடந்து நாலைந்து மாதம் மேலேயிருக்கும்.

தன் முதல் சம்பளத்துல தன் அம்மாக்குப் பெருசா ஒன்னு வாங்கினான். என் கிட்ட மட்டும் சொல்லியிருந்தான். ஆனால் அம்மிணி அவன் அக்கௌண்ட்ல பெரிய செலவைப் பார்த்து செமையா ஆட்டம் ஆடிட்டாப்புல. அதகளமா அதிரடியாத் தெரியலை. ஏதோ கேர்ள்ப்ரண்ட் புடிச்சுட்டான்னு இரண்டு நாள் என்னை உருட்டித் தள்ளிட்டாப்புல. என்ன சொல்ல, உருட்டல்ல நல்ல தேங்காய் துவையலாச்சு.

அம்புட்டு பணம் போன பிறகு, அவன் மறுபடியும் சம்பாதிக்க நேரமானதால மூனு மாசம் பேசாம இருந்தான். இந்த தடவை ஃபாதர்ஸ்டேக்கு ஊருக்கு வர்றேன்னு சொன்னவன் தந்தையர் தினத்துக்கு விஷ் கூட பண்ணலை. நாமளே போன் பண்ணி ஹலோ சொல்ல வேண்டியதாப் போச்சு.

ஆனால் இந்த தடவை அவனும் அவன் அம்மாவும் ஏதோ குசுகுசு கிசுகிசு அடிக்கடி பேசிக்க, ஏதோ வாங்கியிருக்கான்னு புரிஞ்சு போச்சு. ஃபாதர்ஸ் டே முடிஞ்சு இரண்டு நாள் கழிச்சு வந்தான். அவன் வந்தன்னிக்கு ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலை அவன் வர்ற வரைக்கும் பிரிக்கக் கூடாதுன்னு மிரட்டல் வேற.

வந்து, பார்சலைப் பிரிச்சு, எடுத்து கையில மாட்டிவிட்டு, இதுல பின்னாடி என்ன எழுதியிருக்குப் பாருன்னு வேற பிரிச்சுக் காண்பிச்சான். ஒரே கட்டித் தழுவல்ல உச்சி குளிர்ந்து போச்சு. 

இன்னிக்கு, அது கையில லூசாக இருக்கு, டைட் பண்ண mallக்கு எடுத்துப் போய் belksல டைட் பண்ணி கொடுக்கச் சொன்னேன். அவங்க, நான் இந்த வாட்ச் கம்பெனியில் டைரெக்டாக வேலை செய்யுற ஆள், இது ஸ்பெஷல் ஆர்டர் போல இருக்கு, கடைகளில் கிடைக்காதுன்னாங்க. வாட்ச் பின்னாடி எழுதியிருப்பதைப் படிச்சு அவங்களும் உச்சி குளிர்ந்துட்டாங்க. டைட் பண்ணி கொடுத்ததற்கு பணம் எதுவும் வாங்கிக்க மாட்டேன்னுட்டாங்க.

Thank you for always being on my side Appa!
¡Gracias por estar siempre de mi lado padre !

அவனுடன் பயணிப்பதில் இனியதொரு தருணம்.
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Reloj!

பசங்களுக்குப் பேசத் தெரியுது

இந்தப் பசங்களுக்கு முளைக்கும் போதே அம்மாட்ட எப்படி பேசனும் அப்பாட்ட எப்படி பேசனும்ன்னு நல்லாத் தெரிஞ்சு வச்சுருக்கானுங்க.

இப்ப அவன் அம்மாட்ட போன் பண்ணி நடக்கிறதை அப்படியே சொல்லியிருக்கான். அம்மிணி அவனைப் போட்டு குடைஞ்சதுல பொறுமையாகவே பதில் சொல்லியிருக்கான்.

அப்புறம் எனக்கு ஃபோன் பண்ணி அதே நிலவரத்தை எனக்கும் சொல்லிட்டு, அம்மாக்கு இயர்எண்ட் வொர்க் ஜாஸ்தி இருக்கு போல அப்பா, அம்மாவைப் பார்த்துக்கங்கிறான். என்னடா விஷயம்ன்னா, இப்பத்த நிலவரத்தைச் சொன்னா ஏதோதோ சொல்றாப்படி என்கிறான். நீ டெய்லி பேசினாத் தான்டா என்ன பண்றேன்னு தெரியும்டான்னா, ஆமாம் ஓகே பேசறேன்னு சிரிக்கிறான்

அம்மிணி என் கிட்ட வந்து உங்கப் பையன் ஃபோன் பண்ணானா, நல்லா மிரட்டி விட்டுட்டேன்ங்கிறாங்க! 

என்னத்தை சொல்ல. அம்மிணிக்கு அவனைப் பத்தி கவலை.

அமைதியாய் இருப்பதில் ஆனந்தமே
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Los niños saben cómo hablar!

ஸ்பானிஷ் கற்கும் பொழுதில் - 7

ஒரு மணி நேரம் படிக்கப் போறேன் டிஸ்டர்ப் பண்ணாதேன்னு சொன்னா, என்னது இது எப்பப் பார்த்தாலும் இந்த புத்தகத்தோடயே உட்கார்ந்திருந்தா வீட்டுல ஒரு வேலை செய்யறதில்லை, இப்படி அநியாயம் பண்ணா என்ன செய்யன்னு அசரீரி கேட்குது பின்னாடியே!

இங்கு ஜூலை 4 ஒட்டி அனைவருக்கும் விடுமுறை. ஆனால் நமக்கு இன்று இரவுக்குள் இரண்டு quiz மற்றும் ஒரு யூனிட் டெஸ்ட் முடிச்சாவனும். ஒவ்வொன்னும் அரை மணி நேரத்துக்குள்ள முடிக்கனும்ன்னு இருக்கு. நம்ம இழுப்புக்கு ஒன்னு கூட அரை மணி நேரத்தில் முடிவதில்லை.

இரண்டு நாளாப் படிச்சு, இன்று வரை இழுத்தடிக்க வேண்டாமென்று, நேற்று மாலையே முடித்துவிட்டேன். ஆனால் திருப்தியில்லை. ஒரு ஸ்பானிஷ் paragraph கொடுத்து அதிலிருந்து கேள்விகள். ஒரே வாக்கியத்தை அர்த்தம் மாறாமல் எப்படி திருப்பி எழுதுவது. அதே மாதிரி  ஒரு வாக்கியத்தை நான், நீ, உன், அவர், அவர்கள், நாங்கள் என எவ்வாறு வாக்கியங்கள் மாற்றி அமைப்பது என பல வகைகளில் எழுதனும். 

யூனிட் டெஸ்ட் மட்டும் ஒரு தடவை சப்மிட் பண்ணியதை மறுபடியும் திருத்திக் கொடுக்க வாய்ப்பில்லை. ஒரு வழியாக நேற்று முடித்து இருப்பினும் மனம் அமைதி கொள்ளாமலிருக்கு. இரவும் பழைய lessons சாப்டரை எடுத்து உருட்ட ஆரம்பிச்சேன்.

முயற்சியில் பின் வாங்க விருப்பமில்லை. எப்படியோ ஸ்பானிஷ் கற்றுக் கொண்டு விட வேண்டுமென ஒரு துடிப்பு. சுலபமாக முடியவில்லை. சிரமமாக இருக்கு.

கல்லூரி வகுப்பில் சேர்ந்து ஐந்து மாதமாகி விட்டது. இப்ப ஒரு ஸ்பானிஷ் பாரா படித்தால் இப்ப அர்த்தம் புரிகிறது. அதை வைத்து பதில் எழுத முடிகிறது. ஆனால் சுயமாக ஒரு முழு பாரா எழுத தடுமாறுகிறது. வகுப்பில் பேச வேண்டும் வேற.

அடுத்த மாதத்தோடு ஸ்பானிஷ் 2 முடியுது. ஒரே வாரத்தில் ஸ்பானிஷ் 3 ஆரம்பமாகிறது. ஒரு பிரேக் எடுத்து நல்லா ரிவைஸ் பண்ணிவிட்டுப் போனால் நன்றாக இருக்கும் போலிருக்கு.

பார்ப்போம்.
கற்பதில் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிவதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Un largo camino por recorrer!

திருக்கடையூரில் சதாபிஷேகம்

80 வயது பூர்த்தியானவுடன் திருக்கடையூரில் சதாபிஷேகம் செய்து கொள்ள பலர் விரும்புவர். ஆனால் பல குடும்பங்களில் அதைச் செய்து கொள்ள அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும். கிடைக்காமல் போனவர்களின் வருத்தங்களை நேரில் கேட்டுள்ளேன்.

இன்று ஒரு தம்பதியினர் தானே சென்று அங்கு செய்து கொள்ள முடிந்தது, அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் மனநிலையையும் சிறப்பாக உறுதிபடுத்துகிறது. மனமார்ந்த வாழ்த்துகள்.

இதில் எவர் கலந்து கொண்டாலும் கலந்து கொள்ளாவிட்டாலும், அது ஒவ்வொரு குடும்பத்தினரின் தனிப்பட்ட குடும்ப நல்லது கெட்டது கஷ்ட நிலைகள். அதை மற்றவர் குறை காண்பது சரியல்ல.

திருக்கடையூரில் சதாபிஷேகம் நடத்துவதின் சிறப்பை சிறப்பாக நினைப்பவர்கள் அந்த தம்பதியனரை வாழ்த்துவதோடு நிறுத்திக் கொண்டால், இந்த நல்லநாளில் அந்த தம்பதியினர் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

மற்றவரைக் குறை சொல்வதால் நம் நிலை உயர்வானதல்ல, உயரப்போவதுமில்லை. வாழ்த்துவதோடு நிற்பதால் மட்டுமே உயர்வான எண்ணத்தைக் கொடுக்க முடியும்.

திருக்கடையூரில் ஆசி பெறுபவர்களுக்கு வாழ்த்துகள்.

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Ochenta años!

வானம் வண்ணங்களால் நிறைந்த பொழுதில்

வாணவேடிக்கையின் கடைசி துளி முடிந்த பின்னும்
  இன்னும் ஒரு வெடி வருமா என நிற்கையில்
பிறர் திரும்புகையில் மறைகின்றன ஏக்கங்கள்!

வண்ண ஒளிப்பிரளயத்தில் மலரும் முகங்கள்
   ஒவ்வொரு வெடியின் கலப்பிலும் மலரும் பூவானங்கள்
நினைவினுள் அகலும் முன் கரையும் கூட்டம்!

வான்வெளியில் நட்சத்திரங்களை மறைக்கும் வானவெடிகள்
  காலமெல்லாம் காத்திருந்து காணத்துவங்குகையில்
கையைப் பிடித்துக் கொள்ளும் குழந்தை தொலைதூரத்தில்!

சுதந்திர பூமியின் வண்ணங்கள் 
  அண்டவெளியில் பயணிக்கும் பொழுதில்
அமைதியாய் ஒதுங்கிய ஒரு கனம் இது!

வானம் வண்ணங்களால் நிறைந்த பொழுதில்!

வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Fuegos artificiales!

ஸ்பானிஷ் கற்கும் பொழுதில் - 6

ஒரு மொழியை கற்றுக்கொள்ளும் போது அல்லது எழுதும் போது எவ்வளவுக்கெவ்வளவு அதில் நாம் பிழைகளைக் களைகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அந்த மொழியின் சிறப்பு மட்டுமல்ல, அந்த மொழியில் சொல்லவருவதின் பொருள்/அர்த்தம் கூட மாறாமலிருக்கும். சொல்ல வருவதும் தெளிவாக இருக்கும்.

இப்போது ஸ்பானிஷ் கற்றுக்கொள்ளும் போது வாரா வாரம் quiz மற்றும் டெஸ்ட் வைப்பார்கள். ஒரு சிறு தவறு செய்தால் கூட அதன் முழு மதிப்பெண்ணை கம்ப்யூட்டர் குறைத்து விடும். எந்தவித concessionம் கிடையாது.

போன வாரம் கொடுத்த quiz ஒன்றில் இது மாதிரி கொடுத்து அதை இலக்கணப்பிழையில்லாமல் வாக்கியத்தை முழுமையா எழுத வேண்டும்.

அவர்கள் டெஸ்டில் கொடுத்தது (பெயர் மாற்றத்துடன்) இது மாதிரி இருக்கும். 

Carlos y yo / preocupado /  la situación / el aeropuerto.

இதை இலக்கணப்பிழையில்லாமல் முழு வாக்கியமாக எழுத வேண்டும். சில சமயம் அந்த verb/adjectives வருகிற இடத்தில் இடைவெளி விட்டிருப்பார்கள். அதை நிரப்பனும்.

நான் எழுதிய விடை
Carlos y yo estamos preocupado por la situación en el aeropuerto.

சரியான விடை
Carlos y yo estamos preocupados por la situación en el aeropuerto.

அவ்வளவு தான். சிறு இலக்கணப்பிழை. ஒரு letter குறைவு. அர்த்தம் மாறுபடுது/இங்க வாக்கியம் சரியாக முற்றுப்பெறவில்லை. முழு மதிப்பெண் போச்சு.

பலருக்கு இது என்ன சாதாரண விஷயம் தானேன்னு இருக்கும். ஆனால் அதுவல்ல.

இது பதிப்பகத்தாருக்கும், மொழி பெயர்ப்பாளர்களுக்கும், பத்திரிக்கைத் துறையிலிருப்பவர்களுக்கும் இதன் முக்கியத்துவம் புரியும்.

ஆனால் நம்மைப் போல் சாதாரண மனிதர்கள் கற்கும் போதோ எழுதும் போதோ பெரிதுபடுத்தாமல் செய்கிறோம்.

என்னால் அந்த குறிப்பிட்ட மதிப்பெண் பெற முடியாததற்கு இது மாதிரி சிலது காரணமாய் நிற்கிறது. வெறும் அரை மணிநேரத்துளிக்குள் இவற்றை கூர்ந்து கவனித்து 20-25 கேள்விகளுக்கு பதிலளிப்பது, முழு பாரா எழுதுவது தான் சிரமமாக உள்ளது.

தமிழில் எழுதும் போதும் மேலே உள்ளது போல் நான் நடுவில் ஆங்கில வார்த்தைகளைச் சேர்ப்பதும் தமிழ் மொழியின் சிறப்பைக் குறைக்கும். ஆனால் இப்போது தூய தமிழில் எழுதினால் நம்மை பிரமை பிடித்தவராய்ப் பார்ப்பதுவும் இக்காலத்தில் உண்டு.

பின்குறிப்பு: நேற்று எல்லா டெஸ்ட்டும் முடிச்ச பிறகு ஏற்பட்ட சஞ்சலத்தால் நேற்றிரவிலிருந்து பழைய டெஸ்ட் பேப்பர்ஸ் எடுத்துப் பார்த்து வருகிறேன். என்ன தவறு செய்துள்ளேன்னு பார்க்கும் போது பிடிபட்டவைகளுள் ஒன்று இது. சில்லி மிஸ்டேக்ஸ் பிடிபடவில்லை.

எவ்வாறாயினும் கற்பதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
¡Evitar errores!